SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

அச்சத்தில் சிறுமிகள்.. பாதுகாப்பற்ற மாநிலமாக மாறும் தமிழ்நாடு? ஷாக் ரிப்போர்ட்

Child Harassment Explained: தமிழகத்தில் ஜெம் வீரமணி பாலியல் வழக்கு புயலை கிளப்பியுள்ள நிலையில், பாலியல் குற்றங்கள் குறித்த அதிர்ச்சியூட்டும் ரிப்போர்ட் வெளியாகி உள்ளது. இதில் கடந்த 10 ஆண்டுகளில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்குகள் 4 மடங்கு அதிகரித்து காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Written By Umabarkavi K
Published: Sep 28, 2026, 16:43 IST | Updated: Sep 30, 2026, 15:32 IST
Image Credit: Image Source: Chatgpt
Join

சமீப நாட்களாக தலைநகர் டெல்லியில் பெண்கள், சிறுமிகளுக்கு எதிராக வன்முறை சம்பவங்கள் நடந்து வருகிறது. அண்மையில் கூட, 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் புயலை கிளப்பியது. தமிழகத்தில் தொழிலதிபர் ஜெம் வீரமணி 20க்கும் மேற்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் அவர் கைதாகினார். டெல்லி மட்டுமின்றி, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களிலும் பெண்கள், சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு வருகின்றனர். 

பாலியல் வன்கொடுமை 

சிறுமிகளுக்கு எதிராக நடக்கும் வன்முறை தடுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இருந்தாலும் பெண்கள், சிறுமிகளுக்கு நடக்கும் இந்த கொடூர சம்பவங்கள் அவர்களின் பாதுகாப்பு குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது. இந்த நிலையில், தேசிய குற்றப் பதிவுப் பணியகத்தின் (NCRB) ரிப்போர்ட் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, கடந்த 10 ஆண்டுகளில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவது கடுமையாக உயர்ந்துள்ளதாக தரவுகளில் சொல்லப்பட்டுள்ளது.

பாலியல் வன்கொடுமை வழக்குகள் 4 மடங்கு அதிகரிப்பு

தேசிய குற்றப் பதிவுப் பணியகத்தின் (NCRB) வெளியிட்ட தரவுகளின்படி, இந்தியாவில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமிகளின் வவழக்குகள் கடந்த பல ஆண்டுகளாக கணிசமாக அதிகரித்துள்து. 2015ஆம் ஆண்டில் 18 வயதுக்குட்பட்ட சிறுமிகள் 10,934 பேர் பாலியல் வன்கொடுமைக்கு  உள்ளாக்கப்பட்டுள்ளனர. 2024ஆம் ஆண்டு சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்குகள் 43,675 ஆக உயர்ந்துள்ளது. ஆண்டுதோறும் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருவது, நாடு முழுவதும் சிறுமிகள் எதிர்கொள்ளும் பாலியல் வன்முறையின் அளவை எடுத்துக்காட்டுகிறது.

ஆண்டுகள்சிறார் பாலியல் வன்கொடுமை வழக்குகள்
2015 11,000 வழக்குகள் பதிவு
201617,000 வழக்குகள் பதிவு
201822,000 வழக்குகள் பதிவு
202028,000 வழக்குகள் பதிவு
2022 38,000 வழக்குகள் பதிவு
2024  43,000 வழக்குகள் பதிவு

 அதிகரித்து வரும் இந்த எண்ணிக்கை, குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் குறித்த கவலையை எழுப்பியுள்ளது. இந்தியாவில் சிறுமிகளுக்கு எதிராகப் பதிவாகும் பாலியல் குற்றங்களில் பாலியல் வன்கொடுமைகளே மிகவும் அதிக இருப்பதாக தரவுகளில் சொல்லப்பட்டுள்ளது. 2020 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில், 1.83 லட்சம் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் பாலியல் துன்புறுத்தலில் (உடலுறவு அல்லாத குற்றம்) 96,505 சிறுமிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாலியல் துன்புறுத்தலில் 12,807 சிறுமிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆபாசப் படங்களுக்காகக்  2,924 சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்துள்ளனர். சிறார்கள் தொடர்பாக மற்ற பாலியல் குற்ற வழக்குகள் 3,034 பதிவு செய்யப்பட்டுள்ளது.

16 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுமிகள் அதிகம்

பாலியல் வன்கொடுமைகளில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் 16 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் என தரவுகளில் சொல்லப்பட்டுள்ளது. 2020 முதல் 2024 ஆண்டுகளில் 16 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுமிகள் 94,503 பேர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர். 12 முதல் 16 வயதுக்குட்பட்ட 70,442 சிறுமிகளும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர். 

6 வயதுக்குட்பட்ட 3,600 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர். 6 முதல் 12 வயதுக்குட்பட்ட சிறுமிகள் 14,827 பேர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர் என தரவுகளில் சொல்லப்பட்டுள்ளது. பாலியல் வன்முறையை பொறுத்தவரை, பதின்பருவத்தில் நுழையும் பெண்களே அதிகம் பாதிக்கப்படுவது இந்த தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுமிகளுக்கு தெரிந்தவர்களால் ஆபத்து

பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு தெரிந்தவர்களே அதிகம் அவர்களை பாலியல் வன்கொடுமை செய்வதாக தரவுகளில் கூறப்பட்டுள்ளது. 2024-ஆம் ஆண்டில், 97 சதவீத சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்குகளில், பாதிக்கப்பட்டவருக்குத் தெரிந்தவர்களே சம்பந்தப்பட்டு இருக்கின்றனர். 

குற்றம் சாட்டப்பட்டவர்களில் பெரும்பாலானோர் நண்பர்கள், திருமணம் செய்து வைப்பதாகக் கூறி இணைந்த நபர்கள், உறவினர்கள், அண்டை வீட்டார், குடும்ப உறுப்பினர்கள் இதில் அடங்குவர். குறைவான வழக்குகளில் மட்டுமே முன்பின் தெரியாதவர்கள் சம்பந்தப்பட்டிருக்கின்றனர்.

நீதி கிடைப்பதில் தாமதம்

சிறுமிகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை வழக்குகள் அதிகரித்துக் கொண்டே இருந்தாலும், அந்த வழக்குகளுக்கு நீதி கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. 2024-ஆம் ஆண்டில், சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்குகளில் தண்டனை விகிதம் 30 சதவீதமாக இருந்தது. அந்த ஆண்டில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்குகள் 86 சதவீதமாக இருந்தன. 

போக்சோ வழக்குகளுக்கு விரைவு நீதிமன்றங்கள் இருந்தபோதிலும், பல பாதிக்கப்பட்டவர்களும் அவர்களது குடும்பத்தினரும் நீதிக்காக பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டியது இருப்பதை புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டியுள்ளது.

2015-2024ஆம் ஆண்டுகளில் சிறுமிகள் பாலியல் வழக்குகளில் தண்டனை விகிதம் 32.3 சதவீதமும், தண்டனை கிடைக்காதது 67.7 சதவீதமும், நிலுவையில் உள்ள வழக்குகள் 89.5 சதவீதம், தீர்வு காணப்படாத வழக்குகள் 10.5 சதவீதமாகவும் உள்ளது.

சிறுமிகளின் பாதுகாப்பற்ற மாநிலம்

இந்தியாவில் பாலியல் குற்ற விகிதங்கள் அதிகரித்து காணப்படும் நிலையில், சிறுமிகள் அதிகம் பாதிக்கப்படும் மற்றும் குற்ற விகிதங்கள் அதிகம் காணப்படும் மாநிலங்கள் பற்றிய தரவுகள் வெளியாகி உள்ளது. அதன்படி, 2024ஆம் ஆண்டில் மேகாலயா மாநிலத்தில் ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 20.4 பாலியல் குற்ற வழக்குகள் பதிவாகி முதலிடத்தில் உள்ளது. 

அடுத்ததாக ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு சிக்கிம் 16.4 வழக்குகளும், மிசோரம் 16.1 வழக்குகளும், தமிழ்நாடு 12.3 வழக்குகளும் பதிவாகி உள்ளன.  அசாம் மாநிலம் 13.6 வழக்குளும்,  கர்நாடகா 9.7 வழக்களும், கேரளா 9.8 வழக்குகளும், மகாராஷ்டிரா 7.7 வழக்குகளும், டெல்லியில் 9.7 வழக்குகளும், உத்தர பிரதேசத்தில் 3.1 வழக்குகளும் பதிவாகி உள்ளதாக தரவுகளில் சொல்லப்பட்டுள்ளது. 

அதிக குற்ற விகிதங்களைக் கொண்ட மாநிலங்களில் பல வடகிழக்கு மாநிலங்கள்இடம்பெற்றிருந்த நிலையில், உத்தரப் பிரதேசம் (3.1), பீகார் (1.7) மற்றும் ராஜஸ்தான் (4.0) போன்ற பெரிய மாநிலங்கள் குறைந்த விகிதங்களைப் பதிவு செய்துள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படியாக சிறுமிகள் தினந்தோறும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு குற்றச்சாட்டப்பட்டவர்கள் விரைவான கடுமையாக தண்டனை வழங்க வேண்டும் என்றும் சிறுவயதில் இருந்தே பாலியல் கல்வி (Sex Education) கற்றுத்தர வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

ZEENEWS TRENDING STORIES