• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /இந்தியா
  • /ஈஷா மூலம் நேபாளம் சென்ற 80 பேர் நிலை என்ன? கண்ணீர் விட்ட ஜக்கி வாசுதேவ்..

ஈஷா மூலம் நேபாளம் சென்ற 80 பேர் நிலை என்ன? கண்ணீர் விட்ட ஜக்கி வாசுதேவ்..

Nepal Floods : நேபாளத்தில் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, இதில், பல நூறு பேர் உயிரிழந்துள்ளனர். அதிலும் குறிப்பாக, ஈஷா யோகா யாத்திரை குழுவில் இருந்து அங்கு சென்ற 80 பேரின் நிலை என்ன ஆனது என தெரியவில்லை என சத்குரு உருக்கமாக பேசியிருக்கிறார். இது குறித்த முழு தகவல் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written ByYuvashree M
Published: Aug 27, 2026, 14:01 IST|Updated: Aug 27, 2026, 14:13 IST
joinshare
ஈஷா மூலம் நேபாளம் சென்ற 80 பேர் நிலை என்ன? கண்ணீர் விட்ட ஜக்கி வாசுதேவ்..
Image Credit: Sadhguru | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
IPL 2027 மினி ஏலம்: 4 தரமான பவுலர்களை தட்டிதூக்க CSK பிளான்.. முஸ்தபிசுர் வேண்டாம்!

IPL 2027 மினி ஏலம்: 4 தரமான பவுலர்களை தட்டிதூக்க CSK பிளான்.. முஸ்தபிசுர் வேண்டாம்!

2

வெற்றி ஆடுகள் திட்டத்துக்கு விண்ணப்பிப்பது எப்படி? இலவசம் - முக்கிய அப்டேட்

3

டாஸ்மாக்கில் ரூ.1000க்கு மேல் மது வாங்கினால் யுபிஐ கட்டாயம்.. அமலுக்கு வந்த புதிய நடைமுறை

4

தவெக எம்.எல்.ஏ ஆபாச மெசேஜ் அனுப்பியதற்கு ஆதாரம் எங்கே? கள்ளக்குறிச்சி ஆட்சியர் வழக்கில் நீதிபதிகள் கேள்வி!

5

நவம்பர் 24 பிரம்மாண்ட சூப்பர்மூன் : எந்த நேரத்தில், எப்படி, எப்போது பார்ப்பது..?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Nepal Floods : நேபாளம்-திபெத் பகுதியில், நிலநடுக்கம் காரணமாக பனிப்பாறை உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. திபேத் எல்லையில் இருக்கும் Gyrirong மற்றும் கோசி நதியின் அங்கமாக இருக்கும் கோசி மற்றும் திருசூலி ஆறுகளில், வெள்ளப்பெருக்கு அசுர வேகத்தில் அடித்தது. இதில் சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாகவும், பல நூறு பேரை காணவில்லை என்றும் தெரிவிக்கப்படுள்ளது.

வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பு..!

இந்த பெரு வெள்ளத்தில், சுமார் 39க்கும் மேற்பட்ட கிராமங்கள் காணாமல் போயின. இயற்கையின் இந்த ருத்ர தாண்டவத்தால், நேபாளத்தின் வடக்கு எல்லையோர மாவட்டங்களான ரசுவா, நுவாகோட் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளன.

இந்த வெள்ளத்தில், சுமார் 1000த்துக்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளனர். 300க்கும் மேற்பட்ட இந்தியர்களையும் காணவில்லை என தகவல் வெளியாகி இருக்கிறது.

தமிழர்களின் நிலை என்ன?

தமிழக சட்டசபை, இன்று காலை 9.30 மணியளவில் மீண்டும் கூடியது. அப்போது நேபாள பெரு வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள் எத்தனை பேரை மீட்டுள்ளோம் என்று, பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேட்டார். இதற்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பதில் கூறினார். தமிழ்நாட்டை சேர்ந்த 103 பேர், நேபாளத்திற்கு சென்று இருப்பதாகவும் அவர்களை மீட்கும் நடவடிக்கையை எடுத்து வருகிறோம் என்று கூறினார். அவர்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றும், நேபாள பெருவெள்ளத்தில் தப்பி, அங்கிருக்கும் திமுரே முகாமில் தஞ்சமடைந்திருக்கும் தமிழகத்தை சேர்ந்த 20 பேரை சாலை வழியாக காத்மாண்டு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கூறியிருக்கிறார்.

 pic.twitter.com/joD3wYdAsc

— Sadhguru (@SadhguruJV) August 27, 2026

மேலும், தமிழர்கள் குறித்த விவரங்களை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், 34 தமிழர்கள் தொடர்பான தகவல்கள் கிடைக்கவில்லை என்றும் கூறியிருக்கின்றார்.

ஈஷா மூலம் சென்றவர்கள்..!

கோயம்புத்தூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டிருக்கும் ஈஷா யோகா மைய அறக்கட்டளையால், கைலாஷ் மானசரோவர் யாத்திரை ஏற்பாடு செய்யப்பட்டு 80 பேர் கொண்ட குழுவினர் நேபாளத்திற்கு சென்றுள்ளனர். அங்கு ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் அவர்கள் சிக்கிக்கொண்டதாக, சத்குரு வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இது குறித்து அவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவின் படி, ‘ஈஷா புனித நடைபயணங்கள்’ திட்டத்தின் ஒரு பகுதியாக சென்ற யாத்திரை குழுவினர் வெள்ளத்தில் சிக்கிய சம்பவம், வேதனை அளிப்பதாக கூறியிருக்கிறார்.

இந்த பயணத்தில், 21 குழுக்களாக பிரிந்து சென்ற நிலையில், இதில் 495 யாத்திரீகள் பத்திரமாக திரும்பி விட்டதாகவும், 743 பக்தர்கள் திபெத்திலும், 148 பேர் நேபாளத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார். இதில், 80 ஏர், கியிராங் குடிவரவு மையத்தில் இருந்ததாக கூறியிருக்கிறார்.

அப்படி அங்கு சென்ற 80 பேரில் 22 பேர் அமெரிக்காவை சேர்ந்தவர் என்றும், 12 பேர் கனடாவை சேர்ந்தவர் என்றும், 11 பேர் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள் என்றும், 9 பேர் UKவை சேர்ந்தவர்கள் என்றும்ம், 4 பேர் ஜெர்மனி, 3 பேர் பிரான்சு, 3 பேர் நேபாளம், 2 பேர் நெதர்லாந்து, 2 பேர் நியூசிலாந்து, 2 பேர் சிங்கப்பூர், 2 பேர் ஸ்பெயின், பின்லாந்து, ஹங்கேரி, இஸ்ரேல், லிதூனியா, பிலிபைன்ஸ், ரஷ்யா மற்றும் தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து தலா ஒருவரும் இதில் இருந்ததாக கூறியிருக்கிறார். இதில், 34 பேர் ஆண்கள் என்றும், 46 பேர் பெண்கள் என்றும் கூறியிருக்கிறார்.

Add Zee News as a Preferred Source
TAGS:
India