• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /இந்தியா
  • /Explained : ‘ராம் லீலா’ மைதானத்திலும் போராட முடியாது! ஜந்தர் மந்தரை தொடர்ந்து புது இடத்துக்கும் சவால்..

Explained : ‘ராம் லீலா’ மைதானத்திலும் போராட முடியாது! ஜந்தர் மந்தரை தொடர்ந்து புது இடத்துக்கும் சவால்..

ஜந்தர் மந்தரை தொடர்ந்து, ராம் லீலா மைதானம் போராட்ட களமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த சமயத்தில், அந்த மைதானத்திலும் போராட்டம் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Written ByYuvashree M
Published: Oct 13, 2026, 06:50 PM IST|Updated: Oct 13, 2026, 06:58 PM IST
joinshare
Explained : ‘ராம் லீலா’ மைதானத்திலும் போராட முடியாது! ஜந்தர் மந்தரை தொடர்ந்து புது இடத்துக்கும் சவால்..
Image Credit: RamLeela Maidan Difficulties | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
Explained : ‘ராம் லீலா’ மைதானத்திலும் போராட முடியாது! ஜந்தர் மந்தரை தொடர்ந்து புது இடத்துக்கும் சவால்..

Explained : ‘ராம் லீலா’ மைதானத்திலும் போராட முடியாது! ஜந்தர் மந்தரை தொடர்ந்து புது இடத்துக்கும் சவால்..

2

தவெக ஆட்சியில் தமிழ்நாடு முதலிடம்... CM விஜய்யை வறுத்தெடுத்த ஸ்டாலின் - என்ன மேட்டர்?

3

மத்திய அமைச்சர் எல்.முருகன் ராஜினாமா... பிரதமர் மோடிக்கு கடிதம் - திடீர் அறிவிப்பு

4

Explained: நாட்டின் தலையெழுத்தை மாற்றிய இடம்.. 300 ஆண்டுகால வரலாறு.. இதுதான் ஜந்தர் மந்தரின் கதை!

5

ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு: கை நிறைய சம்பளம்! விண்ணப்பிப்பது எப்படி?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

தேர்தல் தலைமை அதிகாரியான ஞானேஷ் குமார், பதவி விலகக்கோரி பல்லாயிரக்கணக்கானோர் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்தனர். சமீபத்தில் பகுதியை, அதிகாரப்பூர்வமான போராட்ட களங்களின் பட்டியலில் இருந்து நீக்கி, அங்கு போராட்டம் நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் டெல்லி காவல்துறை தடை விதித்தது. இதையடுத்து, அதற்கு மாற்றாக மூன்று தளங்கள் போராட்டத்திற்கான தளங்களாக அறிவிக்கப்பட்டிருந்தன. ஆனால், அவற்றில் முக்கியமானதாக கருதப்படும் ராம் லீலா மைதானத்திலும் போராட்டம் நடத்த முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

ஜந்தர் மந்தர்- இனி போராட்டக்களம் கிடையாது!

SIR விவகாரத்தில், தலைமை தேர்தல் ஆணையரான ஞானேஷ் குமார், தனிச்சையாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத்தொடர்ந்து, ஞானேஷ் குமார் கண்டிப்பாக பதவி விலக வேண்டுமென நாடு முழுவதும், காக்ரோச் ஜனதா கட்சி எனப்படும் CJP அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுடன், காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், அனைத்திந்திய மாணவர் அமைப்பினர் ஆகியோர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டகால சமயத்தில், டெல்லி போலீசார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே உள்பட பல ஆயிரம் பேரை கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிலும் குறிப்பாக, சமீபத்தில் ஜந்தர் மந்தர் மைதானத்தை அதிகாரப்பூர்வமாக போராட்டக்களத்திற்கான பட்டியலில் இருந்து மத்திய அரசு நீக்கியிருக்கிறது.

இதே ஜந்தர் மந்தர் மைதானத்தில்தான் சில மாதங்களுக்கு முன்பாக நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான போராட்டம் நடைப்பெற்றது. அந்த போராட்டம் வெற்றி பெற்றதற்கு, இந்த தளமும் ஒரு காரணம். 18ஆம் நூற்றாண்டு முதல் 2026வரை அங்கு மாபெரும் போராட்டங்கள் நடைப்பெற்ற நிலையில், மத்திய அரசு அதை போராட்டத்தளங்களின் பட்டியலில் இருந்து நீக்கியிருப்பது நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

3 மாற்று இடங்கள் என்ன?

ஜந்தர் மந்தரில், இனி ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டதை அடுத்து, அதற்கு பதிலாக போராட்டங்களை நடத்திக்கொள்ள டெல்லி காவல் துறையினரால் 3 புதிய மாற்று இடங்கள் அறிவிக்கப்பட்டன. அவை:

  • ராம்லீலா மைதானம் (Central Delhi)
  • புராரி மைதான (North Delhi)
  • சிபிடி மைதானம் (East Delhi)

ஆகிய தளங்கள் ஆகும். ஆனால், இதிலும் ராம்லீலா மைதானத்தில் போராட்டம் நடத்துவதில் பல்வேறு சிரமங்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன.

மேலும் படிக்க | 2026-27 நிதி ஆண்டிற்கான இந்தியாவின் GDP கணிப்பை உயர்த்திய IMF: சீனாவின் வளர்ச்சி வேகத்தில் வீழ்ச்சி

ராம் லீலா மைதானத்தில் போராட்டம் நடத்துவதில் என்ன சிக்கல்?

ராம்லீலா மைதானத்தில் போராட்டம் அல்லது கூட்டம் நடத்த வேண்டுமென்றால், அதற்கு முன்பதிவு செய்ய வேண்டும். இதை வைத்து பார்க்கும் போது, இந்த மைதானத்தில் வரும் இரண்டரை மாதங்களுக்கு போராட்டத்தை நடத்த தேதிகளே இல்லை. வரும் டிசம்பர் 29, 30,31 உள்ளிட்ட தேதிகள் மட்டுமே முன்பதிவிற்காக காத்திருக்கும் தேதிகள் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ராம்லீலா மைதானம் மொத்தம் 12 ஏக்கர் பரப்பளவை கொண்டது. இதில், கிட்டத்தட்ட 50,000 பேர் வரை இருக்க முடியும். இதற்கான முன்பதிவு கட்டணம், ஒரு நாளைக்கு ரூ.50,000 ஆக இருக்கிறது. அதே போல, பாதுகாப்பு வைப்பு (Security Deposit) எனும் பெயரில், ரூ.50,000 கொடுக்க வேண்டும். இது, பின்னர் திரும்ப தரப்படும். மொத்தமாக வரியுடன் சேர்த்து இந்த தளத்திற்கு கட்ட வேண்டிய தொகை ஒரு நாளைக்கு ரூ.1.21 லட்சமாக இருக்கிறது.

அதே சமயத்தில், இந்த தளத்தில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் போராட்டம் நடத்தலாம் என்றும், ஆனால் அங்கு 150 பேர் மட்டுமே இருக்க முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

டெல்லி மாநகராட்சியின் தோட்டக்கலைத் துறை மூலமாகவே இந்த மைதானம் முன்பதிவு செய்யப்படுகிறது; அத்துறையே இதற்கான அனுமதியை வழங்குகிறது. மாநகராட்சி நிர்வாகம் விண்ணப்பத்திற்கு ஒப்புதல் அளிப்பதற்கு முன்னதாக, தில்லி காவல்துறையிடமிருந்து 'தடையின்மைச் சான்றிதழ்' பெறுவது கட்டாயமாகும்.

ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி மாநில தலைவர் சௌரப் பரத்வஜ் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அதில், அரசு தன்னுடைய குடிமக்களிடம் மீண்டும் ஒரு மோசடியை செய்திருப்பதாகவும், ராம்லீலா மைதானம் தற்போது இரண்டு ராம்லீலா நிகழ்ச்சிகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாக கூறியிருக்கிறார். ‘இங்கு எப்படி ஒரு போராட்டத்தை நடத்த முடியும்?’ எனும் குழப்பத்தை அவர்கள் உருவாக்க விரும்புகிறார்களா? என்ற கேள்வியையும் அவர் முன்வைக்கிறார்.

கட்டணத்தில் பிரச்சனை!

போராட்டம் நடத்துபவர்களின் கூற்றுபடி, ஒரு அமைப்பு ராம்லீலா மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டால், அதற்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டியதாக இருப்பதாகவும், இதுவே ஜந்தர் மந்தரில் கட்டணம் செலுத்த வேண்டாம் என்றும் கூறுகின்றனர்.

ஆனால், அதிகாரிகளோ கட்டணம் ஏதுமின்றி போராட்டத்திற்காக இந்த இடம் ஒதுக்கப்பட்டால், உள்ளாட்சி அமைப்புக்கு ஒரு நாளைக்கு குறைந்தது, ரூ.50,000க்கும் அதிகமான வருவாய் இழப்பு ஏற்படும் என தெரிவிக்கின்றனர்.

வரும் வாரங்களில் தசரா மற்றும் தீபாவளி போன்ற பண்டிகைகள் வரவிருக்கும் நிலையில், பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் கொண்டாட்டங்களுக்காக இந்த மைதானம் முன்பதிவு செய்யப்படுள்ளதாக உள்ளாட்சி அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

அதிகாரிகளின் தகவலின்படி, இந்த மைதானம் பரபரப்பான வணிக பகுதியில் அமைந்திருப்பதாக கூறுகின்றனர். இந்த மைதானம் அருகே மூன்று மருத்துவமனைகளும், நகராட்சி அமைப்புகளின் தலைமையகங்களும் இருக்கிறது.

இங்கு நடைபெறும் பெரிய நிகழ்ச்சிகள் அப்பகுதியின் சாலைகளில் எப்போதும் கடும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துகின்றன என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ராம் லீலா மைதானத்தின் வரலாறு:

  • ராம் லீலா மைதானத்தின் வரலாரு, நீருடன் தொடர்புடையதாக இருக்கிறது. 1930 வரி, இது ஒரு குளமாக இருந்ததாம். பின்னர், ராம்லீலா நிகழ்ச்சியை அன்க்கு நடத்துவதற்காக து நிரப்பப்பட சமப்படுத்தப்பட்டிருக்கிறது. 1932ல் தொடங்கிய அந்த மரபு, இப்போதும் தொடர்கிறது. இதனால்தான் இந்த மைதானத்திற்கு ‘ராம்லீலா’ என்று பெயரே வந்ததாம்.
  • சுதந்திரத்திற்கு பின், 1951ல் பாகிஸ்தானிலிருந்து வந்த அகதிகளுக்கு வாழ்வாதாரம் அளிக்கும் வகையில் இப்பகுதி மேம்படுத்தப்பட்டது. காலப்போக்கில், இது நாட்டின் அரசியல் களமாக மாறிவிட்டது.
  • இங்குதான், பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு 1956 மற்றும் 57ஆம் ஆண்டுகளில் இந்த மைதானத்தில் நடைப்பெற்ற பொதுக்கூட்டங்களில் உரையாற்றினார். இரண்டாம் எலிசபெத் மகாராணி இந்தியாவிற்கு வந்திருந்தார். அவரை கௌரவிக்கும் வகையில், 1962ல் இங்கு நிரந்தர மேடை அமைக்கப்பட்டிருக்கிறது.
  • 1971ல் பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றிக்கு பின் இந்திரா காந்தி இங்கு நடைப்பெற்றா பேரணியில் உரையாற்றினார். 2013ல் அரவிந்த் கெஜ்ரிவாலும் இதே இடத்தில்தான் முதல்வராக பதவியேற்றார்.

மேலும் படிக்க | Explained: 300 ஆண்டுகள் வரலாறு.. ஜந்தர் மந்தர் போராட்ட களமாக மாறியது எப்படி?

Add Zee News as a Preferred Source
TAGS:
Explainer