• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /கோயம்புத்தூர்
  • /“ஜோசப் விஜய் அரசு இந்து விரோத அரசு”.. வானதி சீனிவாசன் கடும் விமர்சனம்!

“ஜோசப் விஜய் அரசு இந்து விரோத அரசு”.. வானதி சீனிவாசன் கடும் விமர்சனம்!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக வெற்றிக் கழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளதற்கு பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Written ByR Balaji
Published: Nov 23, 2026, 20:05 IST|Updated: Nov 23, 2026, 20:10 IST
joinshare
“ஜோசப் விஜய் அரசு இந்து விரோத அரசு”.. வானதி சீனிவாசன் கடும் விமர்சனம்!

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
“ஜோசப் விஜய் அரசு இந்து விரோத அரசு”.. வானதி சீனிவாசன் கடும் விமர்சனம்!

“ஜோசப் விஜய் அரசு இந்து விரோத அரசு”.. வானதி சீனிவாசன் கடும் விமர்சனம்!

2

டிசம்பர் 2-ல் புதன் பெயர்ச்சி.. பண மழையில் நனையப்போகும் 3 அதிர்ஷ்ட ராசிகள்!

3

WhatsApp Web பயன்படுத்துபவர்களா நீங்கள்? அப்போ உங்களுக்குத்தான் இந்த எச்சரிக்கை!

4

வள்ளல் சி.கந்தசாமி நாயுடு வாழ்க்கை வரலாறு படத்தின் ஷூட்டிங் தொடக்கம்! கல்விக்காக சொத்தை எழுதி வைத்தவர்..

5

Explained | பெயர் மாறும் “மேற்கு வங்கம்” ஒரு மாநிலத்தின் பெயர் எவ்வாறு மாற்றப்படுகிறது..?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைச் செயல்படுத்தாமல், முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்திருப்பதை பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (X) பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்குத் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது, சீராய்வு மனு என்பது 'ஜோசப் விஜய் அரசு: இந்து விரோத அரசு' என்பதற்கான சுய ஒப்புதல் சான்று

"திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில், வரும் 24ம் தேதி, கார்த்திகை தீபத்தன்று, தீபம் ஏற்ற வேண்டும்" என்று, இரண்டு நீதிபதிகளைக் கொண்ட, உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூண் அமைந்துள்ள இடம், கோவிலுக்குச் சொந்தம் என்பது ஏற்கனவே நிரூபிக்கப்பட்ட ஒன்று. எனவே அங்கு, சில மணி நேரம், தீபம் ஏற்றுவதால் யாருக்கும் எந்த பிரச்னையும் ஏற்படப் போவதில்லை. எனவே, உச்ச நீதிமன்ற தீர்ப்பை முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு, செயல்படுத்தி இருக்க வேண்டும்.

ஆனால், திமுகவின் ஹிந்து விரோத போக்கை அப்படியே பின்பற்றி வரும் ஜோசப் விஜய் அரசு, உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த சீராய்வு மனு என்பது, "ஜோசப் விஜய் அரசு, இந்து விரோத அரசு" என்பதற்கான சுய ஒப்புதல் சான்றிதழ். இந்துக்கள் இளிச்சவாயர்கள். அவர்களை எப்படியும் ஏமாற்றி விடலாம் என்று நினைத்த திமுகவைப் போல, தவெகவும் செயல்படுகிறது என்பது மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆட்சி அதிகாரம் இருக்கிறது என்பதற்காக, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், தீபத்தூணில் தீபம் ஏற்றாமல் திமுக அரசு அழிச்சாட்டியம் செய்தது. தீர்ப்பளித்த நீதிபதியையே பதவி நீக்கம் செய்ய நோட்டீஸ் கொடுத்தது. அந்த திமுகவுக்கு என்ன கதி ஏற்பட்டது என்பதை, முதலமைச்சர் ஜோசப் விஜய் யோசித்துப் பார்க்க வேண்டும். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கான நடவடிக்கைகளை ஜோசப் விஜய் அரசு உடனடியாக தொடங்க வேண்டும். இல்லையெனில், முருகப்பெருமான் தரும் தண்டனையில் இருந்து யாரும் தப்ப முடியாது. இவ்வாறு தெரிவித்துள்ளார். 
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu