• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /8வது ஊதியக் குழு: 2026-க்கு முன் பணி ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய திருத்தம் கிடைக்காதா?

8வது ஊதியக் குழு: 2026-க்கு முன் பணி ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய திருத்தம் கிடைக்காதா?

Written BySripriya Sambathkumar
Published: Aug 15, 2026, 03:03 PM IST|Updated: Aug 15, 2026, 03:10 PM IST
joinshare
8th Pay Commission: ஆணையம் தனது அறிக்கையை 2027 மே மாதத்திற்குள் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பணி விதிமுறைகளில் செய்யப்படும் அதிகாரப்பூர்வ திருத்தம் மட்டுமே, உங்கள் ஓய்வூதியத்தில் ஏற்படக்கூடிய உண்மையான, சட்டப்பூர்வமான உயர்வைத் தீர்மானிக்கும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

8th Pay Commission: 2026 ஜனவரி 1-க்கு முன் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதிய உயர்வு கிடைக்குமா, கிடைக்காதா என்ற முக்கிய கெள்வி ஓய்வூதியதாரர்களுக்கு உள்ளது. ஓய்வூதியதாரர் அமைப்புகள் அதிகாரப்பூர்வ ஆவணத்தில் உள்ள முக்கிய குறைபாட்டைச் சுட்டிக்காட்டி மத்திய அரசிடம் நேரடியாக முறையிட்டுள்ளனர்.

8th Pay Commission1/8

8வது ஊதியக் குழு

8வது ஊதியக் குழுவின் 'செயல்பாட்டு வரம்புகள்' (Terms of Reference) வெளியிடப்பட்டது முதலே, மத்திய அரசு ஓய்வூதியதாரர்களும் அவர்களுக்கான அமைப்புகளும் அரசிடம் தங்கள் அச்சத்தையும், கேள்விகளையும் தெரிவித்து வருகின்றனர். 8-வது ஊதியக் குழுவின் 'செயல்பாட்டு வரம்புகளில்' (ToR) தங்களைப் பற்றிய தெளிவான குறிப்புகள் இல்லாததால் ஓய்வூதியதாரர் அமைப்புகள் அதிருப்தி அடைந்துள்ளன.
Central Government Pensioners2/8

மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள்

2026 ஜனவரி 1-க்கு முன் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதிய உயர்வு கிடைக்குமா, கிடைக்காதா என்ற முக்கிய கெள்வி ஓய்வூதியதாரர்களுக்கு உள்ளது. புதிய ஊதியக் குழு குறித்து மத்திய அரசு ஊழியர்கள் ஆர்வத்துடன் இருக்கும் நிலையில், ஓய்வூதியதாரர் அமைப்புகள் அதிகாரப்பூர்வ ஆவணத்தில் உள்ள இந்த முக்கிய குறைபாட்டைச் சுட்டிக்காட்டி மத்திய அரசிடம் நேரடியாக முறையிட்டுள்ளனர்.
Letter to PMO3/8

பிரதமர் அலுவலகத்திற்கு அமைப்புகள் கடிதம்

முன்னதாக, ஓய்வூதிய திருத்த விதிகள் குறித்த தெளிவற்ற தன்மை குறித்து பிரதமர் அலுவலகத்திற்கு அமைப்புகள் கடிதம் எழுதியுள்ளன. ஊதியக் குழுவிற்கான அரசின் அறிவிப்பு சம்பளம் மற்றும் படிகள் பற்றி குறிப்பிடுகிறது, ஆனால் 2026-க்கு முந்தைய ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதிய திருத்தம் குறித்து அதில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
Pension Hike4/8

ஓய்வூதிய உயர்வு

'பாரத் பென்ஷனர்ஸ் சமாஜ்' (BPS) மற்றும் 'அனைத்திந்திய பாதுகாப்பு ஊழியர்கள் கூட்டமைப்பு' (AIDEF) போன்ற முக்கிய அமைப்புகள், பிரதமர் அலுவலகத்திற்கு எழுதிய கடிதத்தில் இந்த 'தெளிவற்ற வாசகங்கள்' குறித்துச் சுட்டிக்காட்டியுள்ளன. இதை இப்போதே சரிசெய்யாவிட்டால், எதிர்கால ஓய்வூதிய உயர்வு தொடர்பான பெரிய சட்ட மற்றும் நிர்வாகச் சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்று அவை எச்சரித்துள்ளன.
Family Pension5/8

குடும்ப ஓய்வூதியம்

ஓய்வூதியம் என்பது ஒரு அரசியலமைப்பு உரிமை, அது ஒரு சுமை அல்ல என்று அமைப்புகள் கூறுகின்றன. ToR -இல் இடம்பெற்றுள்ள 'பங்களிப்பு இல்லாத ஓய்வூதியத் திட்டம்' (non-contributory pension scheme) என்ற வார்த்தையை இந்த அமைப்புகள் கடுமையாக எதிர்க்கின்றன. ஓய்வூதியம் என்பது அரசாங்கத்தின் மீதான வெறும் நிதிச் சுமை மட்டுமல்ல; அது பல ஆண்டுகால பணிக்குப் பிறகு பெறப்படும் ஒரு அரசியலமைப்பு உரிமை என்று அவை வாதிடுகின்றன. மேலும், தற்போதைய குடும்ப ஓய்வூதியம், அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் மருத்துவச் செலவுகளைச் சமாளிக்கப் போதுமானதாக இல்லை என்றும் அவை சுட்டிக்காட்டுகின்றன.
Pensioners6/8

ஓய்வூதிய திருத்தம் குறித்த முடிவை 33 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் எதிர்நோக்கியுள்ளன

தற்போது இந்தியாவில் சுமார் 33.76 லட்சம் மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் உள்ளனர் (பாதுகாப்புப் படை ஊழியர்கள் இதில் அடங்கமாட்டார்கள்). லட்சக்கணக்கான இந்தக் குடும்பங்களின் எதிர்காலம், ஊதியக் குழு இறுதியாக எடுக்கும் முடிவைப் பொறுத்தே அமையும்.
8th Pay Commission 7/8

8வது ஊதியக் குழு

வெறும் வாய்மொழி உறுதிமொழிகளோடு நின்றுவிடாமல், எழுத்துப்பூர்வ திருத்தத்தை அளிக்க வேண்டும் என ஓய்வூதியதாரர் குழுக்கள் கோருகின்றன. கடந்த நவம்பர் 2025-ல், மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், 8-வது ஊதியக் குழு பழைய ஓய்வூதியங்களைத் திருத்தியமைத்து, ஓய்வூதியதாரர்களின் நலன்களை முழுமையாகப் பாதுகாக்கும் என்று உறுதியளித்தார். இருப்பினும், ஓய்வூதியதாரர் குழுக்கள் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளனர். வாய்மொழி வாக்குறுதிகள் போதாது என்றும், அரசு பணி விதிமுறைகளில் (ToR) தெளிவான, எழுத்துப்பூர்வ திருத்தத்தை வெளியிட வேண்டும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
Central Government Pensioners8/8

ஓய்வூதியதாரர்களுக்கான அறிவுரை

ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் என யாராக இருந்தாலும், ஊதிய உயர்வு, ஓய்வூதிய உயர்வு குறித்த எந்த வித சந்தை வதந்திகளையும் நம்ப வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஆணையம் தனது அறிக்கையை 2027 மே மாதத்திற்குள் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பணி விதிமுறைகளில் செய்யப்படும் அதிகாரப்பூர்வ திருத்தம் மட்டுமே, உங்கள் ஓய்வூதியத்தில் ஏற்படக்கூடிய உண்மையான, சட்டப்பூர்வமான உயர்வைத் தீர்மானிக்கும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
TAGS:
Pay Commission

Trending

  • News
  • Photos
  • Videos
ரேஷன் கார்டு இருக்கா? இந்த வசதி இருப்பதை மறக்காதீங்க.. ONORC மூலம் கிடைக்கும் முக்கிய நன்மை

ரேஷன் கார்டு இருக்கா? இந்த வசதி இருப்பதை மறக்காதீங்க.. ONORC மூலம் கிடைக்கும் முக்கிய நன்மை

2

அமெரிக்காவின் திடீர் தடை... இந்திய ஊழியர்களுக்கு இனி கிரீன் கார்டு கிடைக்காதா? Explained

3

NZ ஒருநாள் தொடர்: 2 இந்திய அணிகள்.. புவி, ஷமிக்கு வாய்ப்பு? முழு விவரம்

4

புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: என்ஆர் காங்கிரஸ் அசோக் ஆனந்த் 8,501 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

5

அக்டோபர் 31ல் குரு - கேது சேர்க்கை.. இந்த 4 ராசிகளுக்கு பணம் கொட்டும்!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.