அமெரிக்க அரசியலில் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படும் 2026 இடைத்தேர்தல் (Midterm Election) இன்று நடைபெறுகிறது. இந்தத் தேர்தல் மூலம் அமெரிக்க காங்கிரஸின் கட்டுப்பாடு எந்தக் கட்சியின் கையில் இருக்கும் என்பது தீர்மானிக்கப்படுகிறது. ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் குடியரசுக் கட்சியிடம் இருந்து பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் மீதான கட்டுப்பாட்டை கைப்பற்றும் முயற்சியில் ஜனநாயகக் கட்சி தீவிரமாக களமிறங்கியுள்ளது.
அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்ற இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் தேர்தலே இடைத்தேர்தல் ஆகும். இந்தத் தேர்தலில் ஜனாதிபதி அல்லது துணை ஜனாதிபதி போட்டியிட மாட்டார்கள்.
அமெரிக்காவில் சட்டங்களை நிறைவேற்றுவதற்கும், ஜனாதிபதியின் கொள்கைகளை ஆதரிக்க அல்லது தடுக்கவும் காங்கிரஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே பிரதிநிதிகள் சபையை எந்தக் கட்சி கட்டுப்படுத்துகிறது?, செனட்டில் யாருக்கு பெரும்பான்மை கிடைக்கிறது? என்பதே அமெரிக்க அரசியலின் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான திசையை நிர்ணயிக்கும்.
அமெரிக்க தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்றால், அமெரிக்க குடிமகனாக இருக்க வேண்டும். தேர்தல் நடைபெறும் மாநிலத்தின் குடியிருப்பு விதிமுறைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும். தேர்தல் நாளன்று அல்லது அதற்கு முன்பாக 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். இரட்டை குடியுரிமை (Dual Citizenship) பெற்றவர்களும், வீடற்ற நிலைமையில் வாழ்பவர்களும் மாநில விதிமுறைகளுக்கு ஏற்ப வாக்களிக்கலாம்.
அமெரிக்க குடியுரிமை இல்லாதவர்கள், கிரீன் கார்ட் (Green Card) வைத்திருக்கும் நிரந்தர குடியிருப்பாளர்கள், குற்றவியல் தண்டனை பெற்றவர்கள் தொடர்பான விதிமுறைகள் மாநிலங்களுக்கு மாநிலம் மாறுபடும். இவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வடக்கு டகோட்டா (North Dakota) மாநிலத்தைத் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் வாக்காளர் பதிவு கட்டாயம். நேரடியாக பதிவு செய்தல், அஞ்சல் மூலம் விண்ணப்பித்தல், இணையம் வழியாக பதிவு செய்தல் போன்ற வழிகள் மூலம் வாக்காளர் பதிவு செய்துக்கொள்ளலாம். அதேநேரம் பல மாநிலங்களில் பதிவு செய்யும் காலக்கெடு ஏற்கனவே முடிவடைந்துள்ளது.
அமெரிக்க தேர்தல் முறையில் மூன்று முக்கிய வழிகள் உள்ளன.
தேர்தல் நாளுக்கு முன்பே வாக்களிக்க அனுமதிக்கப்படும் முறை.
பல மாநிலங்களில் தபால் வழியாக வாக்களிக்க முடியும். சில மாநிலங்கள் பதிவு செய்யப்பட்ட அனைத்து வாக்காளர்களுக்கும் நேரடியாக வாக்குச் சீட்டுகளை அனுப்புகின்றன.
தேர்தல் நாளன்று ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்கும் முறை. சில மாநிலங்களில் அடையாள அட்டை (Photo ID) கட்டாயமாக இருக்கலாம்.
அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் வாக்குச் சாவடிகள் வெவ்வேறு நேரங்களில் மூடப்படுகின்றன.
மாலை 6 மணி (EST)
மாலை 7 மணி (EST)
இரவு 8 மணி (EST)
இரவு 9 மணி (EST)
இரவு 11 மணி (EST)
பல மாநிலங்களில் வாக்குச்சாவடிகள் மூடப்பட்ட உடனேயே ஆரம்ப வாக்கு எண்ணிக்கைகள் வெளியாகத் தொடங்கும். ஆனால் ஆரம்ப முன்னிலை பெற்ற வேட்பாளர் அதிகாரப்பூர்வமாக வென்றுவிட்டார் என்று உடனே கூற முடியாது. தேர்தல் அதிகாரிகள் வாக்குகளை சரிபார்ப்பர், தபால் வாக்குகளை கணக்கில் சேர்ப்பார், வாக்குச் சீட்டு கையொப்பங்களை உறுதிப்படுத்துவார், இதற்குப் பிறகே இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும்.
2026 அமெரிக்க இடைத்தேர்தலின் அனைத்து வெற்றியாளர்களையும் அறிவிக்க ஒரு நிர்ணயிக்கப்பட்ட இறுதி காலக்கெடு இல்லை. பல தொகுதிகளில் தேர்தல் முடிவு இன்று இரவே தெளிவாகிவிடலாம். ஆனால் கடுமையான போட்டி நிலவும் மாநிலங்கள் மற்றும் தொகுதிகளில் தபால் வாக்குகள் எண்ணிக்கை, கையொப்ப சரிபார்ப்பு, தரவரிசைத் தேர்வு வாக்குப்பதிவு, மறுகணக்கீடு தேவைகள் போன்ற காரணங்களால் இறுதி முடிவுகள் வெளியாக சில நாட்கள் அல்லது சில வாரங்கள் கூட ஆகலாம்.
2026 அமெரிக்க இடைத்தேர்தல், டொனால்ட் டிரம்ப் தலைமையிலான குடியரசுக் கட்சியின் அரசியல் செல்வாக்கு தொடருமா அல்லது ஜனநாயகக் கட்சி காங்கிரஸின் கட்டுப்பாட்டை மீண்டும் கைப்பற்றுமா என்பதை தீர்மானிக்கும் மிக முக்கியமான அரசியல் நிகழ்வாக பார்க்கப்படுகிறது. தேர்தல் இரவிலேயே பல முக்கிய முடிவுகள் வெளியாகும் நிலையில், சில மாநிலங்களில் உண்மையான இறுதி முடிவுகளை அறிய வாக்காளர்கள் இன்னும் சில நாட்கள் காத்திருக்க வேண்டியிருக்கும்.