• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /உலகம்
  • /ரயில் நேருக்கு நேர் மோதல்! 39 பேர் பலி..எண்ணிக்கை அதிகரிக்குமா..? அச்சத்தில் அரசு

ரயில் நேருக்கு நேர் மோதல்! 39 பேர் பலி..எண்ணிக்கை அதிகரிக்குமா..? அச்சத்தில் அரசு

ஸ்பெயினில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், 39 பேர் உயிரிழ்ந்துள்ள சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written ByYuvashree M
Published: Oct 28, 2026, 04:36 PM IST|Updated: Oct 28, 2026, 04:42 PM IST
joinshare
ரயில் நேருக்கு நேர் மோதல்! 39 பேர் பலி..எண்ணிக்கை அதிகரிக்குமா..? அச்சத்தில் அரசு
Image Credit: Spain Train Crash | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
November Bank Holidays : நவம்பர் மாதம் வங்கிகள் எப்போதெல்லாம் லீவ் தெரியுமா? விவரம் இதோ

November Bank Holidays : நவம்பர் மாதம் வங்கிகள் எப்போதெல்லாம் லீவ் தெரியுமா? விவரம் இதோ

2

ரயில் நேருக்கு நேர் மோதல்! 39 பேர் பலி..எண்ணிக்கை அதிகரிக்குமா..? அச்சத்தில் அரசு

3

பசும்பொன் பயணத்தை தவிர்க்கும் CM விஜய்? பின்னணியில் உளவுத்துறை.. தேவர் குரு பூஜை அரசியல்!

4

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% டிஏ உயர்வு: மத்திய அமைச்சரவை ஒப்புதல், சம்பளம் எவ்வளவு உயரும்?

5

Explained : ஆண்களுக்கு கருத்தடை மாத்திரை கண்டுபிடிப்பு! இதனால் வரும் பக்க விளைவுகள் என்ன?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

ஸ்பெயினில், இரு அதிவேக ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கோர விபத்தில் கிட்டத்தட்ட 39பேருக்கு மேல் உயிரிழந்திருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.

இரு அதிவேக ரயில்கள் மோதல்!

ஸ்பெயினின் டோலெடோ பிராந்தியத்தில்தான் இந்த கோர விபத்து ஏற்பட்டிருக்கிறது. இந்த இடத்தில் மாட்ரிட் நகரை சியுடாட் ரியல் நகருடன் இணைக்கும் ரயில்கள் சென்று வந்தன. அந்த ரயில் சேவைகளும் இந்த விபத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

ஸ்பெயினின் தலைநகர் மாட்ரிட்டில் இருந்து, அந்துலூசியா மற்றும் செவில் பகுதியை நோக்கி சென்ற இரண்டு அதிவேக பயணிகள் ரயில்கள் மோதிக்கொண்டதில், பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த அதிபயங்கர விபத்தானது, டோலிடோ மாகாணத்தின் உர்தா ரயில் நிலையத்திற்கு அருகே நடந்துள்ளன.

மேலும் படிக்க | Israel Election Result 2026: யாருக்கும் பெரும்பான்மை இல்லை! இஸ்ரேலில் 'கிங்மேக்கர்' ஆன அரபுக் கட்சிகள்

காலையில் ரயில்கள் இரண்டும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், ரயிலின் சில பெட்டிகள், தண்டவாளத்தை விட்டு விலகி, தலைகீழாக கவிழ்ந்தது. இதில், சுமார் 39 பேர் வரை உயிரிழந்திருப்பதாக முதற்கட்ட தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த இரண்டு ரயில்களையும் சேர்த்து, சுமார் 500க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்ததாக கூறப்படும் நிலையில், இதில் 70க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களூக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பயணிகளை மீட்கும் பணிகள் தீவிரம்..

விபத்து நடந்த தகவலை அறிந்து உடனடியாக சம்பவ இடத்துக்கு மீட்புக்குழுவினர் விரைந்துள்ளனர். அதோடு, இடிபாடுகளில் சிக்கியிருந்த பயணிகளை மீட்கும் பணிகளிலும் அவர்கள் தீவிரமாக இறங்கியிருக்கின்றனர். இந்த விபத்தால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உதவும் தற்காலிக சிகிச்சை மையங்கலை அமைக்கவும் அருகில் இருக்கும் உர்தா நகர பகுதி தயார் படுத்தப்பட்டுள்ளது என அந்த நகரத்தின் மேயர் மானுவல் கலாஃப் தெரிவித்திருக்கிறார்.

இந்த சோக சம்பவத்தையடுத்து , ஸ்பெயினின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், தன்னுடைய அன்றாட நிகழ்வுகள் அனைத்தையும் ரத்து செய்து விட்டு நிலவரத்தை கூர்ந்து கவனித்து வருகிறார்.

ரயில் சேவைகள் பாதிப்பு!

இந்த ரயில் விபத்தை கருத்தில் கொண்டு, அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதால், மட்ரிட் மற்றும் அந்தலூசியா உள்ளிட்ட பிராந்தியங்களுக்கு இடயேயான அனைத்து அதிவேக ரயில் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்துக்கு என்ன காரணம் என்பது குறித்து, தேசிய ரயில்வே உள்கட்டமைப்பு நிறுவனமான Adif மற்றும் சிவில் பாதுகாப்பு அமைப்புகள் தீவிர விசாரணையை நடத்தி வருகின்றன.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, அரசு இரங்கல் தெரிவித்துள்ளது. அதோடு, இடிபாடுகளில் இன்னும் பலர் சிக்கியுள்ளதால் இந்த உயிரிழப்புகள் அதிகரிக்குமோ எனும் அச்சமும் நிலவுகிறது.

மேலும் படிக்க | பெண்கள் டார்க்கெட்.. 38 பேரை கொன்று சமைத்து திண்ற சீரியல் கில்லர்.. 15 வருட கொடூரம்

Add Zee News as a Preferred Source
TAGS:
World