SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ராகுல் காந்தி பேரணி... கவனம் ஈர்த்த பெண் மாணவத் தலைவர் - யார் இந்த ஜன்னத் பிஷ்னோய்?

Who is Jannat Bishnoi: டெல்லியில் இன்று ராகுல் காந்தி பேரணி நடத்திய போது அவருக்கு அருகில் வெள்ளை சட்டை அணிந்துகொண்டு, உரத்த குரலில் முழக்கங்களை முழங்கிய ஒரு இளம் கல்லூரி பெண் தேசியளவில் இணையம் முழுவதும் கவனம் ஈர்த்தார். அவர் யார் என்பதை இங்கு காணலாம்.

Written By Sudharsan G
Published: Oct 12, 2026, 11:00 PM IST | Updated: Oct 12, 2026, 11:08 PM IST
Join

Who is Jannat Bishnoi: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராகப் போராட்டங்கள் தொடரும் நிலையில், எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தை நோக்கிப் பேரணி நடத்த திட்டமிட்டனர்.

தலைமை நீதிபதி சூர்ய காந்த் காங்கிரஸ் கட்சியினரை சந்திக்க மறுத்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மனுவாக அளிக்க திட்டமிட்டனர். இதை முன்னிட்டு மத்திய டெல்லி பகுதியில் ஆயிரக்கணக்கானோர் கூடினார்கள். இந்தியா கூட்டணித் தலைவர்கள் உச்ச நீதிமன்றம் நோக்கி பேரணியாக புறப்பட்டனர்.

உச்ச நீதிமன்றத்தில் மனு

தொடர்ந்து, வாக்கு திருட்டு நடந்திருப்பதாக தலைமைத் தேர்தல் ஆணையர் மீது இந்தியா கூட்டணியின் வழக்கறிஞர் குழு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. டெல்லியில் பேரணி தொடங்கிய சிறிது நேரத்திலேயே போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

மேலும் படிக்க | Explained | "ஜனநாயகத்தை காப்போம்" டெல்லியில் தொடங்கிய March for Democracy போராட்டத்தின் முழு பின்னணி

தொடர்ந்து ராகுல் காந்தி மட்டும் உச்ச நீதிமன்றத்தில் சென்று மனுத் தாக்கல் செய்தார். குறிப்பாக, வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தீவிர திருத்தத்தின் மீது இடைக்கால தடை விதிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்களைகள் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கவனம் ஈர்த்த மாணவத் தலைவர்

அந்த பேரணி தேசியளவில் கவனம் பெற்றது. ராகுல் காந்தி உடன் பிரியங்கா காந்தி, மாணவர் தலைவர் நேஹா போரா உள்ளிட்டோர் பேரணியாக சென்ற நிலையில், அவர்களுடன் சென்ற ஜன்னத் பிஸ்னோய் இணையத்தில் அதிகளவில் கவனத்தை ஈர்த்தார். யார் இந்த ஜன்னத் பிஷ்னோய்...? என்பதை இங்கு காணலாம்.

யார் இந்த ஜன்னத் பிஷ்னோய்?

டெல்லி பல்கலைகழகத்தின் மாணவர் சங்கத்தின் நிர்வாக கவுன்சிலரே இந்த ஜன்னத் பிஷ்னோய். இவர் காங்கிரஸின் இளைஞரணியான இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் உறுப்பினராகவும் உள்ளார். இவர் டெல்லி பலகலைக்கழகத்தின் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி கல்லூரியில் பிஏ இரண்டாம் ஆண்டு மாணவர் ஆவார்.

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இவர் பல்கலைக்கழக அரசியலிலும், டெல்லி மாணவ போராட்டத்திலும் தீவிரமாக இயங்கக்கூடியவர் ஆவார். ராகுல் காந்தியை சுற்றி கடும் கூட்டம் கூடியதை தொடர்ந்து, ஒரு டிரக்கில் அவர் ஏறினார். அதில் பிரியங்கா காந்தி, நேஹா போரா மட்டுமின்றி ஜன்னத் பிஷ்னோய்யும் இடம்பெற்றிருந்தார்.

மேலும் படிக்க | ஜந்தர் மந்தரில் இனி போராட அனுமதி இல்லை... மூன்று முக்கிய காரணங்கள் என்னென்ன?

ராகுல் காந்தி அந்த டிரக்கில் நின்றுகொண்டிருந்த போராட்டக்காரர்களுக்கு கையசைத்துக் கொண்டிருந்தபோது, ஒரு வெள்ளை நிற சட்டையில் சத்தமாக முழுக்கங்களை முழங்கிக் கொண்டிருந்த ஒரு பெண் கூட்டத்தில் அனைவராலும் திரும்பிப் பார்க்கப்பட்டார். அந்த பெண்மணிதான், ஜன்னத் பிஷ்னோய்.

பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் மகளிர் பாதுகாப்பில் நிலைநாட்டுவதில் ஜன்னத் பெரும் முயற்சிகளை எடுத்திருக்கிறார். குறிப்பாக கல்லூரி வளாகத்தில் தொடர்ச்சியான சிசிடிவி கேமரா வலையமைப்பு, பிங்க் போலீஸ் பூத்கள் ஆகியவற்றை இவர் நிர்வாகத்திடம் வலியுறுத்தி இருக்கிறார்.

ஜன்னத் பிஷ்னோய்யின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது பல்வேறு போராட்டங்களின் புகைப்படங்களும், வீடியோக்களும் இடம்பெற்றிருக்கின்றன. அதில் ஒரு வீடியோவில், பெண்கள் கூட்டத்திற்கு தலைமை தாங்கி நிற்கும் ஜன்னத், "ஆணாதிக்கத்தை தகர்த்தெறிவோம்" என்ற பேனருடன், "எங்களுக்கு நீதி வேண்டும்" என உரக்க கர்ஜிப்பதை பார்க்க முடிந்தது.

டெல்லி கல்கஜி பகுதியில் சிறுமி ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டதை ஒட்டி, டெல்லி - தேசிய தலைநகர் பகுதியில் மகளிர் பாதுகாப்பை முன்னிறுத்தி அவர் நடத்திய பிரம்மாண்ட போரட்டமே அது.

மேலும் படிக்க | பல ஆண்டுகள் போராட்ட சின்னமாக இருந்த ஜந்தர் மந்தர் மூடல்.. டெல்லி போலிஸ் முடிவால் புதிய சர்ச்சை

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

ZEENEWS TRENDING STORIES