Explained : SBI வங்கி கணக்குகளின் விவரங்கள் லீக்! உங்கள் அக்கவுண்ட் பாதுகாப்பாக உள்ளதா?
SBI பங்குச்சந்தையில், இதுவரை தாக்கல் செய்திருக்கும் அறிக்கைகளின்படி, அந்த வங்கியில் கணக்கு வைத்திருந்த பல பேரின் தரவுகள் கசிந்திருப்பதாக தெரிகிறது. இதையடுத்து, இந்த விஷயத்தில் என்ன நடந்தது என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.
இந்தியாவின் மிகப்பெரிய வங்கிகளுள் ஒன்றாக இருக்கிறது State Bank of India. இந்த வங்கி தங்களின் கணக்கு தாரர்களின் தரவுகள் கசிந்துள்ளது என்பதை ஒப்புக்கொண்டுள்ளது.
கசிந்தது எப்படி?
SBIன் கூற்றின்படி, இந்த டேட்டா லீக் தாக்குதலால் தங்களது செயல்பாடுகளில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்த வங்கி ஹேக்கர் களில் எந்த விவரங்களையும் வெளியிடவில்லை. பங்கு சந்தையில் இது குறித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள ஒரு அறிக்கையில் SBIக்கு இந்த இணைய வழி தாக்குதல் குறித்தும் தரவு கசிவு குறித்தும் கடந்த அக்டோபர் 16ஆம் தேதி alert வந்திருப்பதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, அந்த அறிக்கையில் தனது அச்சுறுத்தல் புலனாய்வு சேவை வழங்குநரான பாதுகாப்பு இணையவ்ழி முகமை (Defence Cyber Agency) மற்றும் இந்திய கணினி அவசரகால பதிலளிப்பு குழு (CERT-In) ஆகியவை, வாடிக்கையாளர்களின் தரவுகள் கசிந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதை அடுத்து எச்சரித்ததாக SBI கூறியிருக்கிறது.
கசிந்த விவரங்கள் என்னென்ன?
SBIயின் ஆரம்பக்கட்ட ஆய்வின்படி, டார்க் வெப்பில் மொத்தம் 3,75,000க்கும் மேற்பட்ட பதிவுகள் கண்டறியப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அவற்றிலிருந்து, மொத்தம் 3897 வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட அடையாள தகவல்கள் அடையாளம் காணப்பட்டுள்லது. இதன் மூலமாக, ஹேக்கர்கள், எஸ்பிஐ கணக்கு வைத்திருப்பவர்களின் பெயர்கள், பதிவு எண்கள், பிறந்த தேதிக்கள், பாலினம், மின்னஞ்சல், முகவரிகள் மற்றும் வீட்டு முகவரிகள் போன்ற தகவல்களை திருடி, அவற்றை டார்க்ட் வெப்பில் பதிவேற்றம் செய்திருக்கின்றனர் என்பது அம்பலபட்டுள்ளது.
இந்த திருடப்பட்ட தரவுகளில் வங்கி கிளை, வாடிக்கையாளர் தகவல், லீட் ஐடிக்கள், கடன், லீட் பதிவுகள் உள்ளிட்ட மெட்டா டேட்டாக்கள் அடங்கும் என தெரிய வந்துள்ளது.
SBI விசாரணை!
தரவுகள் லீக் செய்யப்பட்டதை அடுத்து, இது குறித்த முழு விசாரணையையும், இதனால் வங்கிக்கும் வாடிக்கையாளர்களுக்கும் ஏற்படக்கூடிய தொடர்புடைய அபாயங்களை மதிப்பிடவும் விரிவான விசாரணை தேவையென SBI தெரிவித்துள்ளது.
தற்போது லீக் ஆகியிருக்கும் தரவுகளின் மதிப்பு மற்றும் அளவை விசாரிக்க, CERT-Inஆல் அங்கீகரிக்கப்பட்ட ஒரு சைபர் செக்யூரிட்டி நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான மதிப்பீடு தற்போது நடைப்பெற்று வருவதாக கூறப்படுகிறது.
இதற்கு முன்னரும் வந்த குற்றச்சாட்டு!
இதற்கு முன்னரும், எஸ்பிஐ மீது இணையவழி தாக்குதல் நடத்தியதாக, ஒரு ஹேக்கர் குழு பற்றிய செய்திகள் உலா வந்து கொண்டிருந்தன. அந்த குழுவின் பெயர், Siriusim. அடையாளம் தெரியாத குழுவாக செயல்படும் இவர்கள், ப்ரீச்ஃபோரம்ஸ் என்ற டார்க் வெப் தளத்தில், 375000 எஸ்பிஐ வாடிக்கையாளர்களின் பதிவுகளை தாங்கள் பெற்றதாக கூறியிருந்தது.
இருப்பினும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஹேக்கர் குழுவின் பெயரை எஸ்பிஐ வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உங்களுடைய SBI கணக்கு பாதுகாப்பாக உள்ளதா?
இந்த தரவுகள் லீக் ஆனதற்கு, உங்களுடைய வங்கி கணக்கும் ஹேக் செய்யப்பட்டுவிட்டது என்று காரணம் இல்லை. அல்லது, இதன் மூலம் உங்கள் பணம் இல்லாமல் போய் விட்டது என்றும் அர்த்தம் இல்லை. உங்களுடைய தனிப்பட்ட விவரங்கள் திருடப்பட்டிருப்பதற்கும், பணம் வங்கி கணக்கிலிருந்து எடுக்கப்பட்டிருப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது.
SBIன் விசாரணைகளில் இதுவரை தெரிய வந்துள்ளது என்னவென்றால், வாடிக்கையாளர்களின் தனி நபர் விவரங்கள் மற்றும் கடன் விவரங்கள் வெளியாகி இருக்கிறாது என்பதுதான். இதில் வாடிக்கையாளர்களின் பாஸ்வோர்டோ, PIN, OTP அல்லது வங்கி பண பரிவர்த்தனைகளின் விவரங்களோ இருக்காது.
இருப்பினும், வாடிக்கையாளர்கள் இதனால் ஏற்படும் பின்விளைவுகளை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். உங்கள் மொபைல் நம்பர், வங்கி கணக்கு எண் உள்ளிட்டவை லீக் ஆகி இருப்பதால் ஏமாற்று பேர்வழிகளால் உங்களுக்கு போன் செய்ய இயலும்.
இப்படி ஏற்கனவே பல முறைகேடுகள் நடைப்பெற்று வருகின்றன. அவர்கள், உங்களின் வங்கி கணக்கின் எண், வங்கியின் கிளை, உங்கள் மொபைல் எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் குறிப்பிட்டு, உங்கள் அடையாளத்தை சரிபார்க்க KYC விவரங்கள் வேண்டுமென கேட்டு, உங்களிடம் OTP கேட்கலாம். அவர்கள் உங்களை பற்றிய விவரங்களை தெரிவிக்கும் போது, “இவர்கள் ஏமாற்று பேர்வழிகள் இல்லை போல..நம்பலாம்” என்று உங்களுக்கு தோன்றலாம். அப்படி இல்லை என்றால் அவர்கள் உங்கள் வங்கி குறித்த பல்வேறு விவரங்களையும் கேட்கக்கூடும்.
மேலும் படிக்க | தம்மாம் விமான நிலையத்தில் திடீர் தாக்குதல்... இந்தியர் உயிரிழப்பு -என்ன நடந்தது?
இந்த லீக் எவ்வாறு பயன்படுத்தப்படும்?
ஃபிஷிங் செய்திகள்:
முறைகேடு செய்பவர்கள், வாடிக்கையாளரின் பெயர், தொடர்பு கொள்ளும் விவரங்களை குறிப்பிட்டு KYC verification அல்லது கடன் ஒப்புக்கொள்ளுதல் உள்ளிட்ட விவரங்களை குறிப்பிட்டு குறுஞ்செய்தியை அனுப்பலாம். இந்த மெசேஜ்களில், ஒரு பொய்யான இணையதளத்தின் லிங்க் இருக்கும். அதை நீங்கள் தொட்டால், கண்டிப்பாக உங்கள் வங்கியை ஹேக் செய்ய நீங்களே ஒரு வாய்ப்பு கொடுத்தது போல ஆகி விடும்.
பொய்யான போன் கால்:
உங்கள் தகவல்களை எடுத்த ஏமாற்றுப்பேர்வழி, வங்கியிலிருந்து அழைப்பதாக கூறியோ, அல்லது கடன் விபரங்கள் பற்றி பேச வேண்டும் என்று கூறியோ உங்களிடம் OTP கேட்க முற்படுவார். இந்த சமயத்தில் உடனடியாக அந்த கால்-ஐ கட் செய்து விட்டு உங்கள் வங்கி கிளையை தொடர்பு கொண்டு இது போன்று ஏதேனும் கால் செய்தீர்களா என்பதை கேட்க வேண்டும்.
இப்படி, உங்களுக்கு கடன் கொடுக்கிறோம் அல்லது வங்கி கணக்கு முடங்காமல் இருக்க ஓடிபு சொல்லுங்கள் என்று கூறி உங்களை ஏமாற்ற முற்படலாம். எனவே, இந்த சமயங்களில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
பாதுகாப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும்?
உங்களுடைய OTP, PIN நம்பர், பேங்க் பாஸ்வோர்ட் உள்ளிட்டவற்றை யாரிடமும் சொல்லக்கூடாது. அவர்கள் வங்கியிலிருந்து பேசுகிறேன் என கூறினாலும், வங்கிக்கு தொடர்பு கொண்டு அதை ஒரு முறை சரிபார்க்க வேண்டும்.
KYC அப்டேட், வங்கி கணக்கு முடக்கம், கடன், அவசர சரிபார்த்தல் உள்ளிட்டவை குறித்த மெசேஜ்கள் வரும் போது, அதை சந்தேகத்துடன் கையாள வேண்டும். உங்கள் மொபைலுக்கு எந்த தெரியாத லிங்க் வந்தாலும் அதனை தொடுவதை தவிர்க்க வேண்டும்.
உங்கள் வங்கி பண பரிவர்த்தனைகளை கண்காணிக்கவும்!
உங்கள் வங்கி பண பரிவர்த்தனைகளை எப்போதும் கண்காணித்துக்கொண்டே இருங்கள். ஏதேனும் தெரியாத பண பரிவர்த்தனை இருந்தால் உடனடியாக அதனை SBIக்கு ரிப்போர்ட் செய்யுங்கள்.
பாஸ்வோர்ட்:
இ-மெயில், பேங்கிங் ஆப் உள்ளிட்டவைக்கான பாஸ்வோர்ட்களை யாராலும் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு வையுங்கள்.