• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /பசும்பொன் பயணத்தை தவிர்க்கும் CM விஜய்? பின்னணியில் உளவுத்துறை.. தேவர் குரு பூஜை அரசியல்!

பசும்பொன் பயணத்தை தவிர்க்கும் CM விஜய்? பின்னணியில் உளவுத்துறை.. தேவர் குரு பூஜை அரசியல்!

Thevar Jayanthi: அக்டோபர் 30ஆம் தேதி தேவர் ஜெயந்தி மற்றும் குரு பூஜை விழா கொண்டாடப்பட உள்ளது. இந்தநாளில் பசும்பொனுக்கு செல்லாமல், முதல்வர் விஜய் நந்தனத்தில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு மரியாதை செலுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு பின்னணியில் உளவுத்துறையின் எச்சரிக்கையே காரணம் என தகவல் கசிந்துள்ளது.

Written ByUmabarkavi K
Published: Oct 28, 2026, 04:03 PM IST|Updated: Oct 28, 2026, 04:31 PM IST
joinshare
பசும்பொன் பயணத்தை தவிர்க்கும் CM விஜய்? பின்னணியில் உளவுத்துறை.. தேவர் குரு பூஜை அரசியல்!

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
November Bank Holidays : நவம்பர் மாதம் வங்கிகள் எப்போதெல்லாம் லீவ் தெரியுமா? விவரம் இதோ

November Bank Holidays : நவம்பர் மாதம் வங்கிகள் எப்போதெல்லாம் லீவ் தெரியுமா? விவரம் இதோ

2

ரயில் நேருக்கு நேர் மோதல்! 39 பேர் பலி..எண்ணிக்கை அதிகரிக்குமா..? அச்சத்தில் அரசு

3

பசும்பொன் பயணத்தை தவிர்க்கும் CM விஜய்? பின்னணியில் உளவுத்துறை.. தேவர் குரு பூஜை அரசியல்!

4

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% டிஏ உயர்வு: மத்திய அமைச்சரவை ஒப்புதல், சம்பளம் எவ்வளவு உயரும்?

5

Explained : ஆண்களுக்கு கருத்தடை மாத்திரை கண்டுபிடிப்பு! இதனால் வரும் பக்க விளைவுகள் என்ன?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Thevar Jayanthi: தமிழக அரசியல் வரலாற்றிலேயே முதல்முறையாக பசும்பொன் போவதை தவிர்க்கும் ஒரே முதல்வர் விஜய் தான் என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக முதல்வர் விஜய் பசும்பொன் செல்வதை தவிர்ப்பதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. ஏற்கனவே தவெகவுக்கு கிராமப்புறங்களில் செல்வாக்கு நகர்ப்புறங்களில் இருக்கும் அளவுக்கு இல்லை என்றும் இதில் பசும்பொன் செல்வதை தவிர்த்தால்  தவெகவுக்கு முக்குலத்தோர் வாக்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் எனவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

பசும்பொன்  முத்துராமலிங்க தேவர் குருபூஜை

தமிழக அரசியல் களத்தில் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்தது. குறிப்பாக, முக்குலத்தூர் சமூகத்தின் வாக்குகள் வெற்றியை தீர்மானிக்கும் காரணியாக இருக்கிறது. இதனால், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜைக்கு அரசியல் தலைவர்கள் ஆண்டுதோறும் சென்று வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30ஆம் தேதி தேவர் ஜெயந்தி அந்த சமூகத்தின் மக்களால் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தென்மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கானோர் பசும்பொன் (ராமநாதபுரம்) சென்று முத்துராமிலிங்கத் தேவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவது வழக்கம். அதேபோல, அரசியல் கட்சி தலைவர்களும் பசும்பொன் செல்வார்கள். அந்த வகையில், அக்டோபர் 30ஆம் தேத நாளை மறுநாள் தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ளது. 

இதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. தேவர் ஜெயந்திக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின்  அக்டோபர் 30ஆம் தேதி பசும்பொனுக்கு செல்கின்றனர். முதல்முறையாக முதல்வராக பொறுப்பேற்ற விஜய், பசும்பொன் செல்வார் என எதிர்பார்ப்புகள் இருந்தது.

மேலும் படிக்க: விவசாயிகளுக்கு ரூ.3.60 லட்சம் வரை மானியம்! தட்கல் மின் இணைப்பு பெற தமிழ்நாடு அரசு அழைப்பு!

பசும்பொன் செல்வதை தவிர்க்கும் முதல்வர் விஜய்?

ஆனால், முதல்வர் விஜய் முத்துராமலிங்க தேவரின் குருபூஜைக்கு பசும்பொன் செல்லவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. 1979-ல் எம்.ஜி.ஆர் முத்துராமலிங்க தேவர் குருபூஜையை அரசு விழாவாக்கினார். தொடர்ந்ருது,  2007-ல் கருணாநிதி நேரில் வந்தார். ஜெயலலிதா 13 கிலோ தங்க கவசம் கொடுத்தார். எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் என அனைத்து முதல்வர்களும் பசும்பொன்னுக்கு சென்று முத்துராமலிங் தேவரின் திருஉருவ சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

ஆனால் வரலாற்றிலேயே முதல்முறையாக பசும்பொன் போவதை தவிர்க்கும் ஒரே முதல்வர் விஜய் தான்  என விமர்சனங்கள் எழுத்தொடங்கியது. பசும்பொன் போவதை தவிர்த்துவிட்டு, சென்னை நந்தனத்தில் உள்ள முத்துராமலிங் தேவரின் சிலைக்கு மரியாதை செலுத்த முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: ஆறுகளில் நுரை பொங்க..ஷாம்பு, சோப்புதான் காரணம்! தவெக அமைச்சர் சர்ச்சை பேச்சு

பின்னணியில் உளவுத்துறை

முதல்வர் விஜய் பசும்பொன் செல்வதை தவிர்க்க உளவுத்துறையே காரணம் என கூறப்படுகிறது. இதுவரை முதல்வர் விஜய் எந்த ஒரு தலைவரின் சிலைக்கோ, நினைவிடத்திற்கோ நேரில் சென்று மரியாதை செலுத்தியது கிடையாது. இதனால், முதல்வர் விஜய் பசும்பொன் சென்றால் விமர்சனங்கள் எழும் என அவர் நினைத்ததாக கூறப்படுகிறது. மேலும், இம்மானுவேல் சேகரனார் ஜெயந்திக்கும் விஜய் நேரில் செல்லவில்லை.

இதனால், தேவர் ஜெயந்திக்கு மட்டும் விஜய் பசும்பொன் சென்றால் கேள்வி எழுப்பப்படும் என்றும் தலித் வாங்கு வங்கி அடிவாங்கும் என்றும் பார்க்கப்படுவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.  அதேபோல, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை அதிகரித்துள்ளதால், விஜய் அங்கு செல்வது சரியாக இருக்காது என்றும் இதனால்  பயணத்தை தவிர்க்க வேண்டும் என உளவுத்துறை தகவல் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் முதல்வர் விஜய் பசும்பொன் செல்வததை தவிர்க்கிறாராம்.  முதல்வர் விஜய்க்கு பதிராக முக்கிய அமைச்சர்கள் பசும்பொன் செல்வார்கள் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

மேலும் படிக்க: நீர் பாதுகாப்பை வலுப்படுத்த சென்னை நகரில் அக்டோபர் 27, 28 ஆம் தேதி இந்திய கடல்நீர் உப்புநீக்கத் திட்டங்கள் மாநாடு 2026
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Vijay Thalapathy