SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ராஜீவ்-க்கு துரோகமா..? கைநடுங்கிய சோனியா காந்தி.. கருணாநிதிக்கு பறந்த போன் கால்!

Sonia Gandhi Memoir: கருணாநிதி உடனான நட்பு குறித்து சுவாரஸ்ய தகவலைகளை சோனியா காந்தி தனது சுயசரிதையில் எழுதியுள்ளார். மேலும், திமுகவுடன் கூட்டணி வைப்பது குறித்து தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்.

Written By Umabarkavi K
Published: Nov 12, 2026, 11:44 AM IST | Updated: Nov 12, 2026, 11:55 AM IST
Join

Sonia Gandhi Memoir: 'பிலாங்கிங்: ஏ ஜர்னி ஆஃப் லவ்' (Belonging: A Journey Of Love) என்ற 544 பக்க சுயசரிதை புத்தக்கத்தை சோனியா காந்தி எழுதியுள்ளார்.  இந்த புத்தகம் நவம்பர் 10ஆம் தேதி வெளியானது. இந்த புத்தகத்தில் தனது இளம்வாழ்க்கை, ராஜீவ், இந்திரா காந்தி உடனான உறவு, அரசியல் பயணம் குறித்தும் சோனியா காந்தி எழுதியுள்ளார். இந்த நிலையில், இந்த புத்தகத்தில் கருணாநிதி உடனான நட்பு குறித்து தனது சுயசரிதையில் அவர் எழுதியுள்ளார். அதாவது, திமுக கூட்டணி எவ்வாறு அமைக்கப்பட்டது?மறைந்த முன்னாளள் முதுல்வர் கருணாநிதி உடனான நட்பு குறித்தும் சோனியா காந்தி தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்.

திமுக காங்கிரஸ் கூட்டணி

1991ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு திமுக - காங்கிரஸ் உறவில் விரிசல் ஏற்பட்டு, 2004ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திமுக - காங்கிரஸ் கூட்டணி உருவானது. அதே ஆண்டு மக்களவைத் தேர்தலில் அக்கூட்டணி வெற்றி பெற்றது.  இந்த நிகழ்வு குறித்து சோனியா காந்தி தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி,  2004 மக்களவை தேர்தலுக்கு முன்பாக திமுகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து தனக்குள் இருந்த மனப்போராட்டத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.  2000ஆம் ஆண்டின் முற்பகுதியில் பாஜக தலைமையிலான அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதற்கு அதுவே சரியான தருணமாகத் தோன்றியதாகக் குறிப்பிடுகிறார். இருப்பினும், தனக்கு திமுகவுடன் கூட்டணி அமைக்கும் எண்ணம் தனக்கு ஆழ்ந்த மனக்கலக்கத்தை ஏற்படுத்தியதாக குறிப்பிட்டார்.

மேலும் படிக்க: அப்பா செத்துருவாரு.. சோனியாவிடம் முன்பே வார்னிங் கொடுத்த ராகுல் காந்தி.. திடுக் உண்மை!

"தென்னிந்தியாவில் திமுக மிக முக்கியமான அரசியல் கட்சியாக இருந்தது. அப்போது பிரதமராக இருந்த அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான  பாஜக அரசு மீது அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்பட்ட முன்னாள் முதல்வர் கருணாநிதியை கூட்டணிக்குள் கொண்டு வருவது தான் எனக்கு மிகவும் சவாலானதாகவும், தனிப்பட்ட பணியாகவும் இருந்தது.  கூட்டணி தொடர்பாக திமுகவை அணுவதற்கு அதுவே சரியான தருணம் என கருதினேன்.  தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் சிலர் திமுகவுடன் கூட்டணி அமைக்க விரும்பியதைத் தன்னால் உணர முடிந்தது. ஆனால், அந்த விஷயத்தை தன்னிடம் எப்படி பேசுவது என்று அவர்களுக்கு தெரியவில்லை" என குறிப்பிட்டார்.

விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவு

மேலும், 1991 மக்களவை தேர்தல் களத்தில் திமுக தொண்டர்கள் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்ததாகவும், அந்த கட்சியைச் சேர்நத் சிலர் ராஜீவ் காந்திக்கு வெளிப்படையாக மிரட்டல் விடுத்ததாகவும் சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார். அப்போது பிரதமராக இருந்த குஜ்ரால் தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை காங்கிரஸ் திரும்ப பெற்றிருந்தது.

மேலும், ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாக ஜெயின் விசாரணை ஆணையத்தின் அறிக்கை 1997ல் வெளியான போது, படுகொலையில் ஈடுபட்ட தமிழர்களுக்கு மறைமுக ஆதரவு அளித்ததாக திமுக தலைவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதாக கூறினார்.  இதனால், கூட்டணி குறித்து பேசும் போது, அந்த வேதனையான நினைவுகள் மீண்டும் வந்து என்னை வாட்டியது.  

அப்போது நான் என்ன செய்வது? நான் திமுகவுடன் கூட்டணி அமைத்தால் அது ராஜீவ் காந்திக்கு செய்யும் துரோகமாக ஆகாதா? என்று என்னை நானே கேட்டுக்கொள்வேன் என சோனியா குறிப்பிட்டார். அதே நேரத்தில், பாஜகவுக்கு எதிராக அணியை வலுப்படுத்த இந்த கூட்டணி அவசியம் என்பதை ராஜீவ் காந்தி அறிந்திருந்தால், அவருக்கு இதற்கு ஒப்புக் கொண்டு இருப்பாரா என்ற கேள்வியும் தனக்குள் எழுந்ததாக தெரிவித்தார்.

மேலும் படிக்க: பிரதமர் பதவிக்கு OK சொன்ன சோனிய காந்தி.. கோபத்தில் ராகுல்.. 25 ஆண்டுகளுக்கு பிறகு வெளிவந்த உண்மை

கருணாநிதியுடன் தொலைபேசியில் உரையாடல்

இறுதியில் அரசியல் நோக்கத்திற்காக விரைவாக முடிவு எடுக்க வேண்டிய தருணத்தில் இருந்ததாக கூறிய சோனியா காந்தி, இது தொடர்பாக முதல்முறையாக கருணாநிதியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதை நினைவுகூர்ந்தார்.

"திமுகவுடன் பேச்சுவார்த்தையை தொடங்குவதற்காக கருணாநிதிக்கு நான் முதன்முதலில் தொலைபேசியில் அழைத்தபோது, என் இதயம் படபடத்துக் கொண்டிருந்தது. நான் நடுங்கிக் கொண்டிருந்தேன்" என குறிப்பிட்டார்.

இந்த உரையாடலில் மொழி வேறுபாடு இருந்தது. கருணாநிதிக்கு ஆங்கிலம் தெரியாது. எனக்கு தமிழ் தெரியாது என குறிப்பிடும் சோனியா காந்தி, இருப்பினும் இந்த உரையாடல் சுமுகமாக இருந்தது. கருணாநிதி நட்புடனுடனும், கவனமாகவும் பதிலளித்தார்.  இந்த உரையாடலுக்கு பிறகு, நேரில் சந்தித்து கூட்டணி அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டோம் என சோனியா நினைவு கூர்ந்தார்.  அந்த உரையாடலுக்கு பிறகு, கருணாநிதி மீதான தனது பார்வை மாறியதாக குறிப்பிட்ட அவர், அவர் மீது பெரியளவில் மரியாதை ஏற்பட்டது. மேலும், கலைத்துறையில் எங்கள் இருவருக்கும் ஆர்வம் இருந்ததையும் அறிந்து கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் படிக்க: ஜம்மு காஷ்மீர்: காணாமல் போன 2 சிறப்புக் காவல் அதிகாரிகள் சடலமாக மீட்பு, பயங்கரவாதிகள் வெறிச்செயல்
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

ZEENEWS TRENDING STORIES