• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /இந்தியா
  • /SSR vs SIR: இரண்டுக்கும் என்ன வித்தியாசம், SIR-ல் விடுபட்ட பெயர்களை மீண்டும் சேர்க்க முடியுமா? Explained

SSR vs SIR: இரண்டுக்கும் என்ன வித்தியாசம், SIR-ல் விடுபட்ட பெயர்களை மீண்டும் சேர்க்க முடியுமா? Explained

SIR நடைமுறையில் எழுந்த சர்ச்சைகளைத் தொடர்ந்து, தமிழகம் உட்பட 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தகுதியுள்ள வாக்காளர்களைச் சேர்க்கவும் பிழைகளைத் திருத்தவும் மீண்டும் சிறப்பு சுருக்கத் திருத்தம் (SSR) முறையைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Written ByR Balaji
Published: Oct 19, 2026, 08:02 PM IST|Updated: Oct 19, 2026, 08:16 PM IST
joinshare
SSR vs SIR: இரண்டுக்கும் என்ன வித்தியாசம், SIR-ல் விடுபட்ட பெயர்களை மீண்டும் சேர்க்க முடியுமா? Explained

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
SSR vs SIR: இரண்டுக்கும் என்ன வித்தியாசம், SIR-ல் விடுபட்ட பெயர்களை மீண்டும் சேர்க்க முடியுமா? Explained

SSR vs SIR: இரண்டுக்கும் என்ன வித்தியாசம், SIR-ல் விடுபட்ட பெயர்களை மீண்டும் சேர்க்க முடியுமா? Explained

2

சிஎஸ்கே அணிக்குள் வரும் உதய் சகரன்? யார் இவர்? முழு விவரம்!

3

பெண்களுக்கு இலவச பட்டுப்புடவை! நடிகர் ராகவா லாரன்ஸ் அறிவிப்பு..யாருக்கெல்லாம்?

4

ஐஐடியில் தொடர் மர்மம்.. பாஜக ஆட்சியில் அதிகரித்த மாணவர்களின் மரணங்கள்.. பகீர் ரிப்போர்ட்!

5

விஜயதசமி 2026 : குழந்தைகளை ‘அ..ஆ’ எழுத வைக்கலாம்! நல்ல நேரம் எது? இதோ முழு விவரம்..

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

இந்தியாவில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக சிறப்பு தீவிர திருத்தம் (SIR) நடைமுறை விவாதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மீண்டும் சிறப்பு சுருக்கத் திருத்தம் (SSR) மேற்கொள்ளப்படும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகமும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

SIR நடைமுறையின்போது வாக்காளர் பட்டியலில் இருந்து அதிக எண்ணிக்கையிலான பெயர்கள் நீக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், தகுதியுள்ள வாக்காளர்கள் விடுபட்டுவிட்டார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த சூழலில், SSR மற்றும் SIR ஆகிய இரண்டுக்கும் என்ன வித்தியாசம், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாவிட்டால் என்ன செய்ய வேண்டும், புதிய திருத்த நடைமுறையால் வாக்காளர்களுக்கு என்ன பயன் கிடைக்கும் என்பதை விரிவாக பார்க்கலாம்.

SSR என்றால் என்ன?

SSR (Special Summary Revision) என்பது சிறப்பு சுருக்கத் திருத்தம் ஆகும். தேர்தல் ஆணையம் ஆண்டுதோறும் மேற்கொள்ளும் வாக்காளர் பட்டியல் புதுப்பிப்பு பணிகளில் இதுவும் ஒன்றாகும்.

ஏற்கெனவே உள்ள வாக்காளர் பட்டியலை அடிப்படையாக கொண்டு, அதில் புதிய வாக்காளர்களின் பெயர்களை சேர்ப்பது, பெயர் அல்லது முகவரியில் உள்ள பிழைகளை திருத்துவது, தகுதியற்ற அல்லது இறந்தவர்களின் பதிவுகளை நீக்குவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.

உதாரணமாக, 18 வயதை எட்டிய ஒருவர் வாக்காளர் பட்டியலில் தனது பெயரை சேர்க்க விண்ணப்பிக்கலாம். ஒரு தொகுதியிலிருந்து மற்றொரு தொகுதிக்கு குடிபெயர்ந்தவர்கள் தங்களது முகவரி மற்றும் வாக்காளர் பதிவு விவரங்களை மாற்ற கோரலாம். ஏற்கெனவே வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்கள் தங்களது விவரங்கள் சரியாக உள்ளனவா என்பதையும் சரிபார்க்கலாம்.

இந்த நடைமுறையில் முதலில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அதில் பெயர் விடுபட்டிருந்தாலோ, விவரங்களில் தவறு இருந்தாலோ, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் உரிய விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். விண்ணப்பங்கள் மற்றும் ஆட்சேபனைகள் பரிசீலிக்கப்பட்ட பிறகு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

SIR என்றால் என்ன?

SIR (Special Intensive Revision) என்பது சிறப்பு தீவிரத் திருத்தம் ஆகும். SSR நடைமுறையில் ஏற்கெனவே உள்ள வாக்காளர் பட்டியலை அடிப்படையாக கொண்டு திருத்தங்கள் செய்யப்படுகின்றன. ஆனால், SIR நடைமுறையில் வாக்காளர்களின் விவரங்களை புதிதாக கணக்கெடுத்து சரிபார்த்து, திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை தயாரிப்பது முக்கிய நோக்கமாகும்.

இந்த நடைமுறையில் வாக்காளர்கள் கணக்கெடுப்பு படிவத்தை சமர்ப்பிக்க வேண்டியிருக்கும். தேவையான இடங்களில் விவரங்கள் சரிபார்க்கப்படும். இறந்தவர்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவு செய்யப்பட்டவர்கள், முகவரி மாறியவர்கள் உள்ளிட்டோரின் பதிவுகளை ஆய்வு செய்து வாக்காளர் பட்டியலை துல்லியப்படுத்துவதே நோக்கம் என தேர்தல் ஆணையம் கூறுகிறது.

2025 ஜூன் மாதத்தில் பீகாரில் தொடங்கப்பட்ட SIR நடைமுறை பின்னர் பல்வேறு மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.

SSR vs SIR: இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?

இரண்டுமே வாக்காளர் பட்டியலை சரிசெய்வதற்கான நடைமுறைகள் என்றாலும், அவை மேற்கொள்ளப்படும் விதத்தில் முக்கிய வேறுபாடுகள் உள்ளன.
 

விவரம்SSRSIR
நடைமுறையின் நோக்கம்ஏற்கெனவே உள்ள பட்டியலைப் புதுப்பித்தல்விரிவான கணக்கெடுப்பு மற்றும் சரிபார்ப்பு
தொடக்க அடிப்படைதற்போதைய வாக்காளர் பட்டியல்புதிதாக மேற்கொள்ளப்படும் கணக்கெடுப்பு
ஏற்கெனவே உள்ள பெயர்கள்வரைவு பட்டியலுக்கான தொடக்க அடிப்படையாகத் தொடரும்கணக்கெடுப்பு நடைமுறையைப் பூர்த்தி செய்வது முக்கியம்
சரிபார்ப்பு முறைவரைவு பட்டியலைச் சரிபார்த்து, விண்ணப்பங்கள் மற்றும் ஆட்சேபனைகள் மூலம் திருத்தம்கணக்கெடுப்புப் படிவங்கள் மற்றும் தேவையான சரிபார்ப்புகள்
பெயர் சேர்த்தல்தகுதியுள்ள புதிய வாக்காளர்கள் விண்ணப்பிக்கலாம்நிர்ணயிக்கப்பட்ட நடைமுறையின்படி விவரங்களைச் சமர்ப்பித்து பெயரைப் பதிவு செய்ய வேண்டும்

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள SSR நடைமுறையில், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு நடத்தும் பணி இடம்பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வரைவு மற்றும் இறுதி வாக்காளர் பட்டியல்களை பொதுமக்கள் சரிபார்க்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படும்.

SIR நடைமுறை ஏன் சர்ச்சையை ஏற்படுத்தியது?

SIR நடைமுறையின்போது வாக்காளர் பட்டியலில் இருந்து அதிக எண்ணிக்கையிலான பெயர்கள் நீக்கப்பட்டதாக வெளியான தகவல்கள் விவாதத்தை ஏற்படுத்தின. பல்வேறு மாநிலங்களின் வரைவு வாக்காளர் பட்டியல்களில் இருந்து 13 கோடிக்கும் அதிகமான பதிவுகள் நீக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

எனினும், இந்த எண்ணிக்கை முழுவதும் தகுதியுள்ள வாக்காளர்கள் தவறாக நீக்கப்பட்டதை குறிக்காது. இறந்தவர்கள், இரட்டை பதிவுகள், முகவரி மாறியவர்கள் மற்றும் தகுதியற்ற பதிவுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அதேவேளையில், தகுதியுள்ள வாக்காளர்களும் பட்டியலில் இருந்து விடுபட்டிருக்கக்கூடும் என்று எதிர்க்கட்சிகள் மற்றும் விமர்சகர்கள் முன்வைத்துள்ளனர். குறிப்பாக, புலம்பெயர் தொழிலாளர்கள், முதியவர்கள், போதிய ஆவணங்கள் இல்லாதவர்கள் ஆகியோர் சரிபார்ப்பு நடைமுறைகளை பூர்த்தி செய்வதில் சிரமங்களை சந்திக்கலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது.

இதனால், வாக்காளர் பட்டியல் திருத்தம் வெளிப்படையாகவும், தகுதியுள்ள வாக்காளர்கள் விடுபடாத வகையிலும் நடைபெற வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ளன.

17 மாநிலங்களில் மீண்டும் SSR

தேர்தல் ஆணையம் 2026ம் ஆண்டில் வழக்கமான SSR நடைமுறையை மேற்கொள்ளாமல், பல்வேறு மாநிலங்களில் SIR பணிகளை முன்னெடுத்தது. தற்போது 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் SSR மேற்கொள்ளப்படும் என அக்டோபர் 15ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

2027ம் ஆண்டின் தொடக்கத்தில் சில மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் பட்டியலை புதுப்பிப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. புதிய வாக்காளர்களை பதிவு செய்வதற்கும், தவறான விவரங்களை திருத்துவதற்கும், பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் விண்ணப்பிப்பதற்கும் இந்த நடைமுறை வாய்ப்பளிக்கும்.

இந்த SSR நடைமுறை தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், பஞ்சாப், பீகார் உள்ளிட்ட மாநிலங்களிலும், அந்தமான் நிக்கோபார் தீவுகள், புதுச்சேரி, லட்சத்தீவு உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களிம் மேற்கொள்ளப்பட உள்ளது.

இடம்பெற்றுள்ள 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள்

  1. தமிழ்நாடு
  2. கேரளா
  3. மேற்கு வங்கம்
  4. உத்தரப் பிரதேசம்
  5. பஞ்சாப்
  6. பீகார்
  7. அசாம்
  8. குஜராத்
  9. ராஜஸ்தான்
  10. மத்தியப் பிரதேசம்
  11. சத்தீஸ்கர்
  12. கோவா
  13. மணிப்பூர்
  14. உத்தராகண்ட்
  15. புதுச்சேரி
  16. அந்தமான் நிக்கோபார் தீவுகள்
  17. லட்சத்தீவு

SIRல் பெயர் விடுபட்டவர்கள் மீண்டும் சேர்க்க முடியுமா?

SIR-க்கு பிறகு வெளியிடப்பட்ட பட்டியலில் தங்களது பெயர் இடம்பெறவில்லை என்றால், தகுதியுள்ளவர்கள் SSR நடைமுறையின்போது பெயரை சேர்க்க விண்ணப்பிக்கலாம். இதற்காக Form 6 பயன்படுத்தப்படுகிறது. விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு, தேவையான சரிபார்ப்புகள் முடிந்த பிறகே பெயரை சேர்ப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.

ஏற்கெனவே வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தும், விவரங்களை திருத்த வேண்டியிருந்தால் அல்லது முகவரி மாற்றம் செய்ய வேண்டியிருந்தால், அதற்குரிய நடைமுறையை பின்பற்ற வேண்டும். பெயரை நீக்க கோரும் விண்ணப்பங்கள் மற்றும் ஆட்சேபனைகளும் விதிகளின்படி பரிசீலிக்கப்படும். எனவே, வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் அடுத்தடுத்த அறிவிப்புகளை கவனித்து, உரிய காலக்கெடுவுக்குள் விண்ணப்பிப்பது அவசியம்.

SSR 2026-க்கான முக்கிய தேதிகள் என்ன?

தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள அட்டவணையின்படி, 
 

தேதிமுக்கிய நடவடிக்கை
நவம்பர் 2, 2026வாக்குச்சாவடி ஏற்பாடுகளை இறுதி செய்தல்
நவம்பர் 12, 2026வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
டிசம்பர் 11, 2026கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் சமர்ப்பிக்க கடைசி நாள்
டிசம்பர் 28, 2026கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளைப் பரிசீலித்து முடிக்க வேண்டிய நாள்
ஜனவரி 4, 2027இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

இந்த அட்டவணையின்படி, நவம்பர் 12ஆம் தேதி வரைவு பட்டியல் வெளியானதும் வாக்காளர்கள் தங்களது பெயர் மற்றும் விவரங்களை சரிபார்க்கலாம். பெயர் இல்லாவிட்டால் அல்லது தகவல்களில் தவறு இருந்தால், டிசம்பர் 11ஆம் தேதிக்குள் உரிய விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

வாக்காளர்கள் இப்போது என்ன செய்ய வேண்டும்?

தமிழக வாக்காளர்கள் தங்களது பெயர் தற்போதைய வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்பதை சரிபார்ப்பதுடன், பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களும் சரியாக உள்ளனவா என்பதை கவனிக்க வேண்டும். புதிய வரைவு பட்டியல் வெளியான பிறகும் மீண்டும் சரிபார்ப்பது நல்லது. பெயர் விடுபட்டிருந்தால், தகுதி இருப்பின் படிவம் 6 மூலம் விண்ணப்பிக்கலாம்.

Add Zee News as a Preferred Source
TAGS:
Explainer