SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

Chalo Dilli: முதலில் போராட்டம்... பின்னர் ஷாப்பிங்... ராகுல் காந்தி போட்ட வீடியோ

எஸ்ஐஆர் நடவடிக்கையை எதிர்த்து டெல்லியில் இன்று இந்தியா கூட்டணியின் சல்லோ டெல்லி பேரணி நடைபெறுகிறது. தீபாவளி வர்த்தகம் பாதிக்கும் என வணிகர்கள் கவலைப்பட்ட நிலையில், பேரணியோடு உள்ளூர் கடைகளில் பொருட்கள் வாங்கி ஆதரவளிக்குமாறு ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்தார்.

Written By Sudharsan G
Published: Nov 01, 2026, 09:29 AM IST | Updated: Nov 01, 2026, 09:37 AM IST
Join

Chalo Dilli, Rahul Gandhi Video: நாட்டின் பல்வேறு மாநிலங்களின் வாக்காளர் பட்டியலில் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட தீவிர சிறப்பு திருத்தம் காரணமாக 13 கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன, அதாவது 14 சதவீத பேரின் பெயர்கள் நீக்கப்பட்டன.

அந்த வகையில், எஸ்ஐஆர் நடவடிக்கையில் குளறுபடிகள் நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. காக்ரோச் ஜனதா கட்சி உள்பட பல அமைப்பினர் இதை எதிர்த்து கடும் போராட்டத்தை முன்னெடுத்தனர். இதனால் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும் எஸ்ஐஆர் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைத்து வருகின்றனர்.

மேலும் படிக்க | Chalo Delhi Rally | நவம்பர் 1 'இந்தியா' கூட்டணி பேரணிக்கு 6 நிபந்தனைகளுடன் டெல்லி காவல்துறை அனுமதி!

டெல்லியில் இன்று மாபெரும் பேரணி

போராட்டத்தின் ஒரு பகுதியாக, எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி நவம்பர் 1ஆம் தேதியான இன்று புது டெல்லியில் 'சல்லோ டெல்லி' மாபெரும் பேரணியை ஏற்பாடு செய்துள்ளது. இதில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்கள், மாணவ அமைப்பினர், பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

புது டெல்லி மிண்டோ சாலை - கன்னாட் பிளேஸ் சந்திப்பு பகுதியில் பேரணி தொடங்கி ராம்லீலா மைதானம் வரை பேரணி நடைபெறுகிறது. மதியம் 12 மணிக்கு இந்த பேரணி தொடங்க உள்ளது. காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை இந்த பேரணிக்கு அனுமதி வழங்கப்பட்டதாக தெரிகிறது. சுமார் 1.2 - 1.6 கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்த பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

வணிகர்கள் வைத்த கோரிக்கை

வரும் நவம்பர் 8ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. நவம்பர் 6ஆம் தேதி வட இந்தியாவில் தன்தேராஸ் பண்டிகை கொண்டாப்படுகிறது. அந்த பண்டிகையின் போது வீட்டிற்கு லட்சுமியை வரவேற்கும் விதமாக தங்கம் உள்ளிட்ட சுப பொருட்களை வாங்குவார்கள்.

மாத தொடக்கமான இன்று (நவ. 1) டெல்லியில் மாபெரும் பேரணி நடப்பதால், தீபாவளி சார்ந்த வணிகம் பாதிக்கப்படும் என வணிகர்கள் தரப்பில் கவலை தெரிவிக்கப்பட்டது. இன்றைய தினம் திட்டமிடப்பட்ட போராட்டத்தை தள்ளிவைக்கும்படி இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு வணிகர்கள் கோரிக்கை வைத்தனர். குறிப்பாக, வர்த்தக மற்றும் தொழில் சபை (CTI) காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு கோரிக்கை வைத்தது.

மேலும் படிக்க | ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் விடுதலை! 8 ஆண்டு நீண்ட வழக்கில் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

ராகுல் காந்தி போட்ட வீடியோ பதிவு

இந்நிலையில், இதுகுறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவரது X தளத்தில் நேற்றிரவு (அக். 31) வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். ஓடும் காரில் அமர்ந்துகொண்டு ராகுல் காந்தி பேசும் அந்த வீடியோவில், "நமது போராட்டம் வியாபாரிகளைப் பாதிக்காது என்பது எனக்கு தெரியும். பாஜக பயத்தின் காரணமாக வதந்திகளைப் பரப்புகிறது. இருப்பினும் நாம் இரண்டையும் செய்வோமே.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து டெல்லிக்கு வரும் லட்சக்கணக்கான மக்கள் இங்குள்ள உள்ளூர் வியாபாரிகளை ஆதரிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நாளை (அதாவது இன்று) பேரணி நடைபெறும், பொதுக்கூட்டம் நடக்கும், அதன் பின் உள்ளூர் வியாபாரிகளின் சிறு கடைகளில் இருந்து மக்கள் பொருட்களை வாங்குவார்கள்" என்றார்.

பொருட்களையும் வாங்குங்கள்

அதாவது போராட்டம், பேரணி, பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதோடு சிறிதளவு உள்ளூர் வியாபாரிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், பொருட்களையும் வாங்குங்கள் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். வர்த்தக மற்றும் வணிக சபையை ராகுல் காந்தி அந்த வீடியோவில் குறிப்பிடவில்லை. வர்த்தக மற்றும் வணிக சபைதான் மூன்று முறை இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு கோரிக்கை வைத்தது.

20 சந்தைகள் பாதிக்க வாய்ப்பு

சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மம்தா பானர்ஜி, ராஷ்ட்ரிய ஜனதா கட்சியின் தேஜஸ்வி யாதவ், சிவசேனா (UBT) சேர்ந்த உத்தவ் தாக்கரே ஆகியோர் பேரணியை நவம்பர் 11ஆம் தேதிக்கு பிறகு ஒத்திவைக்குமாறு கோரிக்கை வைத்தனர். ராகுல் காந்தியை மூன்று முறை அணுகியும், தேதியை மாற்றி வைக்க முடியவில்லை என வர்த்தக மற்றும் தொழில் சபையின் தலைவர் பிரிஜேஷ் கோயல் கூறியிருந்தார்.

வர்த்தக மற்றும் தொழில் சபையின்படி, கன்னாட் பிளேஸ் மற்றும் சாந்தினி சௌக் உள்ளிட்ட முக்கிய ஷாப்பிங் மையங்களைக் கொண்டே மத்திய மற்றும் பழைய டெல்லிப் பகுதிகளில் சுமார் 20 முக்கிய மொத்த மற்றும சில்லறை சந்தைகள் உள்ளன.

இதில் தினசரி ரூ.10 ஆயிரம் - ரூ.12 ஆயிரம் கோடி மதிப்பிலான வர்த்தகம் கேள்விக்குறியாகி உள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்தது. இந்த பேரணிக்கு சங்கம் எதிரானதல்ல என குறிப்பிடும் அவர், 10 லட்சம் பேர் பங்கேற்பதாக எதிர்பார்க்கப்படும் நிலையில், 15 ஆயிரம் - 20 ஆயிரம் வாகனங்கள் கூடுவதால் வணிக நடவடிக்கைகள் முடங்கிவிடும் அன்று சங்கம் அஞ்சுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க | '2024 மக்களவை தேர்தல் சட்டவிரோதம்... தேர்தல் ஆணையமே சொல்கிறது' - ராகுல் காந்தி கூறுவது என்ன?

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

ZEENEWS TRENDING STORIES