SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

மம்தா பானர்ஜியை கொல்ல சதி? கத்தியால் குத்த முயன்ற பெண் கைது.. என்ன நடந்தது?

Mamata Banerjee Attack: மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜியை கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்ற பெண்ணை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். துர்கா பூஜை விழாவில் அந்த பெண் இந்த தாக்குதலில் ஈடுபட முயன்று இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Written By Umabarkavi K
Published: Oct 14, 2026, 03:50 PM IST | Updated: Oct 14, 2026, 04:39 PM IST
Join

Mamata Banerjee Attack: மேற்கு வங்க முதல்வராக கடந்த 15 ஆண்டுகளாக பதவி வகித்த அவர், 2026 சட்டமன்ற தேர்தலில் தோல்வி தழுவினார். மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் 80 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. அதே நேரத்தில், பவானிபூர் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி படுதோல்வியை சந்தித்தார்.  சட்டமன்ற தேர்தல் தோல்வியை தொடர்ந்து, திரிணாமூல் காங்கிரஸ் இரண்டாம் உடைந்தது. தற்போது மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது.  இப்படியான சூழலில், கொல்கத்தாவில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது.

மம்தா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்

கொல்கத்தாவில் உள்ள காளிகாட் பகுதியில் இருக்கும் தனது வீட்டிற்கு வெளியே மம்தா பானர்ஜி துர்கா பூஜை பந்தல் ஒன்றைத் திறந்து வைக்க வந்தார். அப்போது, திரிணாமூல் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கூடியிருந்தனர்.  அப்போது, அங்கிருந்த ஒரு பெண் மம்தா பானர்ஜியின் சேலையை இழுத்ததாக தெரிகிறது. உடனே கட்சி தொண்டர்கள் சுதாரித்து கொண்டு, அப்பெண்ணை பிடித்து சோதனையிட்டனர்.

அப்போது, அவரது ஆடைக்குள் கத்தி இருந்ததை கட்சித் தொண்டர்கள் கண்டுபிடித்தனர். இதுபற்றி அந்த பெண்ணிடம் கட்சி நிர்வாகிகள் கேட்க,  அவர் எந்த பதிலும் சொல்லவில்லை. இதனை அடுத்து,  மம்தா பானர்ஜியின் கட்சி தொண்டர்கள் அந்த பெண்ணை பிடித்து காளிகாட் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.  

அவரை ஒப்படைப்பதற்கு முன்பு, தொண்டர்கள் அவரைத் தரையில் தள்ளிப் பிடித்து விசாரித்தபோதும், குற்றம் சாட்டப்பட்ட அந்தப் பெண் எதிர்த்து நின்றார்.  இந்தச் சம்பவம் மாலை 6 மணியளவில் நிகழ்ந்துள்ளது. அப்போது அந்தப் பெண், மம்தா பானர்ஜியை ' பிஷி' (அத்தை) என்று அழைத்தவாறு அவரை நோக்கி  ஓடியதாகவும், அவர் மம்தா பானர்ஜி மீது பாய்ந்து விழ முயன்றதாகவும், பின்னர் சாலையில் படுத்துக்கொண்டு தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க: தீபாவளி போனஸ் அறிவிப்பு... 11 லட்சம் ஊழியர்களுக்கு குட் நியூஸ் - அமைச்சரவை ஒப்புதல்

மம்தாவின் உதவியாளரான மாநிலங்களவை எம்.பி. டோலா சென், அந்தப் பெண் போதைப்பொருள் பழக்கத்தில் இருந்ததாகவும், அவர் கையில் கத்தி வைத்திருந்ததாகவும் கூறினார். மேலும், அப்பெண் தன்னை மம்தா பானர்ஜியின் மருமகள் என்று கூறி கூட்டத்திற்குள் நுழைய முயன்றதாகவும் அவர் தெரிவித்தார்.

மம்தாவை கத்தியால் குத்த முயன்ற பெண் யார்?

இதுகுறித்து கொல்கத்தா காவல்துறை கூறுகையில், முன்னாள் முதலமைச்சர் தனது இல்லத்திலிருந்து வெளியே இருந்தபோது, ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அனுசுவா சாஹா என்பவர் அவரை எதிர்கொண்டதால், கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, பணியில் இருந்த காவல்துறையினரால் அப்பெண் கைது செய்யப்பட்டார். இதற்கிடையில், திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் புகார் அளித்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர் மீது தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக என  தெரிவித்துள்ளது.

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் சாகேத் கோகலே எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, "மது போதைக்கு அடிமையான ஒருவர் இன்று மம்தா பானர்ஜியின் இல்லத்திற்கு வந்து கத்தியால் அவரைத் தாக்க முயன்றார் Z+ பாதுகாப்பு பெற்றவரும், 3 முறை முதலமைச்சராக இருந்தவருமான ஒருவருக்குக் கூட பாதுகாப்பு இல்லாத  மாநிலமாக மேற்கு வங்கத்தின் நிலை இதுதான். இது பாஜகவின் திட்டமிட்ட சதியா?” என கேள்வி எழுப்பினார்.

மேலும் படிக்க: பண்டிகைக் காலத்தில் சர்க்கரை விலை உயர்வு: 14 லட்சம் டன் ஒதுக்கிய மத்திய அரசு! இனி விலை குறையுமா?

தொடர் தாக்குதல்

மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் பிரிவு உறுப்பினர்கள் பலமுறை தாக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம், கொல்கத்தாவின் ஷ்யாம்பஜார் பகுதியில் தனது கார் மீது ஒரு பெரிய கல் வீசப்பட்டதாகவும், அதனால் பல நாட்கள் நெஞ்சு வலி நீடித்ததாகவும் பானர்ஜி குற்றம் சாட்டினார்.

மேலும், மே மாதம் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்ப்டட சில நாட்களுக்கு பிறகு, கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜியின் கோட்டையாக கருதப்பட்ட தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் அவர் மீது கற்களும், முட்டைகளும் வீசப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், கடந்த வாரம் பருய்பூர் பூர்வா சட்டமன்ற உறுப்பினர் பிபாஸ் சர்தாரின் வாகனமும் தாக்கப்பட்டது ஒரு கும்பல் வாகனத்தைச் சூழ்ந்துகொண்டு, தன்னைக் கொன்றுவிடுவதாக மிரட்டியதோடு, வாகனத்தின் முன்பக்கக் கண்ணாடி மீது செங்கல்லை வீசியதாகவும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக அவர் கூறினார்.

மேலும் படிக்க: Explainer: டிரெண்ட் ஆகும் 'மக்கி ஜனதா கட்சி', கரப்பான் பூச்சியைத் தொடர்ந்து ஈக்கள்!! இதற்கும் CJI சூர்ய காந்த்தான் காரணமா?
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.

ZEENEWS TRENDING STORIES