SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

பிரதமர் பதவிக்கு OK சொன்ன சோனிய காந்தி.. கோபத்தில் ராகுல்.. 25 ஆண்டுகளுக்கு பிறகு வெளிவந்த உண்மை

Sonia Gandhi Memoir Book Explained: காங்கிரஸ் மூத்த தலைவரும், நாடாளுமன்ற குழு தலைவருமான சோனியா காந்தியின் சுயசரிதை புத்தகம் இன்று வெளியானது. இந்த புத்தகத்தில் தனது பிரதமர் பதவி குறித்த மனப்போராட்டங்கள் குறித்து அதில் குறிப்பிட்டுள்ளார். கிட்டதட்ட 25 ஆண்டுகளுக்கு பிறகு, உண்மை வெளிவந்துள்ளன.

Written By Umabarkavi K
Published: Nov 10, 2026, 04:15 PM IST | Updated: Nov 10, 2026, 04:37 PM IST
Join

Sonia Gandhi Memoir Book Explained: இந்தியாவின் முன்னாள் பிரதமரான ராஜீவ் காந்தியின் மனைவியும், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் மருமகள் சோனியா காந்தி. ராஜீவ் காந்தியின் படுகொலைக்கு பிறகு, தனிப்பட்ட ரீதியாகவும், பொதுவாழ்க்கையிலும் பல போராட்டங்களை கடந்து வந்தவர் சோனியா காந்தி. தொடர் தேர்தல் தோல்விக்கு பிறகு, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியை 2004ஆம்  ஆண்டு ஆட்சியில் அமர வைத்ததில் சோனியா காந்தி முக்கிய பங்காற்றினார். 

சோனியா காந்தியின் சுயசரிதை புத்தகம்

தற்போது தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும் சோனியா காந்தி, தனது இளம்வாழ்க்கை, ராஜீவ், இந்திரா காந்தி உடனான உறவு, அரசியல் பயணம் குறித்தும் புத்தகம் ஒன்றை எழுதி இருக்கிறார். 'பிலாங்கிங்: ஏ ஜர்னி ஆஃப் லவ்' (Belonging: A Journey Of Love) என்ற 544 பக்க சுயசரிதை புத்தக்கத்தை சோனியா காந்தி எழுதியுள்ளார்.  இந்த புத்தகத்தை இன்று (நவம்பர் 10) ஹார்பர்காலின்ஸ் (HarperCollins India) பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்த புத்தகம் இன்று வெளியான நிலையில், சில முக்கிய விஷயங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, தனது பிரதமர் பதவி குறித்த மனப்போராட்டங்கள் குறித்து சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும் படிக்க: PMSYM: அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம், எப்படி பெறுவது?

சோனியா காந்தியும்.. பிரதமர் பதவியும்..

தனது பிரதமர் பதவி குறித்த மனப்போராட்டங்களும் சோனியா காந்தி தனது சுயசரிதை புத்தகத்தில் குறிப்பிட்டு இருக்கிறார். பிலாங்கிங் புத்தகத்தில் அவர் கூறியிருப்பதாவது, தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு தான் பிரமராகும் வாய்ப்பு குறித்து தன் குழந்தைகளுடன் (ராகு காந்தி, பிரியங்கா காந்தி) பேசியதாக குறிப்பிட்டுள்ளார். தேர்தலில் கட்சி வெற்றி பெற்றால், பிரதமர் பதவியை ஏற்பீர்களா என்று ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி நேரடியாக சோனியாவிடம் கேட்டிருக்கின்றனர்.

அதற்கு சோனியாக காந்தியுடம் "நிச்சயமாக பிரதமர் பதவியை ஏற்க மாட்டேன்" என உறுதியளித்தார். தனது பாட்டி இந்திரா காந்தி மற்றும் தந்தை ராஜீவ் காந்தி ஆகியோரின் படுகொலைகளால் ஏற்பட்ட துயரத்தை தனது பிள்ளைகளான ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் அனுபவித்திருப்பதால், தான் பிரதமராகக்கூடாது என்று அவர்கள் கருதுவதாக சோனியா காந்தி கூறினார். அத்துடன் அந்த விஷயம் முடிந்தது. நான் அதைப்பற்றி வேறு யாரிடமும் பேசவே இல்லை என சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

2004 நாடாளுமன்ற தேர்தல் காலம் முழுவதும் பொதுவெளியில் இதுகுறித்த கேள்விகள் எழுந்தபோது, தான் எந்தப் பதிலும் அளிக்காமல் தவிர்த்துவிட்டதாகக் கூறுகிறார். அந்தச் சமயத்தில் கட்சியை ஒற்றுமையாகப் பாதுகாப்பதும், எதிர்க்கட்சியினரை ஒற்றுமையுடன் எதிர்கொள்வதுமே முக்கியமாக இருந்ததால், கட்சிக்குள் தலைமைப் போட்டியைத் தவிர்க்க விரும்பியதாகத் தெரிவிக்கிறார். தன் மிக நெருங்கிய சக ஊழியர்களிடம் கூட இதைப் பற்றிப் பேசாமல் இருந்ததாக தெரிவித்தார். கடந்த கால காங்கிரஸ் கட்சியின் பாரம்பரியத்தைத் தொடர நீண்ட ஆட்சியனுபவமும், கறைபடாத நேர்மையும் கொண்ட ஒருவரே பொருத்தமானவராக இருக்க முடியும் என்பதைத் தான் உள்ளுணர்வாக உணர்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க: காங்கிரஸுக்கு காத்திருக்கும் ஆப்பு! வரலாறு காணாத அளவில் குறைந்த நன்கொடை.. என்ன காரணம்?

நான் பிரதமராக மாட்டேன்..

மேலும், பிரதமர் பதவி விவகாரத்தில் என் உணர்வுகள் மாறிக்கொண்டே இருந்தன. ஒரு நிமிடம் நான் தெளிவாக இருந்தேன், அடுத்த நிமிடமே என் மனம் குழப்பத்தில் இருந்தது. சில கூட்டணித் தலைவர்கள் தன்னைச் சந்தித்து, தங்களது முன்மொழிவுக்கு ஒப்புக்கொள்ளுமாறு வற்புறுத்தினர். இதற்கிடையில், கூட்டணித் தலைவர்களுடன் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த கூட்டத்தில் தான் பிரதமர் பதவியை ஏற்க வேண்டும் எனக் கூறி கூச்சலிட்டனர். வாழ்த்துகளை தெரிவித்தனர். அப்போது குழப்பத்தில் இருந்த நான் சரி என்று முணுமுணுத்தேன்.

இதனை அடுத்து, இந்த கூட்டத்தில் இருந்த ஒருவர் சோனியா காந்தி ஒப்புக் கொண்டுவிட்டார் என  மகிழ்ச்சியுடன் கூறினார். அப்போது,  அறையின் ஜன்னல்கள் திறந்திருப்பதை தான் கவனிக்கவில்லை என்றும், பிரியங்கா அதன் வெளியே நின்று கொண்டிருந்ததாகவும் அவர் குறிப்பிடுகிறார். இதுபற்றி, பிரியங்கா காந்தி, ராகுலிடம் கலக்கத்துடன் கூறியிருக்கிறார். பிரதமராக பதவியேற்பதை அவர் (சோனியா காந்தி) சம்மதித்துவிட்டாள் என்று பிரியங்கா அழுதுகொண்டே கூறியதைக் கேட்டு ராகுல் அதிர்ச்சியடைந்தார். பின்னர், இருவரும் பதற்றமாக தன்னை நோக்கி வந்து,

"நீ சம்மதித்துவிட்டாயா?" என்று ராகுல் கோபமாக உரக்கக் கேட்டார். அதற்கு சோனியா காந்தி, "அவர்கள் என் பேச்சைக் கேட்கவில்லை, எனக்கு இதில் விருப்பமில்லை என்று உனக்கே தெரியும், நான் கடுமையான அழுத்தத்திற்கு ஆளானேன்" என்று பதிலளித்தார். பிரியங்கா தாயாரிடம், "அம்மா, நீங்களே இதில் எப்போது தெளிவாகத்தானே இருந்தீர்கள்? யாராலும் கட்டாயப்படுத்தப்பட வேண்டாம். நீங்கள் என்ன முடிவு செய்தீர்களோ அதையே செய்யுங்கள்.  இதைச் சமாளிக்க நாங்க இருவரும் இருக்கிறோம்"

என்று ஆறுதல் கூறினார். இதன்பிறகு, இரவு முழுவதும் தன் மனதைப் பெரிதும் அலைக்கழித்த எண்ணங்களையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தித் தன் பாரத்தை இறக்கிவைத்த ஒரு நீண்ட இரவாக அது இருந்தது என குறிப்பிட்டார். ராகுல், பிரியங்கா காந்தி அனைவரும் அவர்களது அறையில் தூங்கிக் கொண்டு இருந்தனர். எனது அறையில் கணவர் ராஜீவ் காந்தி தூங்கும் இடத்தில் நான் படுத்துக் கொண்டு யோசித்தேன். எனக்குள் பல விஷயங்கள் தோற்றின.

”சோனியா, இது ஒரு அபத்தமான யோசனை. நீ இத்தாலியில் பிறந்து வளர்ந்தவள். ஆனால் இங்கே, உலகின் மறுமுனையில் உள்ள ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொண்ட ஒரு தேசத்தை வழிநடத்த நீ தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறாய். இது உன் நாடு. நீ நேசித்தவரை இழந்தபோது, நாட்டு மக்கள் உன்னைத் தன் சொந்த மகளைப் போல அரவணைத்தது, ஆறுதல் அளித்து, உன்னை வளர்த்தெடுத்திருக்கிறார்கள். உன் மீதும், உன் கட்சி மீதும் நம்பிக்கை வைத்தவர்களுக்கு நீ ஆற்ற வேண்டிய பொறுப்பை எப்படி கைவிட முடியும்?"

என மனத்தில் யோசித்துக் கொண்டிருந்த சோனியா, நள்ளிரவில் திடீரென எழுந்து, ராகுலின் அறைக்கு சென்று, அவரிடம் "நான் முடிவு செய்துவிட்டேன். எனது நிலைப்பாட்டிலேயே உறுதியாக இருக்கப் போகிறேன்" என்று அவரிடம் கூறினார்.

நாடாளுமன்றத்தில் நடந்த முக்கிய மீட்டிங்

இதன்பிறகு, நாடாளுமன்றத்தில் சோனியா காந்தி தலைமையில் நடந்த கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள், தேர்தலில் வெற்றி பெற்ற எம்பிக்கள் என பலரும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மீண்டும் சோனியா காந்தி பிரதமர் பதவியை ஏற்க வேண்டும் என தலைவர்கள் கூச்சலிட்டனர்.

இந்த சம்பவத்தில் உரையை வாசிக்க தொடங்கிய சோனியா காந்தி, நான் பதவியை  ஏற்க மறுக்கிறேன் என கூறினார். அவர் இந்த வார்த்தைகளைக் கூறியதும், அந்த அரங்கத்தில் பெரும் கூச்சல் குழப்பமும் அமளியும் வெடித்தது. "வேண்டாம், வேண்டாம், வேண்டாம்" என்று அவர்கள் கத்தியதுடன், சிலர் ஆக்ரோஷமாகச் சைகை செய்ததாக சோனியா காந்தி குறிப்பிட்டார். அப்போது என்னை புரிந்து கொள்ளுமாறு சோனியா காந்தி கூறியிருக்கிறார்.  

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும்  அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுக்க அனுமதிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டபோது அவர்கள் ஒப்புக்கொண்டனர். உடன்பாடு ஏற்பட்டதும், அவர் டாக்டர் மன்மோகன் சிங்கின் பெயரை அறிவித்தார்; காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகிய அவர், டாக்டர் சிங்கை அதன் தலைவராகப் பரிந்துரைத்தார்.

மீண்டும் கைதட்டல்கள் வெடித்தன. அனைவரும் எழுந்து நின்று சிலிர்ப்புடன் முழக்கங்களை எழுப்பினர், சிலரது கண்களில் கண்ணீர் வழிந்ததுடன், அவரது குழந்தைகளும் எழுந்து நின்று கைதட்டுவதை அவர் கவனித்தார். மேடையிலிருந்து தனது ஆவணங்களைச் சேகரித்துவிட்டு அங்கிருந்து அவர் நடந்து சென்றார் என குறிப்பிட்டுள்ளார். நீண்ட வேதனை நிறைந்த அந்தப் பெரும் போராட்டம் பிறகு முடிவுக்கு வந்தது.

மேலும் படிக்க: தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் மீது லஞ்ச வழக்கு: விசாரணைக்கு கேரள அரசு அனுமதி... நடந்தது என்ன?
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

ZEENEWS TRENDING STORIES