SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

Explained: நாட்டின் தலையெழுத்தை மாற்றிய இடம்.. 300 ஆண்டுகால வரலாறு.. இதுதான் ஜந்தர் மந்தரின் கதை!

Jantar Mantar Explained: தலைநகர் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் ஜனநாயக குரல்களும், மக்கள் போராட்டங்களும் எதிரொலிக்கும் மிக முக்கியமான மையப் பகுதியாக இருக்கிறது. இப்போது ஜந்தர் மந்தரில் போராட்ட தளங்களின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், ஜந்தர் பந்தர் பற்றிய வரலாற்றை இந்த தொகுப்பில் பார்ப்போம்.

Written By Umabarkavi K
Published: Oct 13, 2026, 05:42 PM IST | Updated: Oct 13, 2026, 07:23 PM IST
Join

Jantar Mantar Explained: டெல்லி ஜந்தர் மந்தர் பகுதி கடந்த சில மாதங்களாக அரசியல் தகளத்தில் அதிகம் அடிப்படும் பெயராக மாறிவிட்டது. கடந்த ஜூலை மாதம் நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக காக்ரோஜ் ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள் பேராட்டத்தை நடத்தியது ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியது. இதனை தொடர்ந்து, தற்போது SIR தொடர்பாக ஜந்தர் மந்தரில் சிஜேபி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

ஜந்தர் மந்தர்

எஸ்ஐஆர் விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தனிச்சையாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்து பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என நாடு முழுவதும் சிஜேபி மாணவர்கள் போராட்டத்தை கையில் எடுத்தனர். அந்த வகையில், ஜந்தர் மந்தரிலும் போராட்டம் நடத்திய நிலையில், போராட்டக்காரர்களை டெல்லி போலீஸ் கைது செய்தது.

மேலும், பல போராட்டங்களின் வெற்றிக்கு விதை போட்ட ஜந்தர் மந்தர் பகுதியை போராட்டம் நடத்தும் பட்டியலில் இருந்து டெல்லி போலீஸ் நீக்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜந்தர் மந்தர் பகுதியில் நடந்த பல போராட்டங்கள் திரும்புமுனையாக மாறியிருப்பது வரலாற்றிலேயே இருக்கிறது.

இப்படிப்பட்ட முக்கியமான பகுதியை பேராட்டம் நடத்தும் பட்டியலில் இருந்து டெல்லி போலீஸ் நீக்கியிருக்கிறது. எனவே, ஜந்தர் பந்தர் யாரால் கட்டப்பட்டது? ஜந்தர் மந்தரின் வரலாறு, அது எவ்வாறு தலைநகரின் மிக முக்கியமான போராட்டத் தளங்களில் ஒன்றாக உருவெடுத்தது, மற்றும் சமீபத்திய ஆண்டுகளில் அங்கு நடைபெற்ற சில முக்கிய ஆர்ப்பாட்டங்கள் ஆகியவற்றை இந்த தொகுப்பில் பார்ப்போம்.

18ஆம் நூற்றாண்டு வரலாறு

தலைநகர் டெல்லியில் உள்ள கன்னாட் பிளேஸ் அருகே நாடாளுமன்றம் இருக்கும் தெருவில் அமைந்துள்ளது ஜந்தர் மந்தர். முகலாயர் காலத்தில் 1724-ல் கட்டப்பட்ட ஜந்தர் மந்தர் கட்டப்பட்டது. வானியல் ஆய்வுகளை எளிதாக்கும் நோக்கில், முகலாயப் பேரரசர் முகமது ஷாவின் ஆட்சிக்காலத்தில் மகாராஜா சவாய் ஜெய் சிங்  என்பவரால் கட்டப்பட்டது. ஜெய்ப்பூரின் மகாராஜா சவாய் ஜெய் சிங் 1724ல் கட்டப்பட்டது. இது 300 ஆண்டுகள் பழமையான வானியல் ஆய்வகம், அறிவியல், கணிதம் மற்றும் கட்டிடக்கலை ஆகியவற்றின் சங்கமத்தை எடுத்துக்காட்டுகிறது.

செங்கல், சுண்ணாம்பு பூச்சால் கட்டப்பட்ட இந்த வானிலை ஆய்வகத்தில் சம்ராட் யந்திரா, ராம் யந்திரா, ஜய் பிரகாஷ் யந்திரா மற்றும் மிஷ்ரா யந்திரா ஆகிய நான்கு முக்கிய கருவிகள் இடம்பெற்றுள்ளன. சூரியன், சந்திரன் பிற கோள்களின் இயக்கங்கள் மற்றும அவற்றின் இருப்பிடங்களைக் கணிப்பதும், அதுகுறித்த வானியல் அட்டவணைகளை உருவாக்குவதுமே இந்த ஆய்வகத்தின் முதன்மை நோக்கமாகும்.  இங்குள்ள நான்கு முக்கிய கருவிகளுடன் சேர்த்து, நேரம் அளவிடவும், வானிலை முன்னறிவிப்பு செய்ய, கோள்களின் இயக்கங்களைக் கண்காணிக்க மற்றும் விண்வெளி உயரங்களைக் கண்டறிய 14 வடிவியல் சாதனங்கள் இந்த வளாகத்தில் உள்ளன.

ஜந்தர் மந்தரை உருவாக்கியவரான மகாராஜா ஜெய் சிங், வானியல் மற்றும் கணிதத்தில் ஒரு சிறந்த அறிஞராக இருந்தார் என்று நம்பப்படுகிறது. வானியல் அட்டவணைகளை மேம்படுத்துவது, கோள்களின் இயக்கங்களையும் கிரகணங்களையும் கணிப்பது, மேலும் துல்லியமான ஒரு நாட்காட்டியை உருவாக்குவது ஆகியவையே ஜெய் சிங்கின் நோக்கங்களாக இருந்தன

ஜந்தர் மந்தர் பெயர் காரணம்

மேலும், 'கருவிகள்' மற்றும் 'கணக்கீடுகள்' என்ற சொற்களின் அடிப்படையிலேயே இதற்கு "ஜந்தர் மந்தர்" என்ற பெயர் சூட்டப்பட்டது. ஜந்தர் என்றால் கருவி. மந்தர் என்றால் கணக்கீடு என்பது பொளாகும். அதாவது, கணக்கீடு செய்யும் கருவி என்ற அர்த்தத்தில் பெயர் வைக்கப்பட்டது. வெறும் கண்களால் விண் பொருட்களை ஆய்வு செய்யும் 5 ஆய்வகங்களில் இதுவும் ஒன்றாகும். ஜெய்ப்பூர், உஜ்ஜைன், வாரணாசி, மதுராவில் உள்ளது. தற்போது இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.  தற்போது வானியல் கணக்கீடுகளுக்குப் பதிலாக, மக்களின் குரலாகவும் ஜந்தர் மந்தர் ஜனநாயகக் குரலாகவும் அறியப்படுகிறது.

ஜந்தர் மந்தர் போராட்ட களமாக மாறியது எப்படி?

ஜந்தர் மந்தருக்கு முன்பு, டெல்லியில் ராஜ்பாத் (தற்போது கர்த்தவ்யா பாத்) இருந்த இந்தியா கேட் அருகே போட் கிளப் பகுதி போராட்ட களமாக இருந்தது. இந்தியாவின் மிக முக்கியமான அரசியல் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டக் களங்களில் ஒன்றாக இருந்துள்ளது. நாட்டின் மையப்பகுதியில், நாடாளுமன்றம் மற்றும் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு மிக அருகில் அமைந்துள்ளதால், பல்வேறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போராட்டங்கள் மற்றும் மக்கள் எழுச்சிகளுக்கு இந்த இடம் சாட்சியாக இருந்துள்ளது.

2022 ஆம் ஆண்டில், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ராஜ்பாத் பகுதி முற்றிலும் மறுசீரமைக்கப்பட்டு, அதன் பெயர் 'கர்த்தவ்யா பாதை' என மாற்றப்பட்டது. 1960களில் இருந்து 1980 வரை மாபெரும் போராட்ட நடத்தும் இடமாக இருந்தது. 1993-ஆம் ஆண்டளவில், பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதிகரித்து வந்த அரசியல் பதட்டங்களுக்கு மத்தியில், ராஜ்பாத்தில் போராட்டம் நடத்த கூடாது என அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து, ஜந்தர் மந்தர் போராட்டம் நடத்தும் இடமாக அறிவிக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை ஜந்தர் பந்தர் போராட்ட களமாக இருந்தது.

ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டங்கள்

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.

ZEENEWS TRENDING STORIES