SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

அடுத்த 9 ஆண்டுகளில் மிகப்பெரிய மாற்றம்! அதிகரிக்கும் முஸ்லிம் மக்கள் தொகை.. காரணம் என்ன? Explained

Hindu Muslim Population Explained: உலகின் மதங்களின் அடிப்படையில் மக்கள் தொகை 2070ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்பது குறித்து பியூ ஆய்வு மையம் நடத்திய ஆய்வில் சில தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி, 2035-ஆம் ஆண்டுக்குள் கிறிஸ்தவத்தை விட உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட மதமாக இஸ்லாம் மாறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

Written By Umabarkavi K
Published: Nov 20, 2026, 18:11 IST | Updated: Nov 20, 2026, 18:20 IST
Join

Hindu Muslim Population Explained: உலகின் மிகப்பெரிய மதமாக கிறிஸ்தவம் இருந்து வருகிறது. குறிப்பாக, ஐரோப்பா, அமெரிக்கா, ஆப்பிரிக்க நாடுகளில் அதிகம் பின்பற்றப்பட்டு வரும் மதமாக கிறிஸ்தவம் இருந்து வருகிறது. அதற்கு அடுத்தப்படியாக இஸ்லாம் இருந்து வருகிறது. குறிப்பாக, ஆசியாவிலும், ஆப்பிரிக்காவிலும் அதிக எண்ணிக்கையில் இஸ்லாம் மதத்தை பின்பற்றி வருகின்றனர். உலக அளவில் இந்த இரண்டு மதங்களுக்கும் அடுத்தபடியாக இந்து மதமும், பௌத்த மதமும் இருந்து வருகிறது. இந்த நிலையில், அடுத்த 9 ஆண்டுகளில் இந்த நிலை தலைகீழாக மாறப்போவது பியூ அறிக்கை வெளியிட்டு இருப்பது உலகின் கவனத்தை பெற்று இருக்கிறது.

இஸ்லாமியர்களின் மக்கள் தொகை உயர்வு

நவம்பர் 18 அன்று, புகழ்பெற்ற ஆராய்ச்சி நிறுவனமான பியூ ஆராய்ச்சி மையம்,  எதிர்காலத்தில் மத அடிப்படையிலான மக்கள் தொகை குறித்து கணிப்புகளை வெளியிட்டு இருக்கிறது. அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட இந்த நிறுவனம், மக்கள்தொகை மற்றும் மதம் தொடர்பான போக்குகளைத் தொடர்ந்து பகுப்பாய்வு செய்து கணித்து வருகிறது. பியூ ஆராய்ச்சி மையத்தின் கணிப்புகளின்படி, 2035-ஆம் ஆண்டுக்குள், இஸ்லாம் கிறிஸ்தவத்தை விஞ்சி உலகின் மிகப்பெரிய மதமாக மாறும்.  

2070ஆம் ஆண்டில் இந்தியாவில் இந்துக்கள் தொடர்ந்து மிகப்பெரிய மதக் குழுவாக இருப்பார்கள். ஆனால், மொத்த மக்கள் தொகையில் அவர்களின் பங்கு 75.8 சதவீதமாக குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2020-ஆம் ஆண்டில் இந்திய மக்கள்தொகையில்  79 சதவீதமாக இந்துக்களின் பங்கு இருக்கிறது.  அதே காலக்கட்டததில் இரண்டாவது பெரிய மதமாக இருக்கும் முஸ்லிம்களின் பங்கு, 2020-ல் 15.2 சதவீதத்தில் இருந்து, 2070-ஆம் ஆண்டில் 19.6 சதவீதமாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.

2020-ல் உலகளவில் சுமார் 227 கோடி கிறிஸ்தவர்களும், 202 கோடி முஸ்லிம்களும் இருந்தனர். ஆனால், அடுத்த 10 ஆண்டுகளில் இந்த நிலை மாறவிருக்கிறது. பியூவின் புதிய கணிப்புகளின்படி, 2035-ஆம் ஆண்டில் உலக முஸ்லிம்களின் எண்ணிக்கை 257 கோடியாக அதிகரிக்கும். அதே நேரத்தில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை சுமார் 252 கோடியாகவே இருக்கும். இதன் மூலம், 2035ஆம் ஆண்டுக்குள் இஸ்லாம் உலகின் மிகப்பெரிய மதமாக மாறும் என்பதாகும். இந்த மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் தொடர்ந்தால், 2070-ஆம் ஆண்டில் உலக முஸ்லிம்களின் எண்ணிக்கை 360 கோடியைத் தாண்டும், அதே நேரத்தில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 300 கோடிக்கும் சற்றுக் குறைவாகக் குறைந்துவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமியர்களின் மக்கள் தொகை உயர என்ன காரணம்?

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் ஒட்டுமொத்த கருவுறுதல் விகிதம் வேகமாக குறைந்து வருகிறது. இதில் முஸ்லிம்களின் கருவுறுதல் விகிதமும் அடங்கும். இருப்பினும், இந்துக்களை விட முஸ்லிம்களிடம் கருவுறுதல் விகிதம் அதிகமாகவே உள்ளது என ஆய்வில் கூறப்பட்டுள்ளது. சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் 2022-ஆம் ஆண்டுக்கான தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு (NFHS)-ன்படி, கடந்த 20 ஆண்டுகளில் அனைத்து மதத்தினரை விட, முஸ்லிம்களின் கருவுறுதல் விகிதமே மிக கடுமையாக சரிவை கண்டது.

இது 2015ல்  கருவுறுதல் விகிதம் 2.6 சதவீதமாக இருந்த நிலையில், 2019 -2021ல் 2.3 சதவீதமாக குறைந்தது. ஆனால், மற்ற மதப் பிரிவினருடன் ஒப்பிடும்போது அப்போதும் இதுவே அதிகமாக இருந்தது. மேலும் அந்த அறிக்கையில், “கருவுறுதல் விகிதத்தில் இந்துக்கள், இஸ்லாமியர்களுக்கு இடைய உள்ள இந்த இடைவெளி மற்றும் முஸ்லிம்களிடையே இளைய தலைமுறையினர் அதிகம் இருப்பதைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, இந்திய மக்கள் தொகையில் இந்துக்களின் மக்கள் தொகை சதவீதம் குறையும் என்றும், முஸ்லிம்களின் மக்கள் தொகை அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அடுத்த 9 ஆண்டுகளில் இஸ்லாம் மதத்தின் மக்கள் தொகை உயர முஸ்லிம் பெண்களிடையே காணப்படும் அதிக குழந்தை பிறப்பு விகிதமே ஆகும் என தெரியவந்துள்ளது.

இந்தியா vs பாகிஸ்தான்..

தற்போது இந்தோனேசியா தற்போது உலகின் மிகப்பெரிய முஸ்லீம் மக்கள் தொகையை கொண்டுள்ளது. தற்போதைய போக்குகள் தொடர்ந்தால், 2070-ஆம் ஆண்டில் பாகிஸ்தான் உலகின் மிகப்பெரிய முஸ்லிம் மக்கள்தொகை கொண்ட நாடாக மாறும். இந்தப் பட்டியலில் பாகிஸ்தான் முதலிடத்தைப் பிடிக்கும், அதே நேரத்தில் இந்தியா இரண்டாம் இடத்திற்கும், நைஜீரியா மூன்றாம் இடத்திற்கும், இந்தோனேசியா நான்காம் இடத்திற்கும் பின்தங்கும் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான இந்துக்கள் இந்தியாவில் உள்ளனர். இது மொத்த உலகளாவிய இந்து மக்கள்தொகையில் சுமார் 94.5% ஆகும். 2070ஆம் ஆண்டுக்குள் இந்துக்களின் எண்ணிக்கை 199 மில்லியன் அதிகரித்து, மொத்தமாக கிட்டத்தட்ட 1.4 பில்லியனை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்துக்கள் அல்லாதவர்களின் எண்ணிக்கை இதைவிடவும் வேகமாக அதிகரிக்கும்.

இதன் விளைவாக, உலக மக்கள்தொகையில் இந்துக்களின் பங்கு 2020-ல் 15%-லிருந்து 2070-ல் 14%-ஆகச் சற்றுக் குறையும்.  2070-ஆம் ஆண்டில், 461 மில்லியன் மக்கள்தொகை கொண்ட பாகிஸ்தானுக்கு அடுத்தபடியாக, 334 மில்லியன் மக்கள்தொகையுடன் இந்தியா உலகின் இரண்டாவது பெரிய முஸ்லீம் மக்கள்தொகையைக் கொண்டிருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது-

கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை குறையும்..

இந்த பியூ அறிக்கை இஸ்லாமின் எழுச்சியைப் பற்றிப் பேசுவதோடு மட்டுமல்லாமல், மேற்கத்திய நாடுகளில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை குஐறயும் என கணித்துள்ளது. இந்த அறிக்கையின்படி, அடுத்த 40 ஆண்டுகளுக்குள், உலகின் மிகவும் சக்திவாய்ந்த நாடான அமெரிக்காவில் கிறிஸ்தவர்கள் எண்ணிக்கை குறையும் என கூறப்பட்டுள்ளது. தற்போது, ​​அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில் 62 சதவீதம் பேர் கிறிஸ்தவர்களாக உள்ளனர்.

இது 2065-ஆம் ஆண்டுக்குள் 50 சதவீதத்திற்கும் குறைவாகக் குறைந்துவிடும். அண்டை நாடான கனடாவில், இந்த மாற்றம் இன்னும் விரைவாக நிகழவிருக்கிறது. 2030-ஆம் ஆண்டிற்குள், கனடாவில் உள்ள கிறிஸ்தவர்களின் மக்கள் தொகை 50 சதவீதத்திற்கும் குறைவாகக் குறைந்துவிடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இரு நாடுகளிலும் கிறிஸ்தவர்களின் மக்கள் தொகை குறைவதற்கான மிகப்பெரிய காரணம் மதமாற்றம் அல்ல, மாறாக எந்த மதத்தையும் நம்பாதவர்கள், நாத்திகர்கள் அல்லது மதமற்றவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதே ஆகும் என கூறப்படுகிறது. 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

ZEENEWS TRENDING STORIES