• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /கே.என். நேரு ஊழல் வழக்கில்... சீரியல் நடிகைக்கு தொடர்பா...? அவரே கொடுத்த விளக்கம்

கே.என். நேரு ஊழல் வழக்கில்... சீரியல் நடிகைக்கு தொடர்பா...? அவரே கொடுத்த விளக்கம்

திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு ஊழல் வழக்கில் சீரியல் நடிகைக்கு தொடர்பிருப்பதாக உறுதிப்படுத்தாத தகவல்கள் வெளியாகின. இந்தச் சூழலில், நடிகை ஜனனி அசோக்குமார் தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளார்.

Written BySudharsan G
Published: Oct 31, 2026, 03:23 PM IST|Updated: Oct 31, 2026, 03:50 PM IST
joinshare
கே.என். நேரு ஊழல் வழக்கில்... சீரியல் நடிகைக்கு தொடர்பா...? அவரே கொடுத்த விளக்கம்
Image Credit: Janani Ashokkumar | Image Source : Instagram / @janani_ashokkumar r

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
வங்கக்கடலில் உருவாகும் புதிய புயல்: நாளை முதல் தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை!

வங்கக்கடலில் உருவாகும் புதிய புயல்: நாளை முதல் தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை!

2

'தூஸ்ரா' படத்திற்கு எதிராக சவுரவ் கங்குலி வழக்கு.. பின்னணி என்ன? Explained

3

ரூ.200க்கு 10 மளிகைப் பொருட்கள்.. ரேஷன் அட்டை இல்லாமல் வாங்க முடியுமா? முக்கிய அறிவிப்பு

4

கே.என். நேரு ஊழல் வழக்கில்... சீரியல் நடிகைக்கு தொடர்பா...? அவரே கொடுத்த விளக்கம்

5

மீண்டும் அதிகரிக்கும் அகவிலைப்படி: ஜனவரி டிஏ உயர்வு எவ்வளவு? AICPI-IW கொடுத்த ஹிண்ட்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

நகராட்சித் துறையில் அதிகாரிகளின் பணியிட நியமனத்தில் ரூ.634 கோடி முறைகேடு புகார் தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு உட்பட பலருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கில் சீரியல் நடிகைகள் சிலருக்கும் தொடர்புகள் இருப்பதாக சமூக வலைதளங்களில் பேச்சுகள் எழுந்தன. இந்நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்து சீரியல் நடிகை ஜனனி அசோக் குமார் என்பவர் விளக்கம் அளித்துள்ளார். ரூ.634 கோடி ஊழல் வழக்கில் தனக்கு எவ்வித தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்! சொத்துக் கணக்கு தாக்கல் செய்ய காலவகாசம் நீட்டிப்பு

முற்றிலும் உண்மைக்கு மாறானவை

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த இரண்டு நாட்களாக X தளத்திலும், இன்ஸ்டாகிராமிலும் என்னைப் பற்றி பரவி வரும் குற்றச்சாட்டுகள் மற்றும் செய்திகள் குறித்து, குறிப்பாக ரூ.634 கோடி மோசடி விவகாரத்துடன் எனது பெயரை இணைத்துப் பேசுவது குறித்து விளக்கமளிக்க வேண்டியுள்ளது.

 

 

 

 

View this post on Instagram

 

 

 

 

 

 

 

 

 

 

 

A post shared by Janani Ashok Kumar (@janani_ashokkumar)

இந்த விவகாரத்தில் எனக்கு எவ்வித தொடர்பும் இல்லை. நான் எப்போதும் அரசியலில் ஆர்வம் காட்டாத நபர், அரசியல் சார்பற்றவர். நான் எந்தவொரு அரசியல் கட்சியுடனும் இணைந்து செயல்பட்டது இல்லை. அரசியல்வாதிகளுடன் தனிப்பட்ட நட்பைப் பேணியதும் இல்லை. என்னைப் பற்றி பரப்பப்படும் தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு மாறானவை. நான் வாழ்ந்து வரும் வாழ்க்கைக்கு நேரெதிரானது" என விளக்கமளித்தார்.

குற்றம் நிரூபிக்கப்படவில்லை...

"உண்மைகளை முதலில் உறுதிப்படுத்தாமல், பெயர் குறிப்பிடப்படும் நபரிடம் எந்த விளக்கமும் பெறாமல், அல்லது போதிய ஆதாரங்களை முன்வைக்காமல் இவ்வளவு தீவிரமான குற்றச்சாட்டுகளை எப்படி வெளியிடவும் பெரிதுபடுத்தவும் முடிகிறது?, இது நியாயமான" என கேள்வி எழுப்பி உள்ளார்.

துல்லியமான தகவல்களை வழங்க வேண்டிய பொறுப்பு ஊடகத்துறைக்கு உள்ளது என குறிப்பிட்டுள்ள அவர், தனது பெயர் அல்லது புகைப்படத்துடன் ஒரு குற்றச்சாட்டை மீண்டும் மீண்டும் பகிர்வது என்பது மக்கள் மத்தியில் தவறான எண்ணத்தை உருவாக்கும் என ஜனனி தெரிவித்துள்ளார். ஒரு விசாரணை என்றாலே அது குற்றம் நிரூபிக்கப்பட்டதாக அர்த்தமாகிவிடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கேள்வி எழுப்பும் நடிகை

மேலும் அவர், "ஊடகத்துறையில் இத்தனை வருடங்களாக கடினமாக உழைத்து, கண்ணியத்துடன் எனக்கான வாழ்க்கையை உருவாக்கி, எனது உண்மையான அடையாளத்தை பிரதிபலிக்கும் நற்பெயரைப் பெற்றுள்ளேன்.

எந்தவொரு பின்புலமும் இல்லாமல், எந்தவொரு ஆதரவும் இல்லாமல், கீழ்மட்டத்தில் இருந்து எனது வாழ்க்கையையும் தொழிலையும் கட்டமைத்தேன். சுதந்திரமான பெண்ணாக இருக்க முயற்சிப்பது, அடிமட்டத்தில் இருந்து தொழில் வாழ்க்கையை உருவாக்குவது, கண்ணியத்துடன் வாழ்வது ஆகியவற்றால் என்ன பயன்? என்ற கேள்வியை இந்த குற்றச்சாட்டுகள் என்னுள் எழுப்புகின்றன.

மேலும் படிக்க | பள்ளிகளுக்கு தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு! சாதி, மத கூட்டங்களுக்கு தடை

இணையத்தில் மீண்டும் மீண்டும் கூறப்படும் ஒரு பொய் செய்தி இவை அனைத்தையும் மறைத்துவிடும் என்றால் இதுவரை இப்படி இருந்தது எதற்கு?, அந்த நபரையும் உண்மையும் அறியாமல் இணையத்தில் பரப்பப்படுவதை மக்கள் மிக விரைவாக நம்பிவிடுகின்றனர்.

நான் நியாயப்படுத்த விரும்பவில்லை

என்னை அறிந்தவர்களுக்கு இந்த குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்பது தெரியும். என்னைப்பற்றி நான் தொடர்ந்து விளக்கிக்கொண்டே இருக்க வேண்டும் என்றும் உணர்வது மிகவும் வேதனையாகவும் மனச்சோர்வாகவும் இருக்கிறது. தற்போது எனது வாழ்க்கையை யாருக்கும் நியாயப்படுத்த நான் விரும்பவில்லை.

உண்மைகளை அறிந்துகொள்ள யாரும் அவகாசம் எடுத்துக்கொள்ளாமல், ஒரு பெண் மீது மிக எளிதாக முத்திரை குத்தி பழிசுமத்தும் இந்த சமூகத்தில் வாழ்வதுதான் எல்லாவற்றையும் விட மிகவும் தருவதாக உள்ளது" என வேதனை தெரிவித்துள்ளார்.

இணையவாசிகளுக்கு கோரிக்கை

"ஊடகங்களும், இணையவாசிகளும் எந்தவொரு தகவலையும் வெளியிடுவதற்கு அல்லது பகிர்வதற்கு முன்னர் அதை சரிபார்க்க வேண்டும் என்றும் அவருக்கு தொடர்பு இருப்பதாக தவறாக சித்தரிக்கும் பதிவுகளை திருத்த அல்லது நீக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். ஒரு குற்றச்சாட்டை தயவுசெய்து நிரூபிக்கப்பட்ட உண்மையாக கருத வேண்டாம்" என கேட்டுக்கொண்டுள்ளார்.

இன்னும் கடினமான காலகட்டத்தில் நிதானத்துடனும், நியாயத்துடனும் பரிவுடனும் துணை நின்ற அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் என தெரிவித்திருக்கும் அவர், அன்பும் ஆதரவும் நான் வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத அளவுக்கு எனக்கு மிகவும் முக்கியானது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அந்த அறிக்கையில் இறுதியாக, உண்மை முக்கியமானது, ஆதாரங்கள் முக்கியமானவை, அதுபோல் ஒரு தனிநபரின் கண்ணியமும் முக்கியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க | ஓய்வுபெற்ற சத்துணவு பணியாளர்களுக்கு குட் நியூஸ்! ஈமச்சடங்கு நிதியுதவி உயர்வு

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu