• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /திருவண்ணாமலைக்கு ஆந்திராவிலிருந்து ரயில் இருக்கு, சேலத்திலிருந்து இல்லை!! வலுக்கும் கோரிக்கை

திருவண்ணாமலைக்கு ஆந்திராவிலிருந்து ரயில் இருக்கு, சேலத்திலிருந்து இல்லை!! வலுக்கும் கோரிக்கை

தமிழகத்தின் மிக முக்கியமான ஆன்மீகத் தலங்களில் ஒன்றாக திருவண்ணாமலை இருந்தாலும், சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட சேலம், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, உதகை மற்றும் தருமபுரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து திருவண்ணாமலைக்கு நேரடி ரயில் வசதி இன்னும் கிடைக்கவில்லை.

Written BySripriya Sambathkumar
Published: Nov 25, 2026, 15:15 IST|Updated: Nov 25, 2026, 15:24 IST
joinshare
திருவண்ணாமலைக்கு ஆந்திராவிலிருந்து ரயில் இருக்கு, சேலத்திலிருந்து இல்லை!! வலுக்கும் கோரிக்கை
Image Credit: Salem Tiruvannamalai Direct Train

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambathkumar

ஸ்ரீப்ரியா சம்பத், 6 ஆண்டுகளுக்கும் மேல் மீடியாவில் பணியாற்றி வருகிறார். இவர், வணிகம் மற்றும் தனிநபர் நிதி (Personal Finance) சார்ந்த கட்டுரைகளை எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர். மத்திய பட்ஜெட்டுகள், வங்கித் துறை, வருமான வரி, பங்குச் சந்தைகள் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரம், மத்திய அரசு ஊழியர்கள், ஊதியக் குழுக்கள் (Pay Commissions), ஓய்வூதியத் திட்டங்கள், ஓய்வூதியதாரர்கள், அரசின் முக்கியக் கொள்கைகள் மற்றும் சர்வதேச விவகாரங்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.எழுத்தை வாசகர்களோடு இணைவதற்கான ஒரு சிறந்த பாலமாகக் கருதும் இவர், அவர்களின் தேவைகளுக்கும் ஆர்வங்களுக்கும் முன்னுரிமை அளிக்கிறார். வாசகர்களுடன் இயல்பான, உண்மையான மற்றும் நேர்மையான தொடர்பைக் கொண்டிருப்பதே இவரின் முதன்மை இலக்காகும். பணி நேரத்தைத் தாண்டி, புத்தகங்கள் வாசிப்பது, புதிய இடங்களுக்குப் பயணம் செய்வது மற்றும் அறிவுசார் விவாதங்களில் பங்கேற்பது இவருக்கு மிகவும் பிடித்தமானவை.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம்..தலைமை செயலாளர் மீது உதயநிதி ஸ்டாலின் புகார்!

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம்..தலைமை செயலாளர் மீது உதயநிதி ஸ்டாலின் புகார்!

2

திருவண்ணாமலைக்கு ஆந்திராவிலிருந்து ரயில் இருக்கு, சேலத்திலிருந்து இல்லை!! வலுக்கும் கோரிக்கை

3

புதுச்சேரி செய்திகள்: கார்த்திகை தீபம், செவிலியர் போராட்டம், கனமழை வெள்ளம் - முழு விவரம்

4

TN Weather: இன்று வெளுக்கப்போகும் கனமழை.. விவசாயிகளுக்கு குட் நியூஸ்! எந்தெந்த மாவட்டம்?

5

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாதது ஏன்? மதுரை ஆட்சியரின் 17 பக்க அறிக்கை - ஹைலைட்ஸ்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

சேலம்: தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய மற்றும் மிகவும் பிரபலமான கோயில் நகரங்களில் திருவண்ணாமலையும் ஒன்றாகும். தமிழகத்தின் மிக முக்கியமான ஆன்மீகத் தலங்களில் ஒன்றாக திருவண்ணாமலை இருந்தாலும், சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட சேலம், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, உதகை மற்றும் தருமபுரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து திருவண்ணாமலைக்கு நேரடி ரயில் வசதி இன்னும் கிடைக்கவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் திருவண்ணாமலைக்கு செல்வதில் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

ரயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை

சேலம் உள்ளிட்ட பிற பகுதிகளில் உள்ள மக்கள் தற்போது திருவண்ணாமலைக்கு செல்ல நேரடி ரயில் தொடர்பு இல்லாததால் பயணிகள் காட்பாடி அல்லது விழுப்புரம் சென்று, அங்கிருந்து மற்றொரு ரயிலைப் பிடித்து திருவண்ணாமலையை அடையும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஆகையால், சின்னசேலம் - கள்ளக்குறிச்சி ரயில் திட்டத்தை விரைவுபடுத்தி, அந்த ரயில் பாதையை திருவண்ணாமலை வரை நீட்டிக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் நல அமைப்புகளின் பிரதிநிதிகள் ரயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தெற்கு ரயில்வேயின் பிற கோட்டங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு ரயில் வசதிகள் இருந்தாலும், சேலம் மற்றும் பாலக்காடு கோட்டங்களுக்கு உட்பட்ட ரயில் நிலையங்களிலிருந்து வரும் பயணிகள் தொடர்ந்து சிரமங்களைச் சந்திப்பதாக கூறப்படுகின்றது. தமிழ்நாட்டிற்குள்ளேயே அமைந்திருந்தாலும், சேலம் கோட்டத்திற்கு உட்பட்ட ரயில் நிலையங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு நேரடி ரயில் சேவை இல்லை. இப்பகுதியிலுள்ள பல நகரங்கள் திருவண்ணாமலைக்கு அருகிலேயே இருப்பதால், நேரடி ரயில் சேவை இல்லாதது பயணிகளுக்கு மிகுந்த சிரமத்தை அளிக்கிறது.

ஆந்திராவிலிருந்து ரயில் வசதி, சேலத்திலிருந்து இல்லை: மக்கள் வருத்தம்

ஆந்திரப் பிரதேசத்திலிருந்து திருவண்ணாமலைக்கு வாரத்திற்கு இருமுறை இயக்கப்படும் விரைவு ரயில்கள் உட்பட புதிய நேரடி ரயில் சேவைகள் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதையும், கார்த்திகை தீபத் திருநாளின் போது சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டதையும் சேலம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். பிற மாநிலங்களிலிருந்து பயணிகள் ரயிலில் திருவண்ணாமலைக்கு வர முடியும் நிலையில், நம் மாநிலத்திலேயே உள்ள பல நகரங்களைச் சேர்ந்த மக்கள் இன்னும் சாலைப் போக்குவரத்தையே நம்பியிருக்க வேண்டிய சூழல் உள்ளது மக்களுக்கு வருத்தம் அளிக்கின்றது.

சின்னசேலத்திலிருந்து கள்ளக்குறிச்சி நோக்கிய ரயில் பாதையில், பொற்படாகுறிச்சி வரை சுமார் 11 கி.மீ தூரத்திற்குப் பணிகள் முடிக்கப்பட்டு, அங்கு சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், ஒரு பெரிய குளத்தின் குறுக்கே தூண்களை அமைக்கும் பணி பல ஆண்டுகளாக மிகவும் மெதுவாகவே நடைபெற்று வருகிறது.

சவாலான நிலப்பரப்புகளில் கூட ரயில்வே திட்டங்கள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த வழித்தடத்தில் பணிகள் தாமதமாவது வியப்பை அளிக்கின்றது. நிலுவையில் உள்ள பணிகளை விரைவுபடுத்தினால், திட்டமிடப்பட்ட இந்த ரயில் பாதையை விரைவில் முழுமையாக நிறைவு செய்ய முடியும் என்று சம்பந்தபட்ட அதிகாரிகள் கருதுகின்றனர்.

மேலும் படிக்க | TN Weather: இன்று வெளுக்கப்போகும் கனமழை.. விவசாயிகளுக்கு குட் நியூஸ்! எந்தெந்த மாவட்டம்?

மக்களின் நீண்ட நாள் கோரிக்கை

சேலம் கோட்டத்திற்கு உட்பட்ட ரயில் நிலையங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவைகளை வழங்க வேண்டும் என்பது நீண்டகாலக் கோரிக்கையாக இருந்து வருகிறது. இந்தப்பகுதி மக்கள் திருவண்ணாமலைக்குச் செல்ல சாலைப் போக்குவரத்தை மட்டுமே நம்பியுள்ளனர். சின்னசேலம் - கள்ளக்குறிச்சி ரயில் பாதை பயன்பாட்டுக்கு வந்தவுடன், அந்த வலையமைப்பை ரிஷிவந்தியம் மற்றும் திருக்கோவிலூர் நோக்கி நீட்டிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏற்கனவே திருக்கோவிலூரையும் திருவண்ணாமலையையும் இணைக்கும் ரயில் பாதை இருப்பதால், இது மிகவும் தேவையான இணைப்பை ஏற்படுத்த உதவும் என்பது பொதுவான கருத்தாக உள்ளது.

பரிசீலனையில் திட்டம்?

சேலம் கோட்டத்திற்கு உட்பட்ட நிலையங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவைகளை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை, ஏற்கனவே பரிசீலனைக்காக உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.

மேலும் படிக்க | திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாதது ஏன்? மதுரை ஆட்சியரின் 17 பக்க அறிக்கை - ஹைலைட்ஸ்

சின்னசேலம் - கள்ளக்குறிச்சி திட்டம் எந்த நிலையில் உள்ளது?

சின்னசேலம் - கள்ளக்குறிச்சி திட்டத்தை பொறுத்தவரை, சுமார் 70 சதவீத பணிகள் நிறைவடைந்துவிட்டன என்றும், பொற்படக்குறிச்சி வரையிலான பகுதியில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுவிட்டது என்றும் சேலம் கோட்ட ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மீதமுள்ள பணிகளும் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், கள்ளக்குறிச்சியிலிருந்து ரிஷிவந்தியம் மற்றும் திருவண்ணாமலை வரையிலான பாதையில் இன்னும் தண்டவாளங்கள் அமைக்கப்படவில்லை. இந்த நீட்டிப்புப் பணிகள் எப்போது நடைபெறும் என்பது இன்னும் தெளிவில்லாமல் உள்ளது.

சேலம் - திருவண்ணாமலை: தற்போது உள்ள ரயில் வழித்தடங்கள்

விழுப்புரம் சந்திப்பு வழியாக: சேலத்திலிருந்து ரயில் மார்க்கமாக திருவண்ணாமலை செல்ல, சேலத்திலிருந்து விழுப்புரம் சந்திப்புக்கு சென்று, அங்கிருந்து திருவண்ணாமலை செல்லும் மற்றொரு ரயிலுக்கு மாற வேண்டும்.

காட்பாடி சந்திப்பு வழியாக: மற்றொரு பயண வழியில், சேலத்திலிருந்து காட்பாடி சந்திப்புக்குச் சென்று, அங்கிருந்து திருவண்ணாமலை செல்லும் ரயிலுக்கு மாற வேண்டும்.

சேலம் கோட்டம் அதிக மக்கள் பயணிக்கும் வழித்தடமாக இருப்பதால், திருவண்ணாமலையிலிருந்து சேலத்திற்கு நேரடி ரயில் சேவைக்கான மக்களின் கோரிக்கை மிக நியாயமானதே. இந்த கோரிக்கை கூடிய விரைவில் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையுடம் மக்கள் காத்திருக்கிறார்கள்.

மேலும் படிக்க | கார்த்திகை தீபம்..புடவையில் தீப்பற்றி பலியான மூதாட்டி! தனியாக இருந்ததால் நேர்ந்த சோகம்

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu