• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /நடிகர் நம்பியாரின் நிறைவேறாத கடைசி ஆசைகள்! வில்லனின் இன்னொரு முகம்!

நடிகர் நம்பியாரின் நிறைவேறாத கடைசி ஆசைகள்! வில்லனின் இன்னொரு முகம்!

Written ByKarthikeyan Sekar
Published: Aug 16, 2026, 13:14 IST|Updated: Aug 16, 2026, 15:27 IST
joinshare
Tamil Cinema : நடிகர் நம்பியாரின் நிறைவேறாத பயண ஆசைகள் குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.

Tamil Cinema : தமிழ் சினிவிமாவில் வில்லத்தனமான நடிகராக அறியப்பட்ட நம்பியார், தனக்கு இருக்கும் பயண ஆசைகளை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அவர் எந்தெந்த ஊர்களுக்கு செல்ல வேண்டும் என ஆசைப்பட்டார் என்பதை இங்கே விரிவாக பார்க்கலாம், 
 

Actor M.N. Nambiar news1/7

எம்.என்.நம்பியார்

தமிழ் சினிமாவில் தங்களின் கம்பீரமான குரலாலும், மிரட்டலான வில்லத்தனத்தாலும் ரசிகர்களைக் கவர்ந்த முன்னணி நடிகர்களில் முதன்மையானவர் எம்.என்.நம்பியார். திரையில் கொடூரமான வில்லனாகக் காட்டப்பட்டாலும், நிஜ வாழ்க்கையில் அவர் ஆன்மீகவாதியாகவும், சாதுவான மனிதராகவும் வாழ்ந்தார் என்பது பலரும் அறிந்தது. ஆனால், அவருக்குள் ஒரு தீவிரமான உலகப் பயணி ஒளிந்திருந்தார் என்பது பலருக்கும் தெரியாத ஒரு சுவாரசியமான தகவல்.
Tamil cinema news2/7

பிரம்மாண்டமான ஆசைகள்

நம்பியாரின் பழைய பேட்டி ஒன்றில், உலகைச் சுற்றி வர தனக்கு இருக்கும் பிரம்மாண்டமான ஆசைகள் குறித்து அவர் பகிர்ந்துள்ளார். அந்தப் பேட்டியில் நம்பியார் தனக்கு இருக்கும் உலகப் பயண ஆசைகளைப் பட்டியலிடுகிறார். பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு அருகில் பசிபிக் பெருங்கடலில் இருக்கும் சுமார் 40,000 அடி ஆழமுள்ள பகுதிக்கு, மரியானா அகழி போன்ற ஆழமான பகுதி, செல்ல வேண்டும் என்பது அவரது முதல் ஆசையாக இருந்துள்ளது.
Actor M.N. Nambiar interview3/7

நீருக்கடியில் செல்ல வேண்டும்

தொடர்ந்து பேசிய அவர், அலாஸ்காவும் சைபீரியாவும் இணையும் 'பெரிங் நீரிணை' (Bering Strait) வழியாக, ஆர்க்டிக் பெருங்கடலைக் கடந்து ஐஸ்லாந்துக்கு நீருக்கடியில் செல்ல வேண்டும் என்றும், சவுத் போல் (தென் துருவம்) பகுதியில் பனிக்கட்டிகளின் மீது நடந்து செல்ல வேண்டும் என்றும் கூறுகிறார்.
Actor M.N. Nambiar History4/7

நீண்ட நாள் ஆசை

மேலும், உலகிலேயே மிக நீளமான மலைத்தொடரான தென்னமெரிக்காவின் 'ஆண்டிஸ் மலைத்தொடரில்' (Andes Mountains) சுமார் 4,000 மைல்கள் நடந்து அல்லது விமானம் மூலமாவது பயணிக்க வேண்டும் என்ற தனது நீண்ட நாள் ஆசையையும் வெளிப்படுத்தியுள்ளார். அவரது அண்மைக்கால ஆசையாக அவர் குறிப்பிட்ட விஷயம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறது.
Actor M.N. Nambiar update5/7

மூன்று முறை சூரிய உதயம்

டோக்கியோவில் இருந்து கோபன்ஹேகன் செல்லும் ஒரு குறிப்பிட்ட விமானப் பயணம் குறித்துப் பேசுகிறார். அலாஸ்காவின் தலைநகரான என்கரேஜ் வழியாக, வட துருவத்தை (North Pole) நோக்கிச் செல்லும் அந்த விமானத்தில் பயணித்தால், ஒரே பயணத்தில் இரண்டு மூன்று முறை சூரிய உதயத்தையும், சூரிய அஸ்தமனத்தையும் பார்க்க முடியும் என்றும், அதில் பயணிக்க தனக்கு ஆசை என்றும் மிகத் துல்லியமான புவியியல் அறிவோடு விளக்குகிறார்.
Actor M.N. Nambiar latest News6/7

3,000 மைல்கள் கப்பல் பயணம்

அதேபோல், பெரு நாட்டில் உற்பத்தியாகி அட்லாண்டிக் கடலில் கலக்கும், உலகின் மிகப்பெரிய நதியான அமேசான் நதியில் சுமார் 3,000 மைல்கள் சாதாரணக் கப்பலில் பயணிக்க வேண்டும் என்பதும் அவரது கனவாக இருந்துள்ளது.
Actor M.N. Nambiar7/7

மனிதனாக வாழ ஆசை

"உங்களுக்குச் சின்னச் சின்ன ஆசைகள் எதுவுமே இல்லையா?" என்ற கேள்விக்கு, "கிடையாது" என்று சிரித்துக்கொண்டே மறுக்கிறார். மேலும், "வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற ஆசை ஏதும் இல்லையா?" என்ற கேள்விக்கு, "இல்லை, நல்லவனாக இருக்க வேண்டும். மனிதனாக வாழ்வதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்" என்று அந்த பழைய பேட்டியை நிறைவு செய்கிறார். இந்த வீடியோ இப்போதும் வைரலாக பார்க்கப்படுகிறது.
TAGS:
Tamil Cinema

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
IPL 2027 மினி ஏலம்: 4 தரமான பவுலர்களை தட்டிதூக்க CSK பிளான்.. முஸ்தபிசுர் வேண்டாம்!

IPL 2027 மினி ஏலம்: 4 தரமான பவுலர்களை தட்டிதூக்க CSK பிளான்.. முஸ்தபிசுர் வேண்டாம்!

2

வெற்றி ஆடுகள் திட்டத்துக்கு விண்ணப்பிப்பது எப்படி? இலவசம் - முக்கிய அப்டேட்

3

டாஸ்மாக்கில் ரூ.1000க்கு மேல் மது வாங்கினால் யுபிஐ கட்டாயம்.. அமலுக்கு வந்த புதிய நடைமுறை

4

தவெக எம்.எல்.ஏ ஆபாச மெசேஜ் அனுப்பியதற்கு ஆதாரம் எங்கே? கள்ளக்குறிச்சி ஆட்சியர் வழக்கில் நீதிபதிகள் கேள்வி!

5

நவம்பர் 24 பிரம்மாண்ட சூப்பர்மூன் : எந்த நேரத்தில், எப்படி, எப்போது பார்ப்பது..?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.