• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /இந்தியா
  • /பேய் விரட்ட கூடாது.. 10 வயது மகனை கோயில் பீடத்தில் பலி கொடுத்த தந்தை.. அதிர்ச்சி பின்னணி!

பேய் விரட்ட கூடாது.. 10 வயது மகனை கோயில் பீடத்தில் பலி கொடுத்த தந்தை.. அதிர்ச்சி பின்னணி!

Gujarat Crime News: குஜராத்தில் 10 வயது சிறுவனை தந்தையே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேய் விரட்டும் குடும்ப தொழிலை தன் மகனும் செய்யக் கூடாது என பெற்ற மகனேயே அவர் கொலை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Written ByUmabarkavi K
Published: Nov 03, 2026, 06:04 PM IST|Updated: Nov 03, 2026, 06:16 PM IST
joinshare
பேய் விரட்ட கூடாது.. 10 வயது மகனை கோயில் பீடத்தில் பலி கொடுத்த தந்தை.. அதிர்ச்சி பின்னணி!

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
சூர்யகுமார் யாதவையும் கழட்டிவிடும் மும்பை... டிரேட் செய்யும் அணி எது தெரியுமா?

சூர்யகுமார் யாதவையும் கழட்டிவிடும் மும்பை... டிரேட் செய்யும் அணி எது தெரியுமா?

2

Explained | அமெரிக்க இடைத்தேர்தல் 2026 முடிவுகள் எப்போது? யார் கைப்பற்றுவார்கள் காங்கிரஸை?

3

பேய் விரட்ட கூடாது.. 10 வயது மகனை கோயில் பீடத்தில் பலி கொடுத்த தந்தை.. அதிர்ச்சி பின்னணி!

4

திரையரங்குகளில் காலை 6 மணி காட்சிகளுக்கு அனுமதி! FDFS ரசிகர்கள் கொண்டாட்டம்..

5

Explained : பசுமை பட்டாசு மட்டும்தான் தீபாவளிக்கு வெடிக்க வேண்டும்! Green Crackers என்றால் என்ன?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Gujarat Crime News: நாடு முழுவதும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. சிறார்கள், பெண்கள் இதில் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரிந்த நபர்களே கொலை சம்பவங்ளில் ஈடுபட்டு வருகின்றனர். அதோடு, பெற்ற குழந்தைகளே பெற்றோர் கொலை செய்யும் சம்பவங்களும் அரேங்கேறி வருகிறது. அப்படிதான் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 10 வயது மகனை தந்தை கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

10 வயது மகனை கொன்ற தந்தை

குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டத்தில் தனது வீட்டில் உள்ள கோயில் பலபீடத்தில் 10 வயது மகனை கொலை செய்ததாக 36 வயதான நபர் கைதாகி உள்ளார். அவர் நரேஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 37 வயதான அவர் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு 10 வயதில் கரண் என்ற மகன் உள்ளார். இவரது மனைவி பாரதி. பாரதிக்கும் நரேஷ்க்கும் கடந்த சில நாட்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதில் கோபம் அடைந்த பாரதி, தனது தாய் வீட்டிற்கு சென்றதாக தெரிகிறது. இதனால், மகள் நரண் மற்றும் தந்தை நரேஷ் மட்டும் வீட்டில் கடந்த சில தினங்களாக வசித்து வந்துள்ளனர். நரேஷ் கூலி தொழிலுடன், பூசாரியாகவும் இருக்கிறார். இவரின் வீட்டின் அருகே ஜோகனி மாதா சாமி பீடம் உள்ளது. இங்கு பூஜை நரேஷ் பூஜை செய்து வருகிறார்.

இவரை தேடி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்கள் வருகை தருவார்கள். குறி கேட்பது, பேய்களை விரட்ட சொல்வது, நோய்களை குணப்படுத்துவது என மூடநம்பிக்கை பூஜைகளை நரேஷ் செய்து வந்துள்ளார். இதற்கு முன்பு நரேஷின் தந்தையும் செய்து வந்ததாக தெரிகிறது. அவர் காலமானதை தொடர்ந்து, நரேஷூம் இதே வேலையை செய்து வருகிறது.

மேலும் படிக்க: Explained : பசுமை பட்டாசு மட்டும்தான் தீபாவளிக்கு வெடிக்க வேண்டும்! Green Crackers என்றால் என்ன?

கோயில் பீடத்தில் நடந்த சம்பவம்

நவம்பர 1ஆம் தேதி இரவு நரேஷ் வீட்டிற்கு அருகில் உள்ள பீடத்தில் இருந்து அக்கம் பக்கத்தினருக்கு சத்தமம் கேட்டது. அப்போது அங்கு வந்த  அக்கம் பக்கத்தினர் கட்டிலில் 10 வயது சிறுவன் கரண் இறந்து கிடந்தார். தலையில் ரத்தம் வடிந்தபடி அவர் இருந்தார். இதனை அடுத்து, உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

தன் மகன் தாக்கப்பட்டதாகத் தகவல் கிடைத்ததும், சிறுவனின் தாய் பார்தி படேல் சொந்த ஊருக்கு திரும்பினார். விஞ்சியா கிராமத்தில் உள்ள அக்குடும்பத்தின் வீட்டிற்குச் சென்ற காவல்துறையினர், உயிரிழந்த சிறுவனின் சடலத்திற்கு அருகில் ஒரு கட்டிலில் நரேஷ் உறங்கிக் கொண்டிருந்ததைக் கண்டதாகக் கூறப்படுகிறது.

நரேஷ்,  தனது மகன் கரணை தங்கள் வீட்டின் முற்றத்தில் உள்ள  கோயில் பலிபீடத்திற்கு அழைத்துச் சென்று, அவனது கால்களைப் பிடித்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது. அவர் சிறவனை கோயில் பீடத்தில் மூன்று முறை பலமாக மோதியதாகவும், பின்னர் ஒரு தடியால் அவனது தலையில் அடித்ததாகவும் கூறப்படுகிறது. சானந்த் காவல் நிலைய ஆய்வாளர் ஜே.எல். சௌஹான் கூறுகையில், குற்றம் சாட்டப்பட்டவர் சிறுவனின் தலையை கோயில் பலிபீடத்தின் விளிம்பில் மோதியதாகவும், பின்னர் அவனை ஒரு தடியால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. ஜோகனி மாதாவின் பலிபீடத்தில் இரத்தக் கறைகள் காணப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க: புல்லட் ரயில் B28: சென்னைக்கும் வருது.. சிறப்பம்சங்கள் என்னென்ன? Explained

பகிர் பின்னணி

கொலையைப் பற்றி நரேஷின் மனைவி அவரிடம் கேட்டபோது, ​​அவர் அளித்ததாகக் கூறப்படும் விளக்கத்தையும் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்துள்ளது. மனைவி பார்த் படேல் கூற்றுப்படி, நரேஷின் தந்தையே ஒரு பூசாரியாக இருந்ததாகவும், அவருக்குப் பிறகு தான் அவர் அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. குடும்பத்தில் வேறு யாரும் பூசாரி ஆகிவிடக் கூடாது என்பதற்காகவே கரனைக் கொன்றதாக நரேஷ் தன் மனைவியிடம் கூறியதாகவும் தெரிகிறது.

போலீசார் நரேஷைக் கைது செய்து அவர் மீது கொலைக் குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர் மனநிலை சரியில்லாதவராகத் தெரிவதாகவும், அவருக்கு உளவியல் ரீதியான ஆலோசனை நடத்தப்படும் என்றும் ஆய்வாளர் சௌஹான் கூறினார். அப்பகுதியில் வசிக்கும் மக்களுடன் நரேஷ் நல்லுறவைப் பேணவில்லை என்று அக்கம்பக்கத்தினர் தங்களிடம் கூறியதாக காவல்துறையினரும் தெரிவித்தனர். 

குஜராத்தில் உள்ள பல பகுதிகளில் இதுபோன்ற பூஜைகள் நடைபெறுவதாகவும், இதற்கு சமூக ஆர்வலர்களும் பல ஆண்டுகளாக தடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். தன்னுடைய பூசாரி தொழிலையே தனது மகன் செய்யக் கூடாது என்பதற்காக, 10 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க: தீபாவளிக்கு முன் அதிகரித்த அகவிலைப்படி: கோல் இந்தியா ஒப்பந்த தொழிலாளர்களுக்கு VDA உயர்வு
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Crime