SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

அமைச்சரவையில் ஓய்வூதிய விதிகள் குறித்த அப்டேட்: மூத்த குடிமக்கள், பெண்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு என்ன மாறும்?

Modi Cabinet: புதிய விதிகளின்படி, மாற்றுத்திறனாளிகளுக்கு 79 வயதுக்குட்பட்டவராக இருந்தால் மாதம் ரூ. 375-ம், 80 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருந்தால் மாதம் ரூ. 625-ம் வழங்கப்படும்.

Written By Sripriya Sambathkumar
Published: Oct 15, 2026, 08:44 AM IST | Updated: Oct 15, 2026, 09:17 AM IST
Join

Modi Cabinet: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, 'தேசிய சமூக உதவித் திட்டத்தை' (NSAP) 2026-27 முதல் 2030-31 வரை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்க புதன்கிழமையன்று ஒப்புதல் அளித்தது. இத்திட்டத்திற்கான மொத்தச் செலவு ரூ. 53,428 கோடியாக இருக்கும்.

Pradhan Mantri Samajik Sahayata Yojana

இத்திட்டம் இனி 'பிரதம மந்திரி சமூக உதவித் திட்டம்' (Pradhan Mantri Samajik Sahayata Yojana) என்று அழைக்கப்படும். ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ஆகியவற்றில் செய்யப்படவுள்ள மாற்றங்களுக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. முதியவர்கள் மற்றும் விதவைகளுக்கான தற்போதைய ஓய்வூதியத் திட்டங்கள் மற்றும் குடும்ப நலத் திட்டம் ஆகியவற்றில் எந்த மாற்றமும் இருக்காது.

நாடு முழுவதும் உள்ள 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சுமார் 3.20 கோடி மக்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைவார்கள் என்று அரசு தெரிவித்துள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியத் தொகையில் மாற்றங்கள்

புதிய விதிகளின்படி, மாற்றுத்திறனாளிகளுக்கு 79 வயதுக்குட்பட்டவராக இருந்தால் மாதம் ரூ. 375 வழங்கப்படும்.
மாற்றுத்திறனாளி 80 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருந்தால் மாதம் ரூ. 625-ம் வழங்கப்படும்.
மாற்றுத்திறன் அளவுகோலையும் அரசு 80 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாகக் குறைத்துள்ளது. 
அதாவது, இத்திட்டத்தின் பிற நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் பட்சத்தில், 40 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட மாற்றுத்திறன் அளவு கொண்டவர்கள் இனி இதற்குத் தகுதி பெறுவார்கள்.
மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியத்தைப் பெறுவதற்கு இனி குறைந்தபட்ச வயது வரம்பு ஏதுமில்லை.
பிறப்பிலிருந்தே இதைப் பெற முடியும்.

மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதிய உதவியை எளிதாகப் பெறும் வகையில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் படிக்க | தீபாவளிக்கு முன் அதிகரித்த அகவிலைப்படி: கோல் இந்தியா ஒப்பந்த தொழிலாளர்களுக்கு VDA உயர்வு

சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்குப் புதிய பெயர்கள்

முக்கியத் திட்டம் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஓய்வூதியத் திட்டங்களுக்குப் புதிய பெயர்களைச் சூட்டுவதற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தற்போதைய திட்டம்புதிய பெயர்
தேசிய சமூக உதவித் திட்டம் (National Social Assistance Programme)பிரதான் மந்திரி சமூக உதவித் திட்டம்  (Pradhan Mantri Samajik Sahayata Yojana)
இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம் (Indira Gandhi National Old Age Pension Scheme)பிரதான் மந்திரி விருதாவஸ்தா ஓய்வூதியத் திட்டம் (Pradhan Mantri Vridhavastha Pension Yojana) 
இந்திரா காந்தி தேசிய விதவை ஓய்வூதியத் திட்டம்பிரதான் மந்திரி விதவா பென்ஷன் திட்டம்
இந்திரா காந்தி தேசிய மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம்பிரதான் மந்திரி திவ்யாங்ஜன் பென்ஷன் திட்டம்
தேசிய குடும்ப நலத் திட்டம் (National Family Benefit Scheme) பிரதான் மந்திரி குடும்ப நலத் திட்டம்

முதியோர் மற்றும் விதவைகளுக்கான ஓய்வூதியங்கள்

முதியோர் மற்றும் விதவைகளுக்கான ஓய்வூதியங்கள் தொடர்ந்து வழங்கப்படும். முதியவர்கள் மற்றும் விதவைகளுக்கான ஓய்வூதியத் திட்டங்கள் மற்றும் குடும்ப நலத் திட்டம் ஆகியவை எவ்வித மாற்றமுமின்றி தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

இந்தத் திட்டங்களின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஓய்வூதியத்திற்கான தகுதி மற்றும் தொகையில் அறிவிக்கப்பட்டுள்ள மாற்றங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியத் திட்டத்திற்கு மட்டுமே பொருந்தும்.

மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியத் திட்டத்தின் திருத்தப்பட்ட தகுதி விதிகள், பயனாளிகளின் எண்ணிக்கை மற்றும் புதிய உதவித் தொகை விகிதங்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டு, மூன்று மாதங்களுக்குள் நடைமுறைக்குக் கொண்டுவரப்படும்.

1995-ல் தொடங்கப்பட்ட NSAP

ஏழைக்குடும்பங்களுக்கு உதவும் வகையில் 'தேசிய சமூக உதவித் திட்டம்' (NSAP) ஆகஸ்ட் 15, 1995 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் அல்லது உதவி தேவைப்படுபவர்களுக்கு அரசு உதவ வேண்டும் என்று கூறும் அரசியலமைப்பின் 41-வது பிரிவின் அடிப்படையில் இத்திட்டம் அமைந்துள்ளது.

மேலும் படிக்க | தீபாவளி போனஸ் அறிவிப்பு... 11 லட்சம் ஊழியர்களுக்கு குட் நியூஸ் - அமைச்சரவை ஒப்புதல்

நாடு முழுவதும் தகுதியுள்ள நபர்களுக்கு உதவி கிடைப்பதை உறுதி செய்வதற்காக, இத்திட்டத்திற்கான முழு நிதியையும் மத்திய அரசே வழங்குகிறது.

ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ்

ரயில்வே ஊழியர்களுக்கு ரூ. 2,009 கோடி போனஸ் வழங்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கான ஊதியத்திற்கு இணையான 'உற்பத்தித் திறன் சார்ந்த போனஸ்' (PLB) வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் 11,40,770 ஊழியர்களுக்கு மொத்தம் ரூ. 2,009.61 கோடி போனஸ் தொகையாக வழங்கப்படும்.

பண்டிகைக் காலத்திற்கு முன்னதாகவே PLB-ஐ வழங்கும் வழக்கமான நடைமுறைக்கு இணங்க, துர்கா பூஜை மற்றும் தசரா விடுமுறைக்கு முன்னதாகவே தகுதியுள்ள 'நான்-கெஜட்டட்' (non-gazetted) ரயில்வே ஊழியர்களுக்கு இந்த போனஸ் வழங்கப்படும்.

மேலும் படிக்க | மம்தா பானர்ஜியை கொல்ல சதி? கத்தியால் குத்த முயன்ற பெண் கைது.. என்ன நடந்தது? 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

ஸ்ரீப்ரியா சம்பத், 6 ஆண்டுகளுக்கும் மேல் மீடியாவில் பணியாற்றி வருகிறார். இவர், வணிகம் மற்றும் தனிநபர் நிதி (Personal Finance) சார்ந்த கட்டுரைகளை எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர். மத்திய பட்ஜெட்டுகள், வங்கித் துறை, வருமான வரி, பங்குச் சந்தைகள் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரம், மத்திய அரசு ஊழியர்கள், ஊதியக் குழுக்கள் (Pay Commissions), ஓய்வூதியத் திட்டங்கள், ஓய்வூதியதாரர்கள், அரசின் முக்கியக் கொள்கைகள் மற்றும் சர்வதேச விவகாரங்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.எழுத்தை வாசகர்களோடு இணைவதற்கான ஒரு சிறந்த பாலமாகக் கருதும் இவர், அவர்களின் தேவைகளுக்கும் ஆர்வங்களுக்கும் முன்னுரிமை அளிக்கிறார். வாசகர்களுடன் இயல்பான, உண்மையான மற்றும் நேர்மையான தொடர்பைக் கொண்டிருப்பதே இவரின் முதன்மை இலக்காகும். பணி நேரத்தைத் தாண்டி, புத்தகங்கள் வாசிப்பது, புதிய இடங்களுக்குப் பயணம் செய்வது மற்றும் அறிவுசார் விவாதங்களில் பங்கேற்பது இவருக்கு மிகவும் பிடித்தமானவை.

ZEENEWS TRENDING STORIES