பயணிகளுக்கு அதிர்ச்சி.. பேருந்து கட்டணம் அதிரடி உயர்வு.. கர்நாடக அரசு அறிவிப்பு!
Karnataka Bus Fare Hike: கர்நாடகாவில் பேருந்து கட்டணம் அதிரடியாக உயர்ந்துள்ளது. பேருந்து விலை ரூ.9 உயர்ந்துள்ளது. பேருந்து விலை உயர்வு நாளை (நவம்பர் 5) முதல் அமலுக்கு வருகிறது.
Karnataka Bus Fare Hike: அண்டை மாநிலமான கர்நாடகாவில் டி.கே.சிவக்குமார் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில், கர்நாடகாவில் அரசு பேருந்து கட்டணம் அதிரடியாக மாநில அரசு உயர்த்தி உள்ளது. பால் விலை உயர்வைத் தொடர்ந்து, மாநிலத்தில் பேருந்துக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மாநிலத்தின் நான்கு போக்குவரத்துக் கழகங்களுக்கும் (கே.எஸ்.ஆர்.டி.சி, பி.எம்.டி.சி, என்.டபிள்யூ.கே.ஆர்.டி.சி, கே.கே.ஆர்.டி.சி) டிக்கெட் கட்டணத்தில் பெரும் திருத்தத்தை செய்துள்ளது.
கர்நாடகாவில் பேருந்து கட்டணம் உயர்வு
கர்நாடகா அரசு கூறுகையில், கேஎஸ்ஆர்டிசி பேருந்துகளில் சராசரியாக 23 சதவீதம் கட்டணம் உயர்ந்துள்ளது. பிஎம்டிசி பேருந்துகளில் 33 சதவீதம் முதல் 35 சதவீதம் கட்டணம் உயர்ந்துள்ளது. திருத்தப்பட்ட இந்த கட்டணங்கள் நவம்பர் 4ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வருகிறது. பேருந்து கட்டணம் உயர்வு குறித்து அறிவித்த அமைச்சர் பைரதி சுரேஷ், இந்த கட்டண உயர்வு சாதாரண, விரைவு, நீண்ட தூர மற்றும் விமான நிலைய பேருந்து சேவைகளை உள்ளடக்கியது என்று கூறினார்.
கேஎஸ்ஆர்டிசி சாதாரண பேருந்து கட்டணங்கள் ரூ.9 வரை உயர்த்தப்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் மாநிலத்தில் பயணச்சீட்டு விலை ஒரே ஒரு முறை மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது என்றும், 2025-ஆம் ஆண்டிலும் கட்டணம் உயர்த்தப்பட்டது என்றும் போக்குவரத்து துறை அமைச்சர் பைரதி சுரேஷ் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: INS Brahmaputra விபத்து: 2 கடற்படை அதிகாரிகள் மீது நீதிமன்ற விசாரணை
புதிய கட்டணங்கள் என்ன?
- மெஜஸ்டிக் ரயில் நிலையத்தில் இருந்து நெலமங்களா வரை பேருந்து கட்டணம் முன்பு ரு.35 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.44 ஆக உயர்ந்துள்ளது.
- தொட்டபள்ளாப்பூரில் இருந்து மெஜஸ்டிக் வரை பேருந்து கட்டணமாக ரூ.38 ஆக இருந்த நிலையில், ரூ.47 ஆக உயரத்தப்பட்டுள்ளது.
- எம்.டி.சி பேருந்துகளில் ஒவ்வொரு வழித்தடத்திற்குமான குறைந்தபட்ச கட்டணம் ரூ.6-லிருந்து ரூ.10 ஆக உயர்ந்துள்ளது.
- ஹெப்பால்–கெம்பேகவுடா சர்வதேச விமான நிலைய பேருந்துக் கட்டணம் ரூ.175லிருந்து ரூ.200 ஆக உயர்ந்துள்ளது.
- கே.எஸ்.ஆர்.டி.சி எக்ஸ்பிரஸ் பேருந்துக் கட்டணம் ரூ.81-லிருந்து ரூ.100 ஆக உயர்ந்துள்ளது.
- நெடுந்தூரப் பேருந்து கட்டணம் ரூ.75-லிருந்து ரூ.90 ஆக உயர்ந்துள்ளது.
- பெங்களூருவில் இருந்து தும்கூர வரை ரூ.81-லிருந்து ரூ.100 ஆக உயர்ந்துள்ளது.
- பெங்களூருவில் இருந்து மைசூர் வரை ரூ.160-லிருந்து ரூ.197 ஆக உயர்ந்துள்ளது.
- பெங்களூருவில் இருந்து சிங்மகளூருக்கு பேருந்து கட்டணம் ரூ.295-லிருந்து ரூ.363 ஆக உயர்ந்துள்ளது.
பேருந்து கட்டண உயர்வுக்கு காரணம் என்ன?
தென்னிந்தியாவிலேயே கர்நாடகா மிகப்பெரிய போக்குவரத்து வலையமைப்பைக் கொண்டுள்ளது என்று கூறிய அமைச்சர் பைரதி சுரேஷ், அத்துறையின் செயல்பாடுகள் குறித்த முக்கிய புள்ளிவிவரங்களை வெளியிட்டார். மாநிலத்தின் நான்கு போக்குவரத்துக் கழகங்களில் மொத்தம் 26,125 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இது தென்னிந்தியாவிலேயே அதிகப்படியான பேருந்துகள் இங்கு இயக்கப்படுகின்றன. போக்குவரத்துக் கழகங்களில் 1,03,646 ஊழியர்கள் பணியில் உள்ளனர். தினமும் 24,179 வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டு, 1.24 கோடி பயணிகள் பயணிப்பதாக கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், உயர்ந்து வரும் டீசல் விலை, உதிரி பாகங்கள் மற்றும் பேருந்து பராமரிப்புக்கான அதிகரித்து வரும் செலவினம், மற்றும் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான ஊதிய திருத்தம் தேவைப்படுதல் ஆகியவையே பேருந்து கட்டணத் திருத்தத்திற்குக் காரணம் என்று கூறினார். கே.எஸ்.ஆர்.டி.சி, பி.எம்.டி.சி, என்.டபிள்யூ.கே.ஆர்.டி.சி, கே.கே.ஆர்.டி.சி என நான்கு போக்குவரத்து நிறுவனங்களும் ஆண்டுகக்கு சுமார் ரூ.2000 கோடி நஷ்டத்தை சந்திக்கின்றன என்றும் அவற்றின் நிதி நிலைத்தன்மையை உறுதி செய்ய கட்டணத்தில் திருத்தம் செய்வது அவசியம் என போக்குவரத்து துறை அமைச்சர் கூறினார்.
மேலும், பேருந்து கட்டணம் உயர்வுக்கு மகளிர் இலவச பயணமாக சக்தி திட்டம்ட காரணமில்லை என்று கூறிய அமைச்சர், இலவச பேருந்தின் இலவச பயணச்சீட்டுகளின் செலவை கர்நாடக அரசு அவர்களுக்குத் திருப்பிச் செலுத்துகிறது. இருப்பினும் பணம் செலுத்துவதில் சில நேரங்களில் தாமதம் ஏற்படுகிறது என்றும் கூறினார்.
மேலும் படிக்க: ரயிலில் இந்த நேரத்தில் மட்டும்தான் தூங்க வேண்டும்.. நீதிமன்றம் உறுதி!