SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

வாகன ஓட்டிகளே அலர்ட்! பாதியளவு ஹெல்மெட் அணிய முற்றிலும் தடை.. மாநில அரசு அதிரடி

Karnataka Half Helmet Ban: கர்நாடகாவில் இருசக்க வாகன ஓட்டிகள் பாதியளவு ஹெல்மெட் அணிய முற்றிலும் தடை விதித்து மாநில போக்குவரத்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த விதிமுறை ஜனவரி 1, 2027 முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்தின்போது அதிக காயங்கள் ஏற்படுவதால், கர்நாடகாவில் இருசக்கர வாகன ஓட்டிகள் பாதியளவு ஹெல்மெட் பயன்படுத்துவது முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது.

Written By Umabarkavi K
Published: Nov 17, 2026, 15:59 IST | Updated: Nov 17, 2026, 16:23 IST
Image Credit: Image Source: Chatgpt
Join

Karnataka Half Helmet Ban: நாட்டில் சாலை விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சாலை விபத்துகளால் உயிரிழப்புகளும் தொடர்ந்து நடந்து வருகிறது. சாலை விபத்துகளை தடுக்க மத்திய, மாநில அரசும் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, சாலை விதிகளை கடுமையாக்கி வருகிறது. இருந்தாலும், சாலை விபத்துகள் தொடர்ந்து அரங்ககேறி வருகிறது. இந்த நிலையில், கர்நாடக மாநில போக்குவரத்து காவல்துறை விதிமுறைகள் கடுமையாக்கி இருக்கிறது. அதாவது, 2027 ஜனவரி 1 முதல் பாதியளவு ஹெல்மெட் பயன்படுத்த முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது.

பாதியளவு ஹெல்மெட் பயன்படுத்த தடை

இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அரை ஹெல்மெட் அணிவதற்குத் தடை விதிக்கும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் அதனை அமல்படுத்தும் என்றும் கர்நாடக போக்குவரத்து அமைச்சர் பைரதி சுரேஷ் தெரிவித்தார்.  பாதியளவு ஹெல்மெட் தலையின் மேற்பகுதியை மட்டும் மூடி, முகம், தாடை, காதுகள் மற்றும் கழுத்தின் கீழ்ப்பகுதியை மூடவில்லை. முழு முக ஹெல்மெட்டை விட, பாதியளவு ஹெல்மெட் விலை மலிவானதாக இருந்தாலும், இது போதுமான பாதுகாப்பை வழங்குவதில்லை என போக்குவரத்துத்துறை அமைச்சர் பைரதி சுரேஷ் கூறியுள்ளார்.

பாதியளவு ஹெல்மெட் பயன்படுத்துவது விபத்தின்போது காயம் ஏற்பட வாய்ப்புள்ளது.  இதனால், பாதியளவு ஹெல்மெட் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது.  அரை ஹெல்மெட் விற்பனையாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் இருவரையும் அரசு குறிவைக்கும் என்று சுரேஷ் முன்னதாகக் கூறியிருந்தார். அக்டோபர் மாதம், போக்குவரத்துத் துறையும் உள்துறையும் அரை ஹெல்மெட்டுகளுக்குத் தடை விதிப்பது குறித்து சட்ட ஆலோசனை கோரி அரசிடம் ஒரு முன்மொழிவைச் சமர்ப்பித்தன. இதனை அடுத்து, அரை ஹெல்மெட் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது.   இதனால், கர்நாடகாவில் இருசக்கர வாகனம் ஓட்டுவோர், பின் பக்கம் அமர்வோர் பாதியளவு ஹெல்மெட் அணிய தடை விதிக்கப்படுகிறது. இதனால், ஜனவரி 1 முதல் முழு ஹெல்மெட் பயன்படுத்த வேண்டும் என போக்குவரத்து துறை கூறியுள்ளது.

மேலும் படிக்க: உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறியதா NBCC? டெல்லி அவென்யூ டவர்ஸ் ஏலத்தில் பரபரப்பு

ஓலா மற்றும் ஊபருக்கு மீட்டர் கட்டாயம்

மேலும்  செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் பைரதி சுரேஷ், ஓலா, ஊபர் உள்ளிட்ட அனைத்து டாக்சிகளும் மீட்டர்களைப் பொருத்த வேண்டும் என்று கூறினார். டாக்சி நிறுவனங்கள் அரசு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டுமே பயணிகளிடம் வசூலிக்க வேண்டும் என்றும், விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மீட்டர்களைக் கட்டாயமாக்குவதற்கான விதிகள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் சுரேஷ் கூறினார். செயலி அடிப்படையிலான டாக்சி நிறுவனங்களின் சுரண்டலில் இருந்து வாகன உரிமையாளர்களையும் ஓட்டுநர்களையும் பாதுகாப்பதே இதன் நோக்கம் என்று அவர் தெரிவித்தார். செயலி அடிப்படையிலான நிறுவனங்கள் சுரண்டுவதாகக் குற்றம் சாட்டி, டாக்சி உரிமையாளர்களும் ஓட்டுநர்களும் மீட்டர்களைக் கட்டாயமாக்குமாறு அரசிடம் கோரிக்கை விடுத்திருந்ததாகவும் அவர் மேலும் கூறினார்.

மேலும் படிக்க: 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பஸ்.. ரிஷிகேஷ் - பத்ரிநாத் நெடுஞ்சாலையில் கோர விபத்து! 4 பேர் பலி

அபராதம் உயர்வு

மேலும், நடைபாதைகளில் இருசக்கர வாகனங்களை ஓட்டுவதற்கான அபராதம் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சுரேஷ் கூறினார். முதல் முறை விதிமீறலுக்கு ரூ.5,000 அபராதமும், இரண்டாவது முறை விதிமீறலுக்கு ரூ.10,000 அபராதமும் விதிக்கப்படும். மூன்றாவது முறை விதிமீறினால், வாகனம் பறிமுதல் செய்யப்படும். இதற்கான விதிமுறைகளும் வகுக்கப்பட்டு வருவதாகவும், அரசின் ஒப்புதலுக்குப் பிறகு அவை அமல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

வியட்நாமைச் சேர்ந்த கிரீன் எஸ்.எம் நிறுவனத்தால் இயக்கப்படும் புதிய கிரீன் எஸ்.எம் டாக்சிகள் எதையும் மறு உத்தரவு வரும் வரை பதிவு செய்ய வேண்டாம் என போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார் . ஏற்கனவே 100 கிரீன் எஸ்.எம். டாக்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மறு உத்தரவு வரும் வரை இந்த நிறுவனத்தின் வேறு எந்த வாகனங்களையும் பதிவு செய்ய வேண்டாம் என்று அதிகாரிகளுக்குக் கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளோம் என்று அவர் கூறினார். உள்ளூர் ஓட்டுநர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு, முதலமைச்சர் டி.கே. சிவகுமாருடன் கலந்தாலோசித்த பிறகு, வாகன பதிவுகளுக்கு அனுமதி அளிப்பதா வேண்டாமா என்பது குறித்து அரசு முடிவெடுக்கும் என்று அவர் கூறினார். 

மேலும் படிக்க: பல பில்லியன் டாலர்களை இழக்கும் NVIDIA... ஆனால் இந்தியாவுக்கு ஜாக்பாட்? -காரணம் இது தான்
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

ZEENEWS TRENDING STORIES