மிகப்பெரிய ECI முறைகேடு! தேர்தல் ஆணையர் பதவிக்கு நெருக்கடி.. ராஜினாமா செய்வாரா ஞானேஷ்?
CEC Controversy Explained: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என கோரிக்கைகள் வலுத்துள்ள நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் ராஜினாமா செயல்முறை, தேர்வு செய்யப்படும் முறை என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.
CEC Controversy Explained: இந்திய ஜனநாயகத்தின் தூணாக கருதப்படும் தேர்தல் ஆணையத்தை உலுக்கும் வகையில், புதிய பிரச்னை வெடித்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்திற்குள்ளே முதல்முறையாக மோதல் வெடித்துள்ளது. எஸ்ஐஆர் உள்ளிட்ட பல விஷயங்களின் முடிவுகளை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக முடிவெடுத்து இருப்பதாக தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் புயலை கிளப்பி உள்ளது.
தேர்தல் ஆணையத்தில் வெடித்த மோதல்
இந்திய தேர்தல் ஆணையம், தலைமை தேர்தல் ஆணையர், 2 தேர்தல் ஆணையர்கள் தலைமையில் செயல்பட்டு வருகிறது. தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்களாக சுக்பீர் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோரும் பதவி வகித்து வருகின்றனர். இவர்களின் மூன்று பேரின் மேற்பார்வையில் தான், வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் (எஸ்ஐஆர்) மேற்கொள்ளப்பட்டது.
தமிழ்நாடு, பீகார் உட்பட பல்வேறு மாநிலங்களில் எஸ்ஐஆர் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. எஸ்ஐஆர் நடவடிக்கைகள், படிவம் 6 உள்ளிட்ட விஷயங்களின் முடிவுகள் குறித்து ஞானேஷ் குமார் தனித்து முடிவு எடுத்து இருப்பதாக கூறி, இதனை எதிர்த்து கடந்த 10 மாதங்களில் 14 முறை தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து, விவேக் ஜோஷி அவருக்கு கடிதம் எழுதி இருகிறது அம்பலமாகியுள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் எஸ்ஐஆர் விவகாரங்களில் தன்னிச்சையாக முடிவு எடுக்கப்பட்டது எதிர்க்கட்சியினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும் படிக்க: Explained: தேர்தல் ஆணையத்தில் வெடித்த மோதல் - Form 6 சர்ச்சையும்... விளக்கமும்...
தலைமை தேர்தல் ஆணையர் ராஜினாமா செய்ய வேண்டும்
ஏனென்றால் எஸ்ஐஆர் நடவடிக்கை என்ற பெயரில் தேர்தல் ஆணையம் 13 கோடி வாக்காளர்களை நீக்கியது. இந்த விவகாரத்தில் தேர்தர் ஆணையர் ஞானேஷ் தனிச்சையாக முடிவெடுத்திருப்பதாக கூறப்படும் நிலையில், தமிழ்நாடு, டெல்லி, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு மறுதேர்தல் நடத்த வேண்டும் எதிர்க்கட்சியினர் கூறி வருகின்றனர்.
அதோடு இல்லாமல், இந்த குற்றத்திற்கு பொறுப்பேற்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சியினர் கோரிக்கை வைத்துள்ளனர். அதோடு இல்லாமல், இதில் சம்பத்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடு முழுவதும் கோரிக்கை வலுத்துள்ளது. எதிர்க்கட்சிகள் மட்டுமில்லாமல், காக்ரோஜ் ஜனதா கட்சியும் இதில் இணைந்துள்ளது. அதாவது, காக்ரோஜ் ஜனதா கட்சி மூன்று கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.
கோரிக்கைகள் என்னென்ன?
- ஞானேஷ் குமார் உடனடியாக பதவி விலக வேண்டும். இந்த விவகாரத்தில் குற்றவியல் நடவடிக்கையை தொடங்க வேண்டும். அத்துடன், அவருக்கு உத்தரவிட்டது யார் என்ற கேள்விக்கு பதில் அளிக்கப்பட வேண்டும்.
- வரவிருக்கும் அனைத்துத் தேர்தல்களையும் நிறுத்தி வைக்க வேண்டும். SIR நடைமுறையை முடக்கி, 2025 ஜனவரி மாத வாக்காளர் பட்டியலை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். SIR தொடர்பான ஒட்டுமொத்த முடிவெடுக்கும் செயல்முறை குறித்தும் ஒரு சுதந்திரமான விசாரணையை மேற்கொள்ள வேண்டும்.
- மேலும், SIR தொடர்பான எந்தவொரு ஆவணமும் அழிக்கப்படவோ, மாற்றப்படவோ அல்லது காணாமல் போகவோ இல்லை என்பதை உறுதிசெய்ய, அந்த ஆவணங்கள் அனைத்தையும் உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- இந்தியத் தேர்தல் ஆணையர்களை நியமிப்பது தொடர்பான 2023-ஆம் ஆண்டு சட்டத்தை ரத்து செய்து, பொதுமக்களின் நம்பிக்கையை ஈர்க்கக்கூடிய ஒரு புதிய சட்டத்தை இயற்ற வேண்டும்.
அக்டோபர் 2 நாடு தழுவிய போராட்டம்
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகவில்லை என்றால், நாடு முழுவதும் அக்டோபர் 2ஆம் தேதி போராட்டம் நடக்கும் என காக்கோஜ் ஜனதாக கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கே தெரிவித்துள்ளார். காந்தி ஜெயந்தி அன்று மும்பையில் போராட்டங்கள் தொடங்கும் என அறிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையர் ராஜினாமா செயல்முறை
தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், சேவை நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம்) சட்டம், 2023 இன் பிரிவு 11(1) இன் கீழ், தலைமைத் தேர்தல் ஆணையர் தனது ராஜினாமாவை எழுத்துப்பூர்வமாக நேரடியாக குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிக்க வேண்டும். இந்த சட்டம் 2023 டிசம்பர் 28ஆம் தேதி இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி, தேர்தல் ஆணையர்களிடையே ஒரு விவகாரத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், பெரும்பான்மை கருத்தில் அடிப்படையில் இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்பதே சட்டம். இந்த சட்டத்தின்படி ஞானேஷ் குமார் செயல்படாமல், தன்னிச்சையாக செயல்பட்டதாக சாந்து, ஜோஷி கூறியதாக தெரிகிறது. இந்த சட்டத்தை மீறி ஞானேஷ் குமார் நடந்ததாக கூறப்படுவதால், அவர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூறுகின்றனர்.
தேர்தல் ஆணையர் தேர்வு செய்யப்படும் முறை
இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் இதர தேர்தல் ஆணையர்கள் குடியரசுத் தலைவர் அவர்களால் நியமிக்கப்படுகின்றனர். 2023ஆம் ஆண்டு இயற்றப்பட்ட, தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் இதர தேர்தல் ஆணையர்கள் (நியமனம், சேவை நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம்) சட்டத்தின் படி, புதிய நியமன முறை நடைமுறையில் உள்ளது.
இந்த சட்டத்தின் விதிகளின்படி, தலைமை தேர்தல் ஆணையம், இதர தேர்தல் ஆணையர்கள் ஒரு தேர்வுக்குழுவின் பரிந்துரையின்பேரில் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுவார்கள். இந்த தேர்வுக்குழுவில் பிரதமர், மத்திய அமைச்சர், எதிர்க்கட்சி தலைவர், மக்களவை கட்சியின் தலைவர் ஆகியோர் இடம்பெற்றிருப்பார்கள்.
முன்னதாக இந்த குழுவில் தலைமை நீதிபதி இடம்பெற்றிருந்தனர். ஆனால், உச்ச நீதிமன்றம் தீர்ப்பை அடுத்து, இந்த குழுவில் இருந்து நீதிபதி நீக்கப்பட்டு, மத்திய அமைச்சர்கள் இடம்பெற்றனர். மத்திய சட்ட அமைச்சரின் தலைமையில் ஒரு தேர்வுக் குழு அமைப்பதற்கும் இந்தச் சட்டம் வழிவகை செய்கிறது.
அக்குழு, தேர்வுக் குழுவின் பரிசீலனைக்காக ஐந்து நபர்களைக் கொண்ட ஒரு பட்டியலைத் தயாரிக்கிறது. பின்னர், தேர்வுக் குழு குடியரசுத் தலைவருக்குப் பெயர்களைப் பரிந்துரைக்கிறது. அவர் தலைமைத் தேர்தல் ஆணையரையும் (CEC) தேர்தல் ஆணைய உறுப்பினர்களையும் (ECs) முறைப்படி நியமிக்கிறார்.
அடுத்த தலைமை தேர்தல் ஆணையர் யார்?
தற்போது தலைமை தேர்தல் ஆணையராக உள்ள ஞானேஷ் குமார் ராஜினாமா செய்தால், மீதமுள்ள தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சந்து, விவேக் ஜோஷி பதவியில் தொடர்வார்கள். தற்காலிக தலைமை தேர்தல் ஆணையர்களை நியமிப்பது என்பது சட்டத்தில் இல்லை.
எனவே, தேர்தல் ஆணையர்களாக இருப்பவர்களில் யாரெனும் ஒருவர் தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கலாம் அல்லது தேர்வுக் குழு புதிய தலைமை தேர்தல் ஆணையரை பரிந்துரை செய்து, குடியரசுத் தலைவர் நியமிக்கலாம். குடியரசுத் தலைவரால் ஒரு புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் முறைப்படி நியமிக்கப்படும் வரை, தேர்தல் ஆணையத்தின் நிர்வாக மற்றும் அன்றாட முடிவுகள், மத்திய அரசு மற்றும் குடியரசுத் தலைவர் அலுவலகத்தின் வழிகாட்டுதலின்படியும், தேர்தல் ஆணையர்களால் கையாளப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.