SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ச்சீ ஹோட்டல் பாத்ரூம்ல இப்படியா? சாப்பிட வந்தவங்களுக்கு ஷாக்..வைரலாகும் வீடியோ

ஒரு வைரல் வீடியோவில் ஹோட்டல் ஊழியர்கள் கழிவறையில் பாத்திரம் கழுவும் காட்சி பதிவாகி வைரலாகி வருகிறது. இதைவிட பேரதிர்ச்சியை ஏற்படுத்தியதே, அந்த ஹோட்டல் நிர்வகம் இதற்கு கொடுத்த விளக்கம்தான். அது என்ன என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

Written By Yuvashree M
Published: Oct 06, 2026, 01:38 PM IST | Updated: Oct 06, 2026, 01:49 PM IST
Join

ஏதேனும் உணவகத்திற்கு சென்று நாம் சாப்பிடும் போது, அங்கு நமக்கு பரிமாறப்படும் உணவு நன்றாக இருக்கிறதா, இல்லையா என்பதை நன்றாக கவனிக்கிறோம். அதைவிட, நாம் கூர்ந்து கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது. அதுதான், பாத்திரங்களின் தூய்மை. இங்கு ஒரு உணவகத்தில், பாத்திரங்களை பாத்ரூமில் ஊழியர் கழுவும் வீடியோ வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்த முழு தகவல் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

ஸ்வீட் கடையில் நடந்த சம்பவம்!

சமீபத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோ சத்தீஸ்கரில் இருக்கும் ஒரு பிரபலமான இனிப்பு உணவகத்தின் கழிவரையில் எடுக்கப்பட்ட வீடியோ என்பது தெரிகிறது. இந்த கடைக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர், இந்த வீடியோவை எடுத்திருக்கிறார்.

அந்த இனிப்பு கடையின் ஊழியர் ஒருவர், கழிவறையின் தரையில் பாத்திரங்களை போட்டு பாத்திரம் கழுவுவது அந்த வீடியோவில்  பதிவாகி இருக்கிறது. அந்த வீடியோ எடுத்துக்கொண்டிருக்கும் போதே வேறு ஒருவரிடம் கேமராவை திருப்பி இது குறித்து கேள்வி கேட்கிறார்.

மேலும் படிக்க | “ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார்”.. ஞானேஷ் குமாருக்கு எதிராக போராட்டத்தில் இறங்கிய INDIA கூட்டணி

“என்னது இது, ஏன் இந்த பாத்திரங்களை எல்லாம் கழிவறையில் வைத்து சுத்தம் செய்கிறீர்கள்?” என்று அந்த வாடிக்கையாளர் கேட்கிறார். அதற்கு அந்த நபர், “ஒரு அவசரகாலமாக இங்கு பாத்திரங்களை கழுவுகிறோம். இப்படித்தான், 2-3 நாட்களாக கழுவுகிறோம்” என்று கூறியிருக்கிறார்.
அதற்கு அந்த வாடிக்கையாளர், “இப்படித்தான் உங்கள் வீட்டிலும், பாத்திரத்தை பாத்ரூமில் போட்டு கழுவுவீர்களா?” என்ற கேள்வியை கேட்டார். இதற்கு பதிலளிக்க முடியாமல் அந்த நபர் திகைத்து நின்றார்.

உணவு பாதுகாப்பு துறைக்கு பறந்த புகார்!

வாடிக்கையாளர் எடுத்த அந்த வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து, இது உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளின் கவனத்திற்கும் சென்றிருக்கிறது. அவர்கள், அந்த உணவகத்திற்கு சென்று சோதனை நடத்தி இருக்கின்றனர்.

உணவகத்தின் பாத்திரங்கள் இல்லை..!

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் சோதனையின் போது, அந்த உணவகத்தை சேர்ந்தவர்கள் புது தகவலை கொடுத்திருக்கின்றனர். வீடியோவில் பதிவாகியிருந்த காட்சியில் இருந்த பாத்திரம், உணவகத்தில் வேலை பார்த்து வருபவர்களின் பாத்திரம்தான் என்று கூறியிருக்கின்றனர். அவர்கள், உணவு சாப்பிட்ட பிறகு தங்கள் பாத்திரங்களை அங்கு சென்று கழுவியதாகவும், அவை ப்ரெஷர் குக்கர், உள்ளிட்ட சில பாத்திரங்கள் என்றும் கூறியிருக்கின்றனர்.

இது குறித்து அந்த உணவகத்தின் மேலாளர் பேசுகையில், ஊழியர்களுக்கான உணவு மெயின் கிளையில் இருந்து வரும் என்றும், அதை அங்கிருக்கும் ஊழியர்கள் தாமதமாக சாப்பிடுவார்கள் என்பதால் அவர்கள் அதை பிரஷர் குக்கரில் போட்டு சுடவைத்து சாப்பிட்டிருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அந்த பாத்திரங்களை அன்றே, மெயின் கிளைக்கு அனுப்ப வேண்டும் என்பதால், பாத்திரம் கழுவும் ஊழியர்கள் அதனை கழிவறையில் வைத்து கழுவியதாகவும், வெளியில் தண்ணீர் வராததால் அவர்கள் இதை செய்திருக்கலாம் என்றும் கூறினார்.

இது குறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில் இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தி வருவதாக கூறியிருக்கின்றனர்.

மேலும் படிக்க | 63% அகவிலைப்படி: இன்று வருகிறதா டிஏ உயர்வு அறிவிப்பு? அரசு ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்?

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.

ZEENEWS TRENDING STORIES