கேரளாவில் விபத்து : லாரி மீது மோதிய கார்... 8 தமிழக இளைஞர்கள் பலி
Kerala Car Accident : தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு சுற்றுலாவுக்கு வந்த 8 இளைஞர்கள் திருச்சூர் மாவட்டத்தில் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக போலீசார் தெரிவத்துள்ளனர்.
Kerala Car Accident : உயிரிழந்த அனைவரும் மாணவர்கள் என கூறப்படுகிறது, இன்னும் உறுதியாகவில்லை. இளைஞர்கள் பயணித்த கார், திருச்சூர் மாவட்டம் கைப்பமங்கலம் கிராமத்திற்கு அருகே உள்ள பனம்பிக்குன்னு பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது. நேற்றிரவு 11.40 மணிக்கு இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
காரில் பயணித்த 8 பேருமே உயிரிழந்தனர். உள்ளூர் மக்கள், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், போலீசார் ஆகியோர் இணைந்து மேற்கொண்ட மீட்பு நடவடிக்கையின் மூலம் காரில் இருந்து இளைஞர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.
திருச்சூர் மருத்துவக் கல்லூரியின் பிணவறையில் 8 பேரின் உடல்களும் வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். விபத்துக்குள்ளான வாகனங்கள் தமிழ்நாடு பதிவெண் கொண்டதாகும்.
விபத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் தமிழ்நாட்டில் படிக்கும் மாணவர்கள் என சந்தேகம் எழுகிறது என போலீசார் தெரிவித்தனர். குருவாயூரில் இருந்து மாணவர்களின் கார் கொடுங்கலூர் நோக்கி பயணித்து கொண்டிருந்ததாக தெரிகிறது.