• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /தவெக ஆட்சியில் தமிழ்நாடு முதலிடம்... CM விஜய்யை வறுத்தெடுத்த ஸ்டாலின் - என்ன மேட்டர்?

தவெக ஆட்சியில் தமிழ்நாடு முதலிடம்... CM விஜய்யை வறுத்தெடுத்த ஸ்டாலின் - என்ன மேட்டர்?

தவெக ஆட்சி அமைந்த நான்கு மாதங்களில் பணவீக்கத்திலும், விலைவாசி உயர்விலும் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளதாக மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். மேலும், அதிக விலையில் மின்சார கொள்முதல், அதிமுக எம்எல்ஏக்கள் குறித்து செங்கோட்டையன் கருத்து உள்ளிட்ட தவெக அரசின் மீதான பல்வேறு விமர்சனங்களை மு.க. ஸ்டாலின் முன்வைத்துள்ளார்.

Written BySudharsan G
Published: Oct 13, 2026, 06:39 PM IST|Updated: Oct 13, 2026, 06:53 PM IST
joinshare
தவெக ஆட்சியில் தமிழ்நாடு முதலிடம்... CM விஜய்யை வறுத்தெடுத்த ஸ்டாலின் - என்ன மேட்டர்?
Image Credit: AI Generated Image : ChatGPT

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
Explained : ‘ராம் லீலா’ மைதானத்திலும் போராட முடியாது! ஜந்தர் மந்தரை தொடர்ந்து புது இடத்துக்கும் சவால்..

Explained : ‘ராம் லீலா’ மைதானத்திலும் போராட முடியாது! ஜந்தர் மந்தரை தொடர்ந்து புது இடத்துக்கும் சவால்..

2

தவெக ஆட்சியில் தமிழ்நாடு முதலிடம்... CM விஜய்யை வறுத்தெடுத்த ஸ்டாலின் - என்ன மேட்டர்?

3

மத்திய அமைச்சர் எல்.முருகன் ராஜினாமா... பிரதமர் மோடிக்கு கடிதம் - திடீர் அறிவிப்பு

4

Explained: நாட்டின் தலையெழுத்தை மாற்றிய இடம்.. 300 ஆண்டுகால வரலாறு.. இதுதான் ஜந்தர் மந்தரின் கதை!

5

ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு: கை நிறைய சம்பளம்! விண்ணப்பிப்பது எப்படி?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

MK Stalin attacks TVK Government: பணவீக்கத்திலும் விலைவாசி உயர்விலும் தவெக ஆட்சி அமைந்த நான்கே மாதங்களில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளதாக முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கடுமையாக சாடி உள்ளார்.

மு.க.ஸ்டாலின் அவரது X பதிவில், "இவர்களுக்கு (ஆளும் தவெக) அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுக்குள் வைக்கத் தெரியவில்லை என்றால் கூட பரவாயில்லை. விலைவாசி உயர்வே ஏற்படவில்லை என உணவுத்துறை அமைச்சர் சொல்லும் வடிகட்டிய பொய்யைக் கேட்டுத்தான் ஏழை மக்கள் இன்னும் எரிச்சலில் இருக்கிறார்கள்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க | ஒரு யூனிட் மின்சாரத்திற்கு ரூ.37... தவெக அரசு ஏன் இவ்வளவு விலை கொடுக்கிறது? Explained

யூனிட்டுக்கு 35 ரூபாய் கொடுத்து...

மின்வெட்டு குறித்தும் அனைத்து எதிர்க்கட்சிகளும் கடந்த பல மாதங்களாக எச்சரித்து வந்தோம் என்றும்; அப்போதே சுதாரித்து உரிய நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் அப்போது மின்துறை அமைச்சர் பஞ்சாபைக் காட்ட, முதலமைச்சரோ லண்டன் பறந்துவிட்டார் என்றும் இப்போது, கடைசி நிமிடத்தில் கதவைத் தட்டி, யூனிட்டுக்கு 35 ரூபாய் கொடுத்து வெளிச்சந்தையில் வாங்கப் போகிறார்களாம் என்றும் முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார் ஆகியோரை ஸ்டாலின் சாடி உள்ளார்.

இது யார் வீட்டுக் காசு சார்?

திமுக ஆட்சியில் குறைந்த விலைக்கு வாங்கிய ஒப்பந்தங்களை ரத்து செய்துவிட்டு, இந்தியாவிலேயே இதுவரை எந்த மாநிலமும் வாங்காத அதிக விலைக்கு வாங்குவதுதான் இவர்கள் கொண்டு வந்துள்ள மாற்றமா என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். இது யார் வீட்டுக் காசு சார்? என முதல்வர் விஜய் பாணியிலேயே அவரை நோக்கி ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

த.வெ.க. ஆட்சி அமைந்த நான்கே மாதங்களில் தமிழ்நாடு முதலிடம்! எதில் தெரியுமா? பணவீக்கத்திலும் விலைவாசி உயர்விலும்! இவர்களுக்கு, அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுக்குள் வைக்கத் தெரியவில்லை என்றால் கூட பரவாயில்லை. விலைவாசி உயர்வே ஏற்படவில்லை என உணவுத்துறை அமைச்சர் சொல்லும் வடிகட்டிய பொய்யைக் கேட்டுத்தான் ஏழை மக்கள் இன்னும் எரிச்சலில் இருக்கிறார்கள். மின்வெட்டு குறித்தும் அனைத்து எதிர்க்கட்சிகளும் கடந்த பல மாதங்களாக எச்சரித்து வந்தோம். அப்போதே சுதாரித்து உரிய நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். மின்துறை அமைச்சர் பஞ்சாபைக் காட்ட, முதலமைச்சரோ இலண்டன் பறந்துவிட்டார். இப்போது, கடைசி நிமிடத்தில் கதவைத் தட்டி, யூனிட்டுக்கு 35 ரூபாய் கொடுத்து வெளிச்சந்தையில் வாங்கப் போகிறார்களாம். கழக ஆட்சியில் குறைந்த விலைக்கு வாங்கிய ஒப்பந்தங்களை இரத்து செய்துவிட்டு, இந்தியாவிலேயே இதுவரை எந்த மாநிலமும் வாங்காத அதிக விலைக்கு வாங்குவதுதான் இவர்கள் கொண்டு வந்துள்ள மாற்றமா? இது யார் வீட்டுக் காசு சார்? அ.தி.மு.க.வில் இருந்து மேலும் 15 பேரை purchase செய்யப் போகிறோம் என்று வேறு வெட்கமே இல்லாமல் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறீர்களே? அதற்குப் பணம் போதாமல்தான் மின்சாரம் வாங்குவதில் ஊழல் நடக்கிறதா என மக்கள் மனதிலும் கேள்விகள் எழத் தொடங்கிவிட்டன. குறுவை பொய்த்த நிலையில், டெல்டா விவசாயிகளின் பேச்சைக் கேட்காமல், ஜோசியரின் பேச்சைக் கேட்டு மேட்டூர் அணையையும் தவறான தேதியில் திறந்து வைத்தார்கள். 5 கோடி ரூபாய் செலவில் சாலையோரத் தடுப்புகள் அமைத்து CM ரீல்ஸ் எடுத்ததைத் தவிர அதனால் விளைந்த பயன் என்ன? இப்போது சம்பா சாகுபடியும் சாத்தியமாகுமா எனத் தெரியாமல் கடைமடை விவசாயிகள் நீரின்றிப் பரிதவிக்கிறார்கள். இப்படி, முன்யோசனையும் இல்லாத மூளையும் இல்லாத ஒரு மூடர் கூட்டத்திடம் சிக்கி, நம் கண்முன்னே தமிழ்நாடு சீரழிந்து கொண்டிருக்கிறது. வாலில் தீப்பற்றிய குரங்குக் கூட்டம் வனமெல்லாம் தாவி, கொளுத்தி விடுவதைப் போலத்தான் த.வெ.க. அரசின் அமைச்சரவை அமைந்திருக்கிறது. இவர்களை வழிநடத்த வேண்டிய முதலமைச்சரோ, உடுப்பி, இலண்டன், விஜயவாடா என மாதம் ஒரு ஊருக்குச் சென்று விழாவைச் சிறப்பிப்பதிலேயே குறியாக இருக்கிறார். மொத்தத்தில், ஆட்சி நிர்வாகத்தின் அடிப்படை கூட அறியாத இந்த அறிவிலிகளின் அலட்சியத்தாலும் அழிச்சாட்டியத்தாலும் எதிர்வரும் மாதங்களைத் தமிழ்நாட்டு மக்கள் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்ற அச்சம்தான் மேலோங்குகிறது. #Collectionகுமாரு

— M.K.Stalin (@mkstalin) October 13, 2026

மினசாரம் வாங்குவதில் ஊழல் நடக்கிறதா?

அதிமுகவில் இருந்து 15 எம்எல்ஏக்கள் தவெகவுக்கு வர உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் பேசியதை குறிப்பிட்டு, "அதிமுகவில் இருந்து மேலும் 15 பேரை purchase செய்யப் போகிறோம் என்று வேறு வெட்கமே இல்லாமல் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறீர்களே? அதற்குப் பணம் போதாமல்தான் மின்சாரம் வாங்குவதில் ஊழல் நடக்கிறதா என மக்கள் மனதிலும் கேள்விகள் எழத் தொடங்கிவிட்டன" என்றும் ஸ்டாலின் தாக்கி உள்ளார்.

மேலும் படிக்க | மின்சார கொள்முதல் சர்ச்சை: நீக்கப்பட்ட ஒரு பதிவு... தமிழக அரசியலில் வெடித்த புதிய விவாதம்

கவலையில் டெல்டா விவசாயிகள்

தொடர்ந்து டெல்டா கடைமடை விவசாயிகளின் நிலை குறித்து ஸ்டாலின் அவரது பதிவில், "குறுவை பொய்த்த நிலையில், டெல்டா விவசாயிகளின் பேச்சைக் கேட்காமல், ஜோசியரின் பேச்சைக் கேட்டு மேட்டூர் அணையையும் தவறான தேதியில் திறந்து வைத்தார்கள்.

5 கோடி ரூபாய் செலவில் சாலையோரத் தடுப்புகள் அமைத்து முதலமைச்சர் ரீல்ஸ் எடுத்ததைத் தவிர அதனால் விளைந்த பயன் என்ன?, இப்போது சம்பா சாகுபடியும் சாத்தியமாகுமா எனத் தெரியாமல் கடைமடை விவசாயிகள் நீரின்றிப் பரிதவிக்கிறார்கள்" என குறிப்பிட்டு முதலமைச்சரை சாடி உள்ளார்.

'சீரிழியும் தமிழ்நாடு'

இப்படி, முன்யோசனையும் இல்லாத மூளையும் இல்லாத ஒரு மூடர் கூட்டத்திடம் சிக்கி, நம் கண்முன்னே தமிழ்நாடு சீரழிந்து கொண்டிருக்கிறது என்றும்; வாலில் தீப்பற்றிய குரங்குக் கூட்டம் வனமெல்லாம் தாவி, கொளுத்தி விடுவதைப் போலத்தான் தவெக அரசின் அமைச்சரவை அமைந்திருக்கிறது என்றும் சாடியிருக்கிறார்.

'அடிப்படை கூட அறியாத ஆட்சி'

முதலமைச்சர் விஜய் இன்று ஆந்திராவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஆந்திராவின் விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தார். இதை குறிப்பிட்டிருக்கும் ஸ்டாலின், அமைச்சர்களை வழிநடத்த வேண்டிய முதலமைச்சரோ, உடுப்பி, லண்டன், விஜயவாடா என மாதம் ஒரு ஊருக்குச் சென்று விழாவைச் சிறப்பிப்பதிலேயே குறியாக இருக்கிறார் என விமர்சித்துள்ளார்.

மொத்தத்தில், ஆட்சி நிர்வாகத்தின் அடிப்படை கூட அறியாத இந்த அறிவிலிகளின் அலட்சியத்தாலும் அழிச்சாட்டியத்தாலும் எதிர்வரும் மாதங்களைத் தமிழ்நாட்டு மக்கள் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்ற அச்சம்தான் மேலோங்குகிறது என ஸ்டாலின் கவலை தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | தலைமைச் செயலகத்தில் பவர் கட்... நடந்தது என்ன? - குற்றச்சாட்டும் விளக்கமும் Explained

Add Zee News as a Preferred Source
TAGS:
MK Stalin