• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /இந்தியா
  • /அப்பா செத்துருவாரு.. சோனியாவிடம் முன்பே வார்னிங் கொடுத்த ராகுல் காந்தி.. திடுக் உண்மை!

அப்பா செத்துருவாரு.. சோனியாவிடம் முன்பே வார்னிங் கொடுத்த ராகுல் காந்தி.. திடுக் உண்மை!

Sonia Gandhi Memoir Explained: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை குறித்து இரண்டு மாதங்களுக்கு முன்பே எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி எச்சரிக்கை விடுத்ததாக சோனியா காந்தி தனது சுயசரிதையில் குறிப்பிட்டு இருந்தது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Written ByUmabarkavi K
Published: Nov 11, 2026, 12:57 PM IST|Updated: Nov 11, 2026, 01:12 PM IST
joinshare
அப்பா செத்துருவாரு.. சோனியாவிடம் முன்பே வார்னிங் கொடுத்த ராகுல் காந்தி.. திடுக் உண்மை!

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
ரூ.600 கோடி மதிப்பிலான பங்குகள்... திரும்பப் பெற Zee Entertainment நிறுவனம் முடிவு

ரூ.600 கோடி மதிப்பிலான பங்குகள்... திரும்பப் பெற Zee Entertainment நிறுவனம் முடிவு

2

Explained : தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் வரப்போகுதா? மழை பொய்த்தால் இதுதான் நிலை..

3

CM விஜய்யின் சிறப்பு வட்டி தள்ளுபடி... வீடு, மனை ஒதுக்கீடுதாரர்களுக்கு ஜாக்பாட்

4

செஞ்சியில் மீண்டும் அதிர்ச்சி! 7 வயது சிறுமியை கடத்த முயற்சி.. தப்பித்தது எப்படி? இருவர் கைது

5

என்விடியா CEO விவகாரத்தில் கிளம்பும் பூதம்: இரண்டாவது கள்ள உறவு, மகன்-மகளின் சம்பளம்... பறிபோகும் பதவி?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Sonia Gandhi Memoir Explained: மகாத்மா காந்தி, இந்திரா காந்தி கொலைக்கு அடுத்தபடியாக இந்தியாவை உலுக்கிய சம்பவம், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை தான். 1991ஆம் ஆண்டு மே 21ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் நடந்த படுகொலை, இந்திய அரசியலின் போக்கையே முற்றிலும் மாற்றிவிட்டது. ராஜீவ் காந்தி படுகொலைக்கு பிறகு, இந்தியாவில் பிரதமர்கள் பலரும் மாறிக் கொண்டே இருந்தனர்.

ராஜீவ் காந்தி படுகொலை

அந்தளவுக்கு ராஜீவ் காந்தி படுகொலை இந்திய அரசியலில் பெரும் புயலை கிளப்பியது. மேலும், இந்திரா காந்தி கொலை, தொடர்ந்து ராஜீவ் காந்தி கொலை சம்பவம் காந்தி குடும்பத்தினரை பெரிதும் பாதித்தது. இந்த நிலையில், 'பிலாங்கிங்: ஏ ஜர்னி ஆஃப் லவ்' (Belonging: A Journey Of Love) என்ற 544 பக்க சுயசரிதை புத்தக்கத்தில் சோனியா காந்தி ராஜீவ் காந்தி படுகொலை குறித்து பகிர்ந்துள்ளார்.  இந்த புத்தகம் நேற்று வெளியான நிலையில், சோனியா காந்தி ராஜீவ் காந்தி படுகொலை குறித்த துயரமான சம்பவத்தை அதில் நினைவு கூர்ந்தார்.

ராஜீவ் காந்திக்கு பாதுகாப்பு குறைபாடு

சோனியா காந்தி சுயசரிதையில்  கூறியிருப்பதாவது, ராஜீவ் காந்திக்கு சிறப்பு பாதுகாப்பு படை எஸ்பிஜியை தொடர வேண்டும் என கமிட்டி பிரிந்துரைத்திருந்த போதிலும், அப்போதைய விபி சிங் அரசு அந்த பாதுகாப்பை வாபஸ் வாங்கியது. புதிய பாதுகாப்பு அச்சுறுத்தல் மதிப்பீடுகளின் அடிப்படையில் மட்டுமே பாதுகாப்பு மாற்றப்பட வேண்டும் என கமிட்டி தெரிவித்தது.

ஆனால், அப்படி எந்தவொரு மறுஆய்வும் செய்யப்படவல்லை. அடுத்த மாதமே விபி சிங் அரசு ராஜீவ் காந்திக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை நீக்கியது. மிகச்சிறந்த பயிற்சி பெற்ற சிறப்புப் பாதுகாப்புப் படைக்குப் பதிலாக, உள்ளூர் காவல்துறை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டது என தெரிவித்தார்.  1984 அக்டோபரில் தனது மாமியாரும் முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு, ராஜீவை இழந்துவிடுவோமோ என்ற அச்சத்துடனேயே தங்கள் குடும்பம் வாழ்ந்ததை சோனியா காந்தி நினைவு கூர்கிறார்.

 

 

 

 

 

View this post on Instagram

 

 

 

 

 

 

 

 

 

 

 

A post shared by Sonia Gandhi (@soniagandhi)

 

ராஜீவ் காந்தி படுகொலை நாளில் என்ன நடந்தது?

ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட நாளைப்  பற்றி நினைவு கூர்ந்த சோனியா காந்தி, அது வழக்கமான ஒரு நாளைப் போலத்தான் தொடங்கியது எனக் குறிப்பிட்டுள்ளார். ராஜீவ் வெளியே சென்றிருக்கும் நேரங்களில், கட்டிலில் அவர் படுக்கும் பகுதியில் ஒருவித ஆறுதலையும் நிம்மதியையும் உணர்வதாக அவர் தெரிவித்தார். அதே நேரத்தில், அவர்களின் மகள் பிரியங்கா தனது தோழியின் பிறந்தநாள் விழாவிற்குச் செல்ல அறையில் ஆயத்தமாகிக் கொண்டிருந்தார்; மகன் ராகுல் அமெரிக்காவில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார் என குறிப்பிட்டார்.

ராஜீவ் காந்தி படுகொலை குறித்து குறிபிட்பட சோனியா, ”திடீரென்று என் அறையை நோக்கி யாரோ ஓடிவரும் காலடி ஓசையைக் கேட்டேன். வீட்டில் வேறு யாரும் இல்லாததால், அது பிரியங்கா காந்தி என்று நினைத்தேன். பிரியங்கா காந்தி ஒரு அமைதியுடனும் என் அறைக்கு ஓடி வந்தாள். முகம் சிவப்பாகவும், கண்கள் கருமையாகவும் சோகமாகவும் இருந்தன. அப்போதுதான், ராஜீவ் காந்தி பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோது சென்னையில் குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்ததாகவும், உயிரிழந்தவர்கள் இருக்கக்கூடும் என்ற தகவலுடன் வந்த தொலைபேசி அழைப்பை பற்றி சோனியாவிடம் பிரியங்கா தெரிவித்தார்.

"அவள் என்ன சொல்கிறாள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. என்னை அப்படியே உரைய வைத்தது. என்னால் மூச்சுக்கூட விட முடியவில்லை. நான் எழுந்து நின்றேன். பிரியங்கா காந்தி என்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டாள். பின்னர், பிரியங்காவின் கைகளை இறுக்கிப் பிடித்தபடி, "நான் அவருடன் சென்றிருக்க வேண்டும்" என்று சோனியா கதறி அழுதார்.

உடனடியாகத் தனது நெருங்கிய உதவியாளரான வின்சென்ட் ஜார்ஜைத் தொடர்புகொண்டு, "உண்மையை மட்டும் சொல், இது உண்மையா?" என்று கேட்டார். அதற்கு ஜார்ஜ், "ஆம் அம்மா, அது உண்மைதான். ராஜீவ் காந்தி இனி நம்முடன் இல்லை," என்று பதிலளித்தார்.

இதனை கேட்ட சோனியா காந்தி, "என் உலகமே இருண்டுவிட்டது போலவும், அந்த இருள் என்னை முழுமையாக விழுங்கிவிட்டது போலவும் உணர்ந்தேன்," என்று குறிப்பிட்டுள்ள அவர், அந்தச் சமயத்தில் நடந்த பல விஷயங்கள் தனக்கு லேசான நினைவாகவே இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஊழியர்கள் கதறி அழுது  புலம்பியதும், நெஞ்சம் உடைந்த நிலையிலும் மனதை திடப்படுத்திக்கொண்டு நின்ற தனது மகளுமே அவரது நினைவில் எஞ்சியிருந்தன.

ராகுலும் ராஜீவ் உடன் சென்னை செல்ல திட்டம்

பிரியங்கா காந்தி குறித்தும், அந்தச் சோகமான தருணத்தில் அவரது செயல்பாடு குறித்தும் சோனியா காந்தி புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். அவர் கூறுகையில், "ராஜீவின் அன்பு மகள் உள்ளம் உடைந்து போயிருந்தாலும் அமைதியைக் கைவிடவில்லை. பிரியங்கா என் முன்னால் ஒருமுறை கூட அழவில்லை. தன் அறைக்கும் ராகுலின் அறைக்கும் இடையே ஓடித் திரிந்து அனைத்துப் பொறுப்புகளையும் அவளே ஏற்றுக் கொண்டாள்.

தன் தாய்க்கு மேலும் வேதனை அளிக்கக்கூடிய எந்தச் செய்தியும் காதில் விழாமல் இருக்க, அங்கிருந்தபடியே அவள் ஒரு அரண் போல பாதுகாத்துக் கொண்டாள்" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், "சென்னைக்குச் செல்வதற்கான ஏற்பாடுகளையும், தொலைபேசி அழைப்புகளையும் பிரியங்காவே நேரடியாக மேற்கொண்டு வந்தார். இருப்பினும், ராஜீவ் காந்தியின் உடல் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்குத் தான் கொண்டுவரப்பட்டது.

இதற்கிடையில், அமெரிக்காவில் இருந்த ராகுல் காந்திக்குத் தாமதமாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. "ஒரு நண்பர் அவருக்கு போன் செய்து  கெட்ட செய்தி இருக்கிறது  என்று சொன்னதும், அவர் உடனே, 'அப்பா இறந்துவிட்டார்தானே?' என்று கூறினார் என சோனியா காந்தி அந்தச் சம்பவத்தை நினைவுகூறுகிறார். ராகுல் காந்தியின் பயணத்திட்டத்தில் கடைசி நேரத்தில் மாற்றம் ஏற்படாமல் இருந்திருந்தால், ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தியுடன் அவரும் இருந்திருப்பார் என்று சோனியா குறிப்பிட்டுள்ளார். தந்தையின் மறைவுக்குப் பிறகு, டெல்லி வந்தடைந்து அவரது உடலருகே ராகுல் காந்தி எதுவுமே பேசாமல் உறைந்துபோய் நின்றுகொண்டிருந்தார்.

Rajiv Gandhi Death

ராஜீவ் கொலையை முன்பே கணித்த ராகுல்

ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்படுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே, அவரது பாதுகாப்பு குறித்து ராகுல் காந்திக்கு எச்சரிக்கை கொடுத்து இருந்ததாக சோனியா காந்தி புத்தகத்தில் குறிப்பிட்டார். மே 21, 1991 அன்று தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் கொல்லப்பட்டபோது தனது உலகம் இடிந்து விழுந்த நிலையில், சோனியாவின் நினைவில் மகனின் அந்த எச்சரிக்கை மீண்டும் எதிரொலித்தது.  

"அப்பாவின் பாதுகாப்பு விஷயத்தில் எதாவது செய்யாவிட்டால், விரைவில் நான் அவரது இறுதிச் சடங்கிற்காகத்தான் திரும்பி வர வேண்டியிருக்கும்"

என்று ராஜீவ் காந்தியுடன் சுற்றுப்பயணத்தில் இருந்தபோது ராகுல் தனது தாயாரிடம் (சோனியா காந்தி) இரண்டு மாதங்களுக்கு முன்பு எச்சரித்திருந்தார்.   இதனை சோனியா காந்தி தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்.

Add Zee News as a Preferred Source
TAGS:
Explainer