SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

மரம் அறுக்கும் இயந்திரத்தால் தாக்குதல்... 2 மாணவிகள் படுகாயம் - 21 வயது இளைஞரின் கொடூர செயல்

ஆந்திரா மாநிலத்தில் அரசுப் பள்ளியில் ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டிருந்த போது, 21 வயது இளைஞர் ஒருவர் அத்துமீறி புகுந்து மரம் அறுக்கும் இயந்திரத்தை வைத்து இரண்டு மாணவிகள் மீது கொடூர தாக்குதல் நடத்தி உள்ளார்.

Written By Sudharsan G
Published: Oct 31, 2026, 02:59 PM IST | Updated: Oct 31, 2026, 03:05 PM IST
Join

ஆந்திர பிரதேசத்தின் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள ரப்டாடு மண்டலத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் இன்று (அக். 31) காலை அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

10ஆம் வகுப்பில் ஆசிரியர் பாடம் எடுத்து வந்தபோது, அத்துமீறி உள்ளே நுழைந்த 21 வயது இளைஞர் ஒருவர் மரம் அறுக்கும் இயந்திரத்தை வைத்து இரண்டு மாணவிகள் மீது தாக்குதல் நடத்தி உள்ளார். அதில் இருவரும் காயமடைந்தனர், அதிலும் ஒரு மாணவி படுகாயம் அடைந்துள்ளார்.

ரப்டாடு கிராமத்தில் உள்ள ஜில்லா பரிஷத் உயர்நிலை பள்ளியில் காலை 10.30 மணியளவில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. காயமடைந்த இருவரும் அனந்தபூர் அரசு பொது மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

படுகாயம் அடைந்த ஒரு மாணவிக்கு அங்கு தீவிர அறுவை சிகிச்சை நடைபெற்று வருகிறது. அவர் விமான ஆம்புலன்ஸ் மூலம் பெங்களூருவில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட உள்ளார்.

குற்றவாளியின் பெயர் ஹமந்த் (எ) டும்மு என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தியதும் அந்த நபர் இயந்திரத்தை அங்கேயே போட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார். தர்மவரம் ரயில் நிலையத்தில் வைத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

ZEENEWS TRENDING STORIES