• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /இந்தியா
  • /Explained: ஐஐடி பாம்பே மாணவர் மரணம்: தேர்வு முறைகேடா? சாதிய துன்புறுத்தலா? - நடந்தது என்ன?

Explained: ஐஐடி பாம்பே மாணவர் மரணம்: தேர்வு முறைகேடா? சாதிய துன்புறுத்தலா? - நடந்தது என்ன?

20 வயதான மும்பை ஐஐடி மாணவர் சாஹில் வகோடே அவரது விடுதி அறையில் தற்கொலை செய்துகொண்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு சாதிய ரீதியான துன்புறுத்தல்கள் இருந்ததன் காரணமாகவே அவர் உயிரிழந்ததாக பெற்றோர் குற்றஞ்சாட்டுகின்றனர். 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராடும் நிலையில், இந்த விவகாரம் குறித்து முழு விவரத்தை இங்கு காணலாம்.

Written BySudharsan G
Published: Sep 20, 2026, 09:16 AM IST|Updated: Sep 20, 2026, 09:22 AM IST
joinshare
Explained: ஐஐடி பாம்பே மாணவர் மரணம்: தேர்வு முறைகேடா? சாதிய துன்புறுத்தலா? - நடந்தது என்ன?
Image Credit: IIT Bombay Student Sahil Wakoda Death | AI Designed Image: ChatGPT

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

2

ஷேர் மார்க்கெட்டில் லாபம் பார்க்க கைகொடுக்கும் AI... நிறுவனங்களின் ஜாதகத்தையே அலசும் Kwala Intel!

3

வீட்டில் இருந்தே போராட்டம் நடத்தலாம்.. ‘ஜந்தர் மந்தர் சலோ’ வீடியோ கேம் அறிமுகம்!

4

முதல்வர் விஜயின் கோவை விசிட்: ரூ.438.86 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைப்பு!

5

16 வயது சிறுமி எழுதிய சாதனை புத்தகம்! PCI தலைவர் தேவேந்திர ஜஜாரியா பாராட்டு…

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் இயங்கும் ஐஐடி பாம்பே கல்வி நிறுவனத்தில், ஆற்றல் அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் (Energy Science and Engineering Department) எம்.எஸ்சி இரண்டாம் ஆண்டு மாணவராக பயின்று வந்தவர் சாஹில் வகோடே.

20 வயதே ஆன இவர் நேற்று முன்தினம் (செப். 18) மாலையில் பவாய் பகுதியில் மும்பை ஐஐடி வளாகத்தில் உள்ள அவரது விடுதி அறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். சாஹிலின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் சந்தேகம் எழுப்பி உள்ளனர்.

இந்த விவகாரம் ஐஐடியை மையமாக கொண்டிருப்பதால் மகாராஷ்டிராவை தாண்டி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை உண்டாகி உள்ளது. இந்த விவகாரம் குறித்து விரிவாக இங்கு காணலாம்.

ஐஐடி பாம்பே தெரிவித்தது என்ன?

ஐஐடி பாம்பே இவரது உயிரிழப்பு குறித்து அறிக்கை வெளியிட்டிருந்தது. அதில், "சம்பவம் நடந்த அன்றைய தினம் (செப். 18) மாணவர் சாஹில் தேர்வறையில் ஸ்மார்ட்போனை பயன்படுத்தியது கண்டறியப்பட்டது. ChatGPT செய்றகை நுண்ணறிவு தளத்தில் வினாத்தாளை பதிவேற்றம் செய்து அதற்கான பதில்களை பெற முயற்சித்தார்.

அந்த மாணவர் மீது எந்தவொரு ஒழங்கு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பயிற்றுவிப்பாளர் மற்றும் துறைத் தலைவர் ஆகியோர் இதுகுறித்து அந்த மாணவரிடம் கலந்துரையாடினர். அவர்கள் மாணவருக்கு உரிய அறிவுரைகளை வழங்கியதுடன் இச்சம்பவம் அவரது கல்விப் பயணத்தை பாதிக்காது என்றும் உறுதியளித்தனர்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அதற்கு பிறகு சாஹில் விடுதி அறைக்கு திரும்பியதாக தெரிகிறது என்றும்; அன்று மாலை அறையில் அவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உயரிழப்பு குறித்து அதிகாரிகள் விசாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

பெற்றோர் வைத்த குற்றச்சாட்டு

இதைத் தொடர்ந்து சாஹில் வாகோடேவின் தந்தை ஐஐடி பாம்பேவின் இயக்குநர் ஷிரிஷ் பி. கேடரே மீது கடுமையான குற்றச்சாட்டுகளை அடுக்கி உள்ளார். கடந்த மூன்று மாதங்களாக சாஹில் மீது சாதி ரீதியான வசைசொற்களை கூறியும், அவருக்கு மிரட்டல் விடுத்து, துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக ஷிரிஷ் மீது சாஹிலின் தந்தை குற்றஞ்சாட்டினார்.

முன்னதாக, சாஹிலின் தாயாரும் தனது மகன் கொல்லப்பட்டுவிட்டான் என்றும் அவன் கடுமையாக துன்புறுத்தப்பட்டான் என்றும் தெரிவித்திருந்தார்.

முதல் தகவல் அறிக்கை கூறுவது என்ன?

உயிரிழந்த மாணவன் சாஹில் வகோடேவின் தந்தை ரவீந்திர சக்ரதர் வகோடே, அவரது மகனின் தற்கொலை குறித்து புகார் தெரிவித்துள்ளார். சாஹில் 12ஆம் வகுப்பு வரை யவத்மால் நகரில் படித்ததாகவும், அதன்பிறகு ஐஐடி பாம்பேவில் சேர்க்கை பெற்று விடுதியில் தங்கி படித்தது வந்ததாகவும் அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதலாமாண்டு படிப்பு சுமுகமாகச் சென்றது. இரண்டாம் ஆண்டில்தான் சாஹிலுக்குப் பிரச்னைகள் தொடங்கின என குறிப்பிட்டுள்ளார். கடந்த மூன்று மாதங்களாக சாஹில் கடுமையான மன உளைச்சலுக்கும், சாதிய வசவுகளுக்கும் ஆளானதாக புகாரில் அவரது தந்தை குறிப்பிட்டுள்ளார்.

மிரட்டல் விடுத்த பேராசிரியர்

ஐஐடி பாம்பேவின் இயக்குநர் ஷிரீஷ் பி. கேடாரேயின் துண்டுதலின் பேரில், சாஹில் தேர்வில் முறைகேடு செய்தபோது பிடிப்பட்ட தேர்வின் கண்காணிப்பாளராகவும் இருந்த பேராசிரியர் சூர்யநாராயண் துல்லா என்பவர் சாஹிலை சாதி ரீதியாக திட்டியதாக அந்த புகாரில் வெளிப்படையாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாஹில் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், ஒரு பொய் வழக்கில் அவரை எளிதில் சிக்க வைக்க முடியும் என்று பேராசிரியர் துல்லா மிரட்டியதாகவும் அவரது தந்தை அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

மனச்சோர்வுக்கு உள்ளான மாணவன்

ஐஐடி வளாகத்தில் சித்ரவதையை எதிர்கொண்டதன் காரணமாகவே தனது மகன் மனச்சோர்வுக்கு தள்ளப்பட்டான் என்பது அவனது நடத்தையில் இருந்தே தன்னால் உணர முடிந்தது என்றும் தங்களின் மகனின் எதிர்காலம் குறித்து அவனுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் குடும்பத்தினர் பேச முயன்றதாகவும் தந்தை ரவீந்திர வகோடே தெரிவித்துள்ளார்.

(சாஹிலுடன்) எந்தவிதமான உரையாடலும் நடத்தப்படவில்லை. இந்த கடினமான காலகட்டத்தை கடந்து வருமாறும், அவனது தொழில் வாழ்க்கை சிறப்பாக அமையும் என்று கூறி அவனுக்குப் புரியவைக்க மட்டுமே நாங்கள் முயற்சித்தோம். ஆனால் இப்போது இந்த இழப்பினால் நாங்கள்தான் கடும் துயரத்திற்கு ஆளாகி உள்ளோம்.

அரசுக்கு கோரிக்கை

"அவனது உயிரிழப்புக்கு காரணவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேணடும். இதற்கு பொறுப்பானவர்கள் மீது உடனடியாகவும், விரைவாகவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே அரசிடம் வைக்கப்படும் ஒரே கோரிக்கை" என புகாரில் அவரது தந்தை குறிப்பிட்டுள்ளார்.

போலீசார் வழக்குப்பதிவு

சாஹில் உயிரிழப்பை தொடர்ந்து மும்பை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர. முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிலையில், பேராசிரியர் சூர்யநாராயண் துல்லா மீது மாணவனை தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், முதல் தகவல் அறிக்கையில் இருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தாலும் அவர்களின் அடையாளம் குறிப்பிடப்படவில்லை. தற்போது இந்த வழக்கின் விசாரணை மும்பை காவல் துறையின் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் பதில்

இந்த விவகாரம் குறித்து மத்திய இணை அமைச்சர் ரக்ஷா கட்சே செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த சம்பவத்தின் மீது முழுமையாக விசாரணை நடத்தப்பட்டு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அதற்கான காரணம் எதுவாக இருந்தாலும் அல்லது அங்கு என்ன பிரச்னைகள் நடந்திருந்தாலும், அதுகுறித்து முழுமையாக விசாரணை நடத்தி தகுந்த நவடிக்கை எடுக்க அரசு சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும்" என உறுதியளித்தார்.

மாணவர்கள் போராட்டம்

சாஹிலின் மறைவைத் தொடர்ந்து 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஐஐடி வளாகத்திலேயே போராட்டத்தில் ஈடுபட்டதுடன், தேர்வு தொடர்பான அந்த சம்பவத்தை ஐஐடி நிர்வாகம் கையாண்ட விதம் குறித்தும் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

ஓராண்டு கால இடைநீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வகோடே மிரட்டப்பட்டதாக தெரிவித்தனர். ஒருவேளை இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தால், அவர் விடுதியை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கும் என்றும் அவரால் 4 ஆண்டுகளில் படிப்பை முடிக்க முடியாமல் போயிருக்கும் என்றும் மாணவர்கள் குற்றஞ்சாட்டினர்.

சாஹிலின் மரணம் தொடர்பான முழு விவரங்களையும் கல்வி நிறுவனம் வெளியிடவில்லை என்றும் மாணவர்கள் கூறுகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு மாணவர் கூறுகையில், "நிர்வாகத்திடம் பொறுப்புக் கூறலையும், வெளிப்படைத்தன்மையையும் வலியுறுத்தவே நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இது முதல் சம்பவம் அல்ல" என்றார்.

IANS செய்தி முகமைக்கு போராட்டத்தில் ஈடுபட்ட ஐஐடி பாம்பே மாணவர் ஒருவர், "அந்த மாணவரின் மனிநிலையையும், அவர் ஒருவர் குழந்தையை போன்றவர் என்பதையும் இந்த அமைப்பு புரிந்துகொள்ளவே இல்லை. 

தேர்வில் முறைகேடு குறித்த குற்றச்சாட்டில் உண்மை இருக்கும்பட்சத்திலும், அவருக்கு ஒரு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தால் அவர் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு பயந்து போயிருக்க மாட்டார். எனவே, இந்த சூழல் கையாளப்பட்ட விதம் முற்றிலும் தவறானது. நிர்வாகத்தின் உணர்வற்ற அணுகுமுறையே அவர் தற்கொலை செய்துகொள்ள காரணமாக அமைந்தது" என்றார்.

"ஐஐடி பாம்பே நிர்வாகம் அவர் மீது (சாஹில் மீது) அழுத்தம் கொடுத்திருக்கக் கூடாது. அவரது மனநிலையைக் கவனத்துடன் கையாண்டிருக்க வேண்டும். மேலும் அவர் எத்தகைய சூழலை எதிர்கொண்டார் என்பதையும் கருத்தில் கொண்டிருக்க வேண்டும்" என மற்றொரு மாணவர் பேசியிருந்தார்.

இது முதல்முறையல்ல...

கடந்த 7 மாதங்களில் மட்டும் ஐஐடி பாம்பேவில் நடக்கும் மூன்றாவது தற்கொலை சம்பவம்தான் இது. கடந்த பிப்ரவரி மாதம் 2ஆம் ஆண்டு மாணவர் ஒருவர் அவரது விடுதி அறையில் தற்கொலை செய்துகொண்டார். அதேபோல், கடந்த ஜூலை மாதத்தில் 20 வயது இரண்டாமாண்டு பி.டெக் மாணவரும் தற்கொலை செய்துகொண்டார்.

(வாசகர்கள் கவனத்திற்கு: தற்கொலைக்கு முயல்வது வாழ்வில் எந்த பிரச்னைக்கும், எதற்கும் தீர்வல்ல. தற்கொலை எண்ணங்கள் வரும்பட்சத்தில், தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கும் தொடர்புகொண்டு நீங்கள் பேசலாம். சினேகா அமைப்பின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்புக் கொள்ளலாம்)

Add Zee News as a Preferred Source
TAGS:
Explainer
India