SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

வறட்சியால் தவிக்கும் விவசாயிகள்.. உயிரை விட்ட 13000 பேர்... இது எங்க போய் முடியப் போகுதோ!

Maharashtra Drought Explained: மகாராஷ்டிராவில் கடும் வறட்சியால் 13000 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தரவுகள் வெளியாகி உள்ளது. கிட்டதட்ட ஒருநாளைக்கு 8க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பதாக சொல்லப்பட்டுள்ளது. ஏன் மகாராஷ்டிராவில் இந்தளவுக்கு வறட்சி ஏற்பட்டுள்ளது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.

Written By Umabarkavi K
Published: Oct 28, 2026, 06:25 PM IST | Updated: Oct 28, 2026, 08:46 PM IST
Join

Maharashtra Drought Explained:  உலக நாடுகளில் இயற்கை பேரழிவுகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, எல் நினோ தாக்கத்தால் உலக நாடுகள் பெரும் பிரச்னைகளை சந்தித்து வருகின்றன. அதற்கு இந்தியா விதிவிலக்கல்ல. எல் நினோ தாக்கத்தால் இந்தியாவில் ஒட்டுமொத்த வானிலையும் மாறி இருக்கிறது. போதுமான அளவு மழைப்பொழிவு இல்லாதது, இயல்புக்கு அதிகமான வெயில் போன்ற காரணங்களால் விவசாயிகள் கடும் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, வட மாநிலமான மகாராஷ்டிராவில் எல் நினோ தாக்கத்தால் போதிய அளவு பருவமழை பெய்யவில்லை. இதனால், மாநிலத்தில் கடுமையான வறட்சி நிலவுகிறது. மாநில அரரே 75 சதவீதம் பகுதிகளை வறட்சி பகுதியாக அறிவித்தது.

மகாராஷ்டிராவில் கடும் வறட்சி

1972ஆம் ஆண்டு ஏற்பட்ட வறட்சியை விட,  அதாவது 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மகாராஷ்டிராவில் வறட்சி நிலவி வருகிறது. மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள் 358 தாலுகாக்களில் 265 தாலுகாக்களை வறட்சி பாதித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இதனால், மகாராஷ்டிராவில் விவசாயிகள் கடுமையாக பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர். மகாராஷ்டிராவின் ஆரஞ்சு பழம் விளையும் பகுதியிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அமராவதியில் உள்ள ஆரஞ்சு பழத்தோட்டங்கள் அதிக அளவில் சேதம் அடைந்துள்ளது. 

அங்கு 5,000 ஹெக்டேர் பரப்பளவில் ஆரஞ்ச் மரங்கள் வெட்டப்பட்டுள்ளனர்.   மகாராஷ்ராவில் கரும்பு, பருத்தி, சோளம், கம்பு, அரிசி ஆகியவை பெருமளவில் பயிரிடப்படுகின்றன. மேலும்,  2024-25 ஆம் ஆண்டில் இந்தியாவின் திராட்சை உற்பத்தியில் 69% க்கும் அதிகமான பங்களிப்பை மகாராஷ்டிரா மட்டுமே வழங்கியது.  

மேலும் படிக்க: மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% டிஏ உயர்வு: மத்திய அமைச்சரவை ஒப்புதல், சம்பளம் எவ்வளவு உயரும்?

இங்கு திராட்சை, மாதுளை, மாம்பழம் மற்றும் வாழைப்பழம் ஆகியவற்றின் விளைச்சல் அதிகமாக இருக்கும். இந்தியாவின் பழ ஏற்றுமதியின் முக்கிய இடமாக இருக்கிறது. மேலும், வெங்காயம் உற்பத்தியலும் மகாராஷ்டிரா முதலிடத்தில் இருக்கிறது. இப்படியாக அத்தியாவசிய உணவுகளின் உற்பத்தி இங்கு பிரதானமாக இருக்கும் நிலையில், அங்கு வறட்சி நிலவி வருவதாக பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. வறட்சியால் விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

13000 விவசாயிகள் மரணம்

வறட்சியால் விவசாயிகள் விதைத்த அனைத்து பயிர்களும் கருகிவிட்டன. மழைப்பொழிவு குறைவாக இருந்ததால், குடிநீர் பற்றாக்குறையும் ஏறப்ட்டுள்ளது. அதோடு, கால்நடைகளுக்கான தீவனத்திற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வறட்சியால் கிணறுகள் வறண்டு இருக்கறிது. விவசாயிகள் கால்நடைகளை உயிருடன் வைத்திருக்க தங்களால் முடிந்தவற்றை செய்து வருகின்றனர். இந்த வறட்சியால் கிட்டதட்ட 13128 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலில் இது தெரியவந்துள்ளது.  

இந்த தகவலை அரசு வெளியிடவில்லை.  2022ஆம் ஆண்டு முதல் நடப்பு ஆண்டு ஜூன் மாதம் வரை 13128 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். தினசரி 8க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.  ஆனால், மாவட்ட வாரியாக புள்ளி விவரங்களை வழங்க அரசு மறுத்துள்ளது. 2026 ஜூன் 25 அன்று மகாராஷ்டிர சட்டமன்றத்தில் அளிக்கப்பட்ட ஒரு பதிலில், 2023-ஆம் ஆண்டில் மகாராஷ்டிராவில் 6,669 விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் தற்கொலை செய்துகொண்டதாக தேசிய குற்றப் பதிவுப் பணியகத்தின் தரவுகளை மாநில அரசு மேற்கோள் காட்டியது.  

மேலும் படிக்க: 5 மாதங்கள்.. 50 கைதிகள் தப்பி ஓட்டம்.. சட்டம் ஒழுங்கில் கோட்டை விடும் CM விஜய்! Explained

தற்கொலை செய்த விவசாயிகளில் நிதி உதவிக்கு தகுதியான 7850 விவசாயிகள் குடும்பம் தலா ஒரு லட்சம் பெற்றுள்ளன. நிவாரணம் மற்றும் மறுவாழ்வுத் துறையின் புள்ளிவிவரங்களின்படி, அரசு நிவாரணம் பெற 8,145 குடும்பங்கள் தகுதியானவை என குறிப்பிடப்பட்டுள்ளன.

இதில் 4,042 பேர் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 941 விண்ணப்பங்கள் குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.  அதே சமயம்க, 295 குடும்பங்கள் நிவாரணத்திற்கு காத்திருக்கின்றன. கிட்டத்தட்ட பத்தில் மூன்று விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதால், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இந்த உதவியைப் பெற முடியாமல் தவிக்கின்றனர். மேலும், தகுதியைச் சரிபார்ப்பதிலும், நிவாரணம் வழங்குவதிலும் ஏற்படும் தாமதங்கள் பல கேள்விகளை எழுப்புகின்றன.

விவசாயிகள் மரணத்திற்கு காரணம் என்ன?

மகாராஷ்டிராவில் வறட்சியால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, குடும்பங்களின் நிலுவையில் உள்ள கடன்கள், போதிய வருமானம் இல்லாதது, குழந்தைகளை வளர்க்கும் சுமை ஆகிய காரணங்களால்  விவசாயிகளின் தற்கொலைக்கு காரணமாக அமைந்ததாக கூறப்படுகிறது. கைம்பெண்களும், வயதானவர்களும் மன உளைச்சலையும் தற்கொலை செய்ய நேரிட்டதாக தெரிகிறது.இதற்காக அரசு இழப்பீடு கொடுத்தாலும், குடும்பத்தில் வறுமை தொடர்ந்து இருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.5000

மகாராஷ்டிராவில் ஏற்பட்ட வறட்சியால் பாதிக்கப்பட்ட 1.5 கோடி விவசாயிகளுக்கு தீபாவளி முன்பணமாக தலா ரூ.5,000 வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 33 சதவீதத்திற்கும் மேல் பயிர் சேதமடைந்த விவசாயிகளுக்கு ரூ.5,000 வரவு வைக்கப்பட உள்ளது. இதுவரை அக்ரிஸ்டாக் விவசாயி அடையாள எண்ணைப் பெறாத வன உரிமை பெற்ற விவசாயிகள், தங்களின் இ-கேஒய்சி (e-KYC) அடிப்படையில் மட்டுமே முன்பணம் பெறத் தகுதியுடையவர்கள் ஆவார்கள். நவம்பர் 8 அன்று கொண்டாடப்படவுள்ள தீபாவளிக்கு முன்னதாக, மகாராஷ்டிரா வறட்சி நிவாரணம் ரூ. 5,000 நேரடியாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது. இது விவசாயிகளுக்கு சற்று ஆறுதலாக இருக்கும் என நம்பப்படுகிறது.

மேலும் படிக்க: Explained: ஒரே மாதத்தில் 10 குழந்தைகள் மாயம்.. தவறவிடும் தமிழக காவல்துறை.. என்ன பிரச்னை?

(தற்கொலை எண்ணங்களால் அவதிப்படுபவர்கள் அல்லது மன அழுத்தத்தில் இருப்பவர்கள் உடனடியாக உதவி பெற தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: • சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் (சென்னை): 044-24640050 அல்லது 044-24640060; தமிழ்நாடு அரசின் மருத்துவ உதவி மையம்: 104; டெலி-மானஸ் (Tele-MANAS) உதவி எண்: 14416)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.

ZEENEWS TRENDING STORIES