மத்திய பிரதேசத்தில் அஜ்னார் எனும் ஒரு ஆறு இருக்கிறது. குப்பையும் கூலமுமாக இருந்த இந்த ஆறு, தற்போது யாராலும் கண்டுபிடிக்க முடியாத வகையில் மாறியிருக்கிறது. அதற்கு காரணமாக 20 வயதான பிட்டு தபாஹி எனும் ஒரு இளைஞர் இருக்கிறார்.
இன்ஸ்டாகிராமை சமூக வலைதளமாக மட்டுமன்றி, பிரபலமாவதற்கான ஒரு தளமாகவும் பலர் உபயோகித்து வருகின்றனர். இதற்காக ஒரு சில பேர், புது ட்ரெண்டை கிரியேட் செய்வதும் வழக்கம். ஆனால், அப்படி உருவாக்கப்படும் பல ட்ரெண்ட்கள் பல சமயங்களில் அவருகளுக்கு மட்டும் நன்மை செய்பவையாக இருக்கலாம். ஆனால், இந்த இளைஞர், தனக்கு மட்டுமன்றி சுற்றுச்சூழலுக்கும் நன்மை பயக்கும் சேலஞ்ச் ஒன்றை உருவாக்கினார்.
மத்திய பிரதேசத்தை சேர்ந்த பிட்டு தபாஹி எனும் அந்த இளைஞர், சுற்றுச்சூழல் ஆர்வலராக இருக்கிறார். இவருக்கு, கிட்டத்தட்ட 7 லட்ச ஃபாலோவர்ஸ் வரை இருக்கின்றனர். இவர் நதிகளில் போடப்படும் பிலாஸ்டிக் குப்பைகளை எந்த அதிகாரிகளும் வந்து சுத்தம் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்காமல், அவரே இறங்கி சுத்தம் செய்து வருகிறார்.
ஒவ்வொரு ஃபாலோவர்க்கும், ஒரு கிலோ குப்பையை சுத்தம் செய்வேன் என்று இவர் ஆரம்பித்த இந்த ட்ரெண்ட் தற்போது இவருடைய அடையாளமாகவே மாறி விட்டது.
பல கண்டண்ட் கிரியேட்டர்கள், வெவ்வேறு சமூக நலன் சார்ந்த விஷயங்களை செய்கின்றனர். ஒரு சிலர், தங்களால் முடிந்த அளவிற்கு நிதியை திரட்டுவர், ஒருசிலர் சொந்த காசில் நல்லது செய்வர். அதைத்தான் இந்த இளைஞரும் செய்திருக்கிறார். குப்பையை அகற்ற இவரே தன் சொந்தப்பணத்தை திரட்டி, தானும் நதியில் இறங்கி சுத்தம் செய்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பாக, பிட்டு வேலையே செய்யாமல், சும்மா வைரலாக வேண்டும் என்பதற்காக இதை செய்து வருவதாக கூறி வந்தனர். இப்போது அவர், தான் எப்படி ந்தனதியை சுத்தம் செய்கிறேன் என்பதை வீடியோவாக பதிவிட்டு வருகிறார். ஒரு நதியை சுத்தம் செய்ய, கிட்டத்தட்ட 3 மாதங்கள் ஆனதாக கூறியிருக்கிறார். தான் வீடியோக்களை உருவாக்குவதை தாண்டி, நிறைய வேலைகளையும் செய்து வருவதாக கூறியிருக்கிறார்.
பிட்டுவை, ஆனந்த் மகேந்திரா சில மாதங்களுக்கு முன்பாக பாராட்டி இருந்தார். இவர், இந்த நதிகளை சுத்தம் செய்வதே சோஷியல் மீடியாவில் பிரபலமாவதற்குதான் என்று குற்றம் சாட்டப்படுவதாக குறிப்பிட்ட அவர், அவர் நதிகளை சுத்தம் செய்வதற்கான காரணம் அதுவாகவே இருந்தாலும் அதில் என்ன பிரச்சனை இருக்கிறது? என்று கேட்டிருந்தார். இதையும் பிட்டு தன் ப்ரொஃபைலில் ஹைலைட்டாக பதிவிட்டுள்ளார்.
இவ்வளவு உடல் உழைப்பை போட்டும் தனக்கு ஆரோக்கிய பிரச்சனை வந்ததாக பிட்டு தெரிவித்திருக்கிறார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசியிருந்த அவர், தன் கையால் குப்பைகஆளை சுத்தம் செய்வதால் அடிக்கடி நோய் தொற்று பாதிப்பு உண்டாவதாக கூறியிருக்கிறார்.
தான், நதியை சுத்தம் செய்வதற்காக ஒரு மெஷினை உருவாக்க வேண்டும் என்றும் ஆனால் அதற்கு தன்னிடம் காசு இல்லை என்றும் தெரிவித்திருந்தார். தான் ஒரு மாணவனாக இருப்பதால், தன் கையால் முடிந்த அளவுக்கு நதியை சுத்தம் செய்ய நினித்து அதனால் நோய்த்தொற்று வந்ததாக தெரிவித்துள்ளார். கைகளில் தோல் உரிய ஆரம்பித்ததாகவும் கூறியிருக்கிறார்.
இதை தான் செய்வதால், பலர் தன்னை பைத்தியம் என கூறுவதாகவும், ஒரு சிலர் என் வீட்டில் வந்து சுத்தம் செய் என்று தெரிவிப்பதாகவும் கூறியிருக்கிறார்.