SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பஸ்.. ரிஷிகேஷ் - பத்ரிநாத் நெடுஞ்சாலையில் கோர விபத்து! 4 பேர் பலி

ரிஷிகேஷ் - பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் பயணிகள் பேருந்து 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 20 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

Written By R Balaji
Published: Nov 17, 2026, 08:25 IST | Updated: Nov 17, 2026, 08:31 IST
Join

உத்தரகாண்ட் மாநிலத்தில் ரிஷிகேஷ் - பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் இன்று (நவம்பர் 17) காலை பயங்கர சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. ஹரித்வாரில் இருந்து பத்ரிநாத் நோக்கி சென்றுகொண்டிருந்த பயணிகள் கூலர் பஜார் அருகே உள்ள பாலத்தில் இருந்து சுமார் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.

4 பேர் பலி, 20 பேர் காயம்

இந்த விபத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

முனிகி ரேட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கூலர் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பேருந்தில் சுமார் 30 முதல் 35 பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது. விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மாநில பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதுவரை சுமார் 20 பயணிகள் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், 4 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.

மேலும், 4 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மீட்பு பணியில் போலீசார், SDRF குழுவினர்

சம்பவம் குறித்து தகவல் கிடைத்த நிலையில், முனிகி ரேட்டி காவல் நிலையம் மற்றும் கூலர், சிவ்புரி, பயாசி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பயாசி மற்றும் தால்வாலா பகுதிகளில் உள்ள SDRF மீட்புக் குழுவினரும் அங்கு சென்று மீட்பு பணிகளை தொடங்கினர்.

விபத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, SDRF படைத் தளபதி அர்பன் யாதவன்ஷியின் உத்தரவின் பேரில் கூடுதல் மீட்பு குழுக்களும் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நரேந்திரநகர் காவல் துணைக் கண்காணிப்பாளர் மற்றும் முனிகி ரேட்டி காவல் நிலைய பொறுப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் இருந்து மீட்பு பணிகளை மேற்பார்வையிட்டு வருகின்றனர்.

போலீசார், SDRF, தீயணைப்புத் துறையினர் மற்றும் சுகாதார துறையினர் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பேருந்தில் சிக்கியுள்ள மற்ற பயணிகளையும் பாதுகாப்பாக மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

ZEENEWS TRENDING STORIES