அஜித்குமாரின் நடிப்பில் உருவாக இருக்கும் திரைப்படம், டேர்டெவில். இந்த திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க இருக்கிறார். இதில் யாரெல்லாம் நடிக்க போகிறார்கள் என்பது குறித்து அவரே ஒரு பகிர்ந்துள்ளார்.
தமிழ் திரையுலகின் முக்கிய நடிகராக இருப்பவர், அஜித்குமார். இவர், சமீப காலமாக கார் ரேஸில் பிசியாக இருக்கிறார். இதையடுத்து, இவர் நடிக்கும் டேர்டெவில் திரைப்படத்தில் யார் யார் நடிக்கின்றனர் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.
1/5
ஆதிக் ரவிச்சந்திரன்
நடிகர் அஜித்குமாரின், ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தை இயக்கியவர், ஆதிக் ரவிச்சந்திரன். இவர், தமிழ் திரையுலகின் முக்கிய இயக்குநராகவே இருந்தாலும், அஜித்தின் தீவிர ரசிகராக இருக்கிறார். இதனால், தன்னுடைய நீண்ட நாள் ஆசையான ’அஜித்தை வைத்து படம் எடுக்க வேண்டும்’ என்பதை குட் பேட் அக்லி மூலம் தீர்த்துக்கொண்டார்.
2/5
குட் பேட் அக்லி
குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் மீண்டும் அஜித்துடன் கைக்கோர்க்க இருக்கிறார். இது, அஜித்தின் 64வது படமாகும். இந்த படத்திற்கு டேர்டெவில் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த ப்ராஜெக்ட்டிற்கு பல நாட்களாக தயாரிப்பாளர்கள் தேடி வந்த நிலையில், யாருமே படத்தை தயாரிக்க முன்வரவில்லை. இதையடுத்து, அஜித்தே தன் மனைவியின் பெயரில் இப்படத்தை தயாரிக்கிறார்.
3/5
டேர் டெவில்
டேர் டெவில் திரைப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் உள்ளிட்டோர் நடிப்பதாக தகவல் வெளியானது. ஆனால், மோகன்லாலுக்கு பதில், நடிகர் உன்னி முகுந்தன் நடிப்பதாக கூறப்படுகிறது. அதே போல தெலுங்கில் இருந்தும் நடிகர் சுனில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறாராம்.
4/5
பிரபு சுனில்
நடிகர் பிரபு, நடிகர் சுனில் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கிறார்களாம். இவர்களை அஜித்துடன் திரையில் பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர். டேர் டெவில் திரைப்படத்தின் நட்சத்திர பட்டியலில், நடிகரும் இயக்குநருமான பார்த்திபனும் இணைந்துள்ளாராம். இவருக்கும் ஒரு முக்கிய ரோல் கொடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
5/5
ஸ்ரீலீலா
அடுத்ததாக, நடிகை ஸ்ரீலாலா நடிப்பதாக கூறப்படுகிறது. இவர் தெலுங்கில் அடுத்தடுத்து பல படங்களில் கமிட் ஆகி, இப்போது தமிழிலும் அடுத்தடுத்து நடித்து வருகிறார்.