இந்தியாவை பொறுத்தவரை, நடுத்தர, மேல்தட்டு மக்கள் பலர் கூகுள் பே, போன்பே, BHIM போன்ற டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை செய்ய ஆரம்பித்து விட்டனர். இதனுடன் போட்டி போடும் வகையில் தற்போது Apple நிறுவனமும் Apple pay என்கிற புதிய டிஜிட்டல் பண பரிவர்த்தனைை கொண்டு வந்திருக்கிறது. இது குறித்த முழு தகவலை, இங்கு தெரிந்து கொள்வோம்.
இந்தியாவில், தற்போது முதன்முறையாக Apple Pay அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக, ஐபோன் பயனர்கள், கடைகள், செயலிகள் மற்றும் இணையதளங்களில் பணம் செலுத்துவதற்கான புதிய வசதியை பெறுகிறார்கள். ஆனால், இந்த சேவையில் ஒரு முக்கிய வரம்பும் இருக்கிறது.
ஆரம்பத்தில், விசா மற்றும் மாஸ்டர்கார்ட் நெட்வொர்க்குகளை சேர்ந்த தகுதியான ஆக்ஸிஸ் வங்கி கிரெடிட் கார்டுகளை மட்டுமே, Apple Payவில் சேர்க்க முடியும்.
Apple Payவில் தற்போது ஆக்ஸிஸ் பேங்க் கொடுத்துள்ள விசா மற்றும் மாஸ்டர்கார்ட் கிரெடிட் கார்டுகள் வைத்து மட்டும்தான் பண பரிவர்த்தனைகள் செய்ய முடியும். ஆக்ஸிஸ் வங்கிதான், இந்தியாவிலேயே Apple Pay மூலம் பண பரிவர்த்தனை செய்ய வழிவகை செய்ய முதல் வங்கியாக இருக்கிறது. Apple நிறுவனம், இந்தியாவின் பல்வேறு முக்கிய வங்கிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதில், HDFC, ICICI வங்கிகளும் அடங்கும். ஆனால், இன்னும் இவர்களுடனான கூட்டாண்மை குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.
இப்போதைக்கு Apple Pay ஆக்ஸிஸ் வங்கியின் விசா மற்றும் மாஸ்டர் க்ரெடிட் கார்ட்களை மட்டும்தான் அனுமதிக்கிறது. RuPay கார்டுகள் இப்போதைக்கு இதற்கு அனுமதிக்கவில்லை.
Apple Payயின் ஆரம்பகட்ட இந்திய அறிமுகமானது, யுபிஐ-க்கு மாற்றாக இல்லாமல், கார்ட் அடிப்படையிலானதாக உள்ளது. தகுதியான அட்டைகளைக் கொண்டு பயனர்கள் கடைகளிலும், செயலிகளிலும், ஆன்லைனிலும் பொருட்களை வாங்கலாம் என்று ஆப்பிள் நிறுவனம் கூறுகிறது; ஆனால், ஆரம்பகட்ட ஆப்பிள் பே சேவையில் யுபிஐ இடம்பெறவில்லை என செய்திகள் வெளிவருகின்றன.
Apple Pay தற்போது இந்திய iPhone, iPad மற்றும் Apple watch ஆகியவற்றில் இருக்கும். கூடிய விரைவில், Mac உபகரணத்திலும், இந்த செயலி விரைவில் செயல்படுத்தப்படும் என Apple நிறுவனம் கூறியிருக்கிறது.
இது எப்படி செயல்படும் என்பது அந்தந்த உபகரணங்கள் பொறுத்து மாறும். உதாரணத்திற்கு iPhoneல் தொடுதலில்லாப் பணப்பரிவர்த்தனையை அனுமதிக்கிறது. அதே சமயம் ஆப்பிள் பே-ஐ செயலிகளிலும் இணையதளங்களிலும் பயன்படுத்தலாம்.
தகுதியுள்ள வாடிக்கையாளர்கள், தங்களின் Apple Wallet மூலமாக அவர்களின் கார்டை இணைத்து கொள்ளலாம். அதே சமயத்தில், Axis வங்கியும், தங்களின் வாடிக்கையாளர்கள், தங்கள் நிறுவன கார்டை மொபைல் பேங்கிங் செயலியுடன் இணைக்க வழிவகை செய்துள்ளது.
Wallet-ஐ ஓப்பன் செய்து, 'Add a Card'ஐ tap செய்து Verification Process (சரிபார்த்தல்) முடிக்கவும். பிறகு, அட்டை வழங்குநர்கள், குறுஞ்செய்தி, மின்னஞ்சல், தொலைபேசி அழைப்பு அல்லது வங்கியின் செயலி மூலமான சரிபார்ப்பு போன்ற கூடுதல் சரிபார்ப்புகளைக் கோரலாம் என்று ஆப்பிள் குறிப்பிடுகிறது.
இதில், 'Could Not Add Card’ அல்லது Invalid card போன்ற ஆப்ஷன்கள் காண்பித்தால், Apple, கார்ட் வழங்குநர்களை தொடர்புகொள்ள அறிவுரை வழங்குகிறது.
Apple Pay, இந்தியாவில் இருக்கும் பல்வேறு கடைகள், சிறு தொழில்கள், இணையதளங்கள் உள்ளிட்டவற்றில் உபயோகிக்க அனுமதிக்கிறது. ஏதேனும் கடைகளில் Apple Payஐ உபயோகிக்கும் போது, அங்கு NFC பேமெண்ட், contactless பேமெண்ட்டை அனுமதிக்கிறது. கடைக்காரரும், அந்த பண பரிவர்த்தனையை அனுமதிக்க வேண்டும்.
அறிமுகத்தின்போது, ஆப்பிள் ஸ்டோர் கிளைகள், பிளிங்கிட், Croma, இக்ஸிகோ, Tata 1mg மற்றும் Zomato உள்ளிட்ட வணிகர்களை ஆப்பிள் பட்டியலிடுகிறது. காலப்போக்கில் மேலும் பல வணிகர்களும் செயலிகளும் சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாம் எப்போது டிஜிட்டல் அல்லது, கார்ட் பண பரிவர்த்தனையை செய்ய வேண்டும் என்றாலும் அதற்கு PIN அல்லது OTPஐ கொடுக்க வேண்டும். Apple இது குறித்து தெரிவிக்கும் போது, ஆப்பிள் பே பண பரிவர்த்தனைகளை Face ID, Touch ID அல்லது அந்த கருவியின் உள்ளிட்டு Passcodeஐ போட வேண்டும். இதற்கு PIN அல்லது OTP அதீத தேவை என்பது அவசியம் இல்லை என கூறப்படுகிறது.
நேரில் இதன் மூலம் பணம் செலுத்த வேண்டும் என்றால், iPhone Face ID வைத்து Authenticate செய்து ஸ்கேன் செய்து பணத்தை பரிவர்த்தனை செய்ய வேண்டும்.
Apple இது குறித்து பேசும் போது, வாடிக்கையாளர்களின் Card Number வியாபாரிகளிடம் பணம் செலுத்தும் போது ஷேர் செய்யப்படாது என்றும், அதற்கு பதிலாக, Device Account Number-ஐ சேவைக்கு உபயோகித்துக்கொள்ளும் என்று கூறியிருக்கிறது.
ஒரு பண பரிவர்த்தனை செய்வதற்கு முன்னர் சர்பார்ப்பு தேவைப்படும். இதற்கு அர்த்தம், Card Numberஐ அவ்வளவு எளிதில் யாரிடமும் கொடுத்து விடாது என்பதுதான்.