• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /இந்தியா
  • /181 தொகுதிகள் கேட்ட காங்கிரஸ்! கூட்டணியில் புதிய சிக்கல்.. லக்னோ சந்திப்பு வெற்றி பெறுமா?

181 தொகுதிகள் கேட்ட காங்கிரஸ்! கூட்டணியில் புதிய சிக்கல்.. லக்னோ சந்திப்பு வெற்றி பெறுமா?

UP Elections 2027 News Tamil: 2027 உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு SP-காங்கிரஸ் கூட்டணி தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. காங்கிரஸ் 181 தொகுதிகளை கோரியதாக அகிலேஷ் யாதவ் தெரிவித்த நிலையில், சபா தரப்பு 50 முதல் 60 தொகுதிகளுக்கு மேல் வழங்க தயக்கம் காட்டுகிறது. இரு கட்சிகளும் பாஜகவை தோற்கடிப்பதே முக்கிய இலக்கு என வலியுறுத்தினாலும், தொகுதி ஒதுக்கீடு தொடர்பான இறுதி முடிவு அரசியல் ஆர்வத்தை அதிகரித்துள்ளது.

Written ByShiva Murugesan
Published: Nov 16, 2026, 17:31 IST|Updated: Nov 16, 2026, 17:36 IST
joinshare
181 தொகுதிகள் கேட்ட காங்கிரஸ்! கூட்டணியில் புதிய சிக்கல்.. லக்னோ சந்திப்பு வெற்றி பெறுமா?
Image Credit: ANI | Congress Demands 181 Seats, SP Faces Tough Alliance Challenge

About the Author

Shiva Murugesan

Shiva Murugesan

டிஜிட்டல் ஊடகத்துறையில் அனுபவம் வாய்ந்த செய்தி நிபுணர் மற்றும் இதழாளர். தரவு அடிப்படையிலான செய்திகள் (Data-driven news), எஸ்சிஓ (SEO) உத்திகள் மற்றும் டிஜிட்டல் வளர்ச்சி மேலாண்மையில் (Digital Growth Management) நிபுணத்துவம் பெற்றவர். தற்போது முன்னணி ஊடக நிறுவனத்தில் செய்தி மேலாண்மை மற்றும் டிஜிட்டல் தளங்களை வழிநடத்தி வருகிறார்.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
CSK அணிக்கு பென் ஸ்டோக்ஸ் ஏன் சரியான ஆப்ஷன்...? எவ்வளவு கோடி வரை ஏலம் கேட்கலாம்? Explained

CSK அணிக்கு பென் ஸ்டோக்ஸ் ஏன் சரியான ஆப்ஷன்...? எவ்வளவு கோடி வரை ஏலம் கேட்கலாம்? Explained

2

முதலீட்டாளர்கள் மாநாடு: குமரி முதல் கொங்கு வரை புதிய தொழிற்சாலைகள்.. 66000 பேருக்கு வேலை

3

UP Elections 2027: தேர்தல் கூட்டணியில் விரிசலா? "நாங்கள் பிச்சைக்காரர்கள் அல்ல" -வெடித்த காங்கிரஸ் எம்.பி!

4

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம்..தலைமை செயலாளர் மீது உதயநிதி ஸ்டாலின் புகார்!

5

திருவண்ணாமலைக்கு ஆந்திராவிலிருந்து ரயில் இருக்கு, சேலத்திலிருந்து இல்லை!! வலுக்கும் கோரிக்கை

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

UP Elections 2027 News Tamil: உத்தரப்பிரதேச அரசியலில் 2027 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சமாஜ்வாதி கட்சி (SP) மற்றும் காங்கிரஸ் கூட்டணி குறித்து பரபரப்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றும் இலக்குடன் இரு கட்சிகளும் இணைந்து செயல்படத் தயாராக இருந்தாலும், தொகுதி பங்கீட்டு விவகாரம் தற்போது பெரிய சவாலாக மாறியுள்ளது. குறிப்பாக காங்கிரஸ் 181 தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருப்பது கூட்டணிக்குள் புதிய அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

181 தொகுதிகளை கேட்கும் காங்கிரஸ் - சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ்

தனியார் ஊடக லீடர்ஷிப் சம்மிட் நிகழ்வில் பேசிய சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் 181 சட்டமன்றத் தொகுதிகளை கோரியிருப்பதாக வெளிப்படையாக தெரிவித்தார். இந்த தகவல் வெளியான பிறகு, இரு கட்சிகளும் எந்த வகையான சீட் ஷேரிங் ஒப்பந்தத்தை உருவாக்கப் போகின்றன என்பது அரசியல் வட்டாரங்களில் முக்கிய கேள்வியாக மாறியுள்ளது.

இந்த பரபரப்புக்கு மத்தியில் நவம்பர் 17 முதல் லக்னோவில் இரு கட்சிகளின் உயர் மட்ட தலைவர்கள் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையைத் தொடங்க உள்ளனர். இந்த சந்திப்பு கூட்டணியின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கிய கட்டமாக பார்க்கப்படுகிறது.

கார்கே இல்லத்தில் ஆலோசனை:

லக்னோவில் நடைபெறவுள்ள முக்கிய ஆலோசனைக்கு முன்பாக, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே இல்லத்தில் டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ராகுல் காந்தியும் கலந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசியல் வட்டாரங்களின் தகவலின்படி, காங்கிரஸ் போட்டியிட விரும்பும் 181 தொகுதிகளின் பட்டியலை ஏற்கனவே சமாஜ்வாதி கட்சியிடம் ஒப்படைத்துள்ளது. இனி ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி வாய்ப்பு, சமூக சமன்பாடுகள் மற்றும் உள்ளூர் அரசியல் நிலவரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் விவாதங்கள் நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் படிக்க - கடும் கோபத்தில் சீக்கியர்கள்.. சோனியா காந்தியின் புத்தகம் எரிப்பு.. நடந்தது என்ன?

எங்கள் இலக்கு பாஜகவை தோற்கடிப்பதுதான் -காங்கிரஸ்

உத்தரப்பிரதேச காங்கிரஸ் பொறுப்பாளர் ராஜேந்திர பால் கவுதம், கூட்டணியின் முக்கிய நோக்கம் பாஜகவை தோற்கடிப்பதே என்று வலியுறுத்தியுள்ளார். சீட் எண்ணிக்கையை மையமாகக் கொண்டு அரசியல் நடத்துவதற்குப் பதிலாக, வெற்றியை உறுதி செய்யும் வகையில் இரு கட்சிகளும் செயல்பட வேண்டும் என்பதே காங்கிரஸின் நிலைப்பாடாக உள்ளது எனக் கூறியுள்ளார்.

உத்தரப்பிரதேச காங்கிரஸ் தலைவர் ஆராதனா மிஷ்ரா மோனா, 181 தொகுதிகள் குறித்த தகவலை உறுதி செய்ய முடியாது என்றாலும், மாநிலத் தலைவர்களிடமிருந்து பரிந்துரைகள் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

2024 லோக்சபா தேர்தல் வெற்றி

2024 மக்களவைத் தேர்தலில் INDIA கூட்டணி எதிர்பார்த்ததைவிட சிறப்பாக செயல்பட்டதாக காங்கிரஸ் கருதுகிறது. அதனால் 2027 சட்டமன்றத் தேர்தலிலும் கூட்டணியின் வலிமை அதிகரிக்கும் என்ற நம்பிக்கை அக்கட்சியிடம் உள்ளது. அதன் காரணமாகவே அதிக தொகுதிகளில் போட்டியிட்டு தன்னுடைய அரசியல் இருப்பை மாநிலத்தில் மீண்டும் வலுப்படுத்த காங்கிரஸ் திட்டமிட்டு வருவதாக அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.

50 இடங்கள் கொடுப்பதே பெரிய விஷயம்: சமாஜ்வாதி எம்.பி. காட்டம்

மற்றொரு பக்கம், சமாஜ்வாதி கட்சியின் உள்ளகத் தகவல்களின்படி, காங்கிரஸுக்கு 50, 60 தொகுதிகளுக்கு மேல் வழங்குவதில் கட்சி ஆர்வம் காட்டவில்லை. சில சபா தலைவர்கள், காங்கிரஸின் 181 தொகுதி கோரிக்கையை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

சபா எம்.பி. சிவ்பால் சிங் பட்டேல், காங்கிரஸுக்கு 50 தொகுதிகளை வழங்கினால்கூட அது பெரிய விஷயமாக இருக்கும் என கருத்து தெரிவித்துள்ளார். கடந்த தேர்தல் முடிவுகளை சுட்டிக்காட்டி அவர் இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.

2017 தேர்தல் அனுபவம்: எச்சரிக்கையுடன் காய் நகர்த்தும் அகிலேஷ் யாதவ்

முந்தைய உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தனியாக போட்டியிட்டு வெறும் 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. மேலும் வெறும் 4 தொகுதிகளில் மட்டுமே இரண்டாம் இடத்தைப் பிடித்தது.

2017 ஆம் ஆண்டு சமாஜ்வாதி கட்சி மற்றும் காங்கிரஸ் கூட்டணியாக போட்டியிட்டபோதும், 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் வெறும் 7 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த புள்ளிவிவரங்களே தற்போது சபாவின் எச்சரிக்கையான அணுகுமுறைக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகின்றன.

ஓவைசி - சந்திரசேகர் ஆசாத் கூட்டணி SP-கட்சிக்கு சவாலாக மாறுமா?

உத்தரப்பிரதேசத்தில் ஓபிசி வாக்காளர்களின் ஒரு பகுதியை கவரும் முயற்சிகள் அதிகரித்துள்ளன. அதேசமயம், நகினா எம்.பி. சந்திரசேகர் ஆசாத் மற்றும் AIMIM தலைவர் அசாதுதீன் ஒவைசி இணைந்து உருவாக்கியுள்ள "சமாஜிக் பரிவர்த்தன் மோர்ச்சா" கூட்டணியும் அரசியல் சமன்பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

இதனால் எதிர்க்கட்சிகளின் வாக்குகள் சிதறாமல் இருக்க வேண்டும் என்ற கவலை சமாஜ்வாதி கட்சியிடம் காணப்படுகிறது. அதனால்தான் காங்கிரஸுடன் பொதுவெளியில் மோதலை தவிர்க்கும் வகையில் பேச்சுவார்த்தையை முன்னெடுக்க விரும்புகிறது.

நவம்பர் 17 லக்னோ பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படுமா

நவம்பர் 17 முதல் லக்னோவில் நடைபெறவுள்ள ஆலோசனை கூட்டங்கள் அரசியல் ரீதியாக மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளன. காங்கிரஸ் 100-க்கும் குறைவான தொகுதிகளில் சமரசம் செய்ய தயாராகுமா அல்லது வெற்றி வாய்ப்பு, சமூக ஆதரவு, வேட்பாளர் பலம் போன்ற அம்சங்களை மையமாகக் கொண்டு புதிய தொகுதி பங்கீடு சூத்திரம் உருவாகுமா என்பது விரைவில் தெளிவாகும்.

2027 உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கான எதிர்க்கட்சிகளின் சக்தி சமநிலையை இந்த பேச்சுவார்த்தைகளே நிர்ணயிக்கக்கூடும் என்பதால், அரசியல் வட்டாரங்கள் முழு கவனத்தையும் லக்னோ நோக்கி திருப்பியுள்ளன.

மேலும் படிக்க - காங்கிரஸுக்கு காத்திருக்கும் ஆப்பு! வரலாறு காணாத அளவில் குறைந்த நன்கொடை.. என்ன காரணம்?

Add Zee News as a Preferred Source
TAGS:
Election