SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

வறுமை ஒழிப்பு... இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை குறைவு.. உலக வங்கி சொல்வது என்ன?

India Poverty Explained: இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக உலக வங்கி தெரிவிதுள்ளது. கடந்த 12 ஆண்டுகளில் 27.1 சதவீதத்தில் இருந்து 2.6 ஆக குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

Written By Umabarkavi K
Published: Oct 31, 2026, 01:36 PM IST | Updated: Oct 31, 2026, 01:50 PM IST
Join

India Poverty Explained: ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு வறுமை ஒழிப்பு மிகவும் முக்கியமானதாக இருக்கும். வறுமையால்  உணவு, கல்வி, மருந்துகள் என அடிப்படை விஷயங்கள் பாதிக்கப்படுகிறது. இதனால், அவர்களின் வாழ்க்கை தரமும் உயராமல் பாதிக்கப்பட்டு, ஏழ்மையான நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதை கருத்தில் கொண்டு, உலக நாடுகளில் வறுமையை ஒழிக்க அந்நாட்டின் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  இந்த நிலையில், இந்தியாவில் வறுமை  மற்றும் சமத்துவம் என்ற பெயரில் அறிக்கை ஒன்றை உலக வங்கி வெளியிட்டுள்ளது. இதில், இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது என உலக வங்கி குறிப்பிட்டு இருக்கிறது.

இந்தியாவில் ஏழ்களின் எண்ணிக்கை குறைவு

உலக வங்கி நாட்டு மக்களின் வருமானம் மற்றும் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட வாழ்க்கைத் தரம் போன்ற தரவுகளின் அம்சங்களை கணக்கில் கொண்டு  அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், இந்தியாவில் வறுமை குறைந்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

உலக வங்கியின் அக்டோபர் 2026 வறுமை மற்றும் சமத்துவ அறிக்கைப்படி, 2011 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில சுமார் 49.6 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் கடும் வறுமையில் வாழும் மக்களின் பங்கு  27.1 சதவீதத்தில் இருந்து 2.6 சதவீதமாக குறைந்துள்ளது.

2021-ஆம் ஆண்டின் வருமானம் திறன் அடிப்படையில், 2011 முதல் 2023ஆம் ஆண்டு வரை 12 ஆண்டுகளில், ஒரு நாளுக்கு ரூ.400க்கும் குறைவான வருவாயில் வாழ்ந்த மக்களின் விகிதம் 57.7 சதவீதத்தில் இருந்து 16.1 சதவீதமாக குறைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதன் மூலம் சுமார் 496 மில்லியன் மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. உலகிலேயே மிக வேகமாகக் வறுமை குறைந்த நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்வதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. இந்தியாவில் வறுமை குறைந்ததற்கு முக்கிய காரணங்களாக உலக வங்கி சில விஷயங்களை குறிப்பிட்டுள்ளது. அதன்படி,

ஆகியவை இந்தியாவில் வறுமை குறைய முக்கிய காரணங்களாக இருப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.  இந்தியாவில் வறுமை தொடர்ந்து குறையும் என கூறிய உலக வங்கி, ஆனால் அதன் வேகம் சற்று மந்தமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஒரு நாளைக்கு 4.20 டாலருக்கு (சுமார் ரூ.400) குறைவான வருமானம் ஈட்டும் நிலையில் உள்ள வறுமை விகிதம் 2026ஆம் ஆண்டு 14.2 சதவீதத்தில் இருந்து, 2028ஆம் ஆண்டுக்குள் 12.1 சதவீதமாக குறையும் என உலக வங்கி கணித்துள்ளது.

கிராமப்புறங்களில் அதிக வறுமை

நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் இரண்டு மடங்குக்கு மேல் அதிகமாக உள்ளது என்று உலக வங்கி கூறுகிறது. 2023ஆம்  ஆண்டின் அடிப்படையில், கிராமப்புறங்களில் வறுமை விகிதம் 19.3 சதவீதமாக உள்ளது. நகர்ப்புறங்களில் வறுமை விகிதம் 8.6 சதவீதமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும், இந்தியாவில் ஆண்களை விட பெண்கள் அதிகமானோர் வறுமையில் இருக்கின்றனர். உயர்கல்வி பெற்றவர்களுடன் ஒப்பிடும்போது, ​​கல்வி கற்காத மக்களிடையே வறுமை மூன்று மடங்கு அதிகமாக உள்ளது.

ஊதிய இடைவெளி அதிகரிப்பு

இந்தியாவில் வறுமை கணிசமாக குறைந்திருந்தாலும், நாட்டில் அதிக ஊதியம் பெறும் தொழிலாளர்களுக்கும், குறைந்த ஊதியம் பெறும தொழிலாளர்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகமாகவே உள்ளது. அதாவது, மேல்மட்ட 10 சதவீதம் தொழிலாளர்கள், கீழ்மட்ட 10 சதவீதம் தொழிலாளர்களை விட 13 மடங்கள் அதிகம் சம்பளம் பெறுவதாக உலக வங்கி சுட்டிக் காட்டியுள்ளது.  இந்தியாவின் ஏழை மக்களில் சுமார் 57 சதவீதம் பேர் , உத்தரப் பிரதேசம் முதல் மேற்கு வங்கம் வரை உள்ளதாக தெரிவித்துள்ளது. இளைஞர் வேலையின்மை அதிகரித்து வருவது ஒரு தொடர்ச்சியான கவலையளிப்பதாக உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது . 2026 மற்றும் 2027 நிதியாண்டுகளின் முதல் காலாண்டுகளுக்கு இடையில் இந்த விகிதம் 14.6 சதவீதத்திலிருந்து 15.9 சதவீதமாக அதிகரித்தது.

மத்திய அரசு சொல்வது என்ன?

இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், உலக வங்கி, நுகர்வு வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள வலுவான முன்னேற்றம், வேலைவாய்ப்பு அதிகரிப்பு (குறிப்பாகப் பெண்களிடையே, மற்றும் உணவு மானியங்கள் உள்ளிட்ட சமூக நலத் திட்டங்களின் விரிவாக்கம் ஆகியவற்றை முக்கிய உந்துசக்திகளாகக் குறிப்பிடுகிறது.  பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையின் கீழ், அரசு தொடர்ந்து மேற்கொண்டு வரும் கொள்கை முயற்சிகள் உறுதியான பலன்களைத் தந்து வருகின்றன. இவை அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கும், மேம்பட்ட பொருளாதார வாய்ப்புகளுக்கும் வலுவான அடித்தளத்தை அமைக்கின்றன. இதனால்தான், தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அரசாங்கம் மக்களின் நம்பிக்கையையும், அவர்களின் ஆதரவையும் பெற்றுள்ளது" என்றார்.

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.

ZEENEWS TRENDING STORIES