ரஜினிகாந்தின் மண்டபம், இடிக்கப்படப்போவதாக இயக்குநரும் ரஜினியின் மகளுமான ஐஸ்வர்யா கூறியிருக்கிறார். இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.
பிரபல நடிகர் ரஜினிகாந்த், கோடம்பாக்கத்தில் திருமண மண்டபம் ஒன்றை வைத்துள்ளார். தற்போது அந்த மண்டபம் இடிக்கப்பட போவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதனை சௌந்தர்யா ரஜினிகாந்த் உறுதிப்படுத்தியுள்ளார்.
1/5
ராகவேந்திரா திருமண மண்டபம்
ரஜினிகாந்த், 1990களில் கட்டிய மண்டபம்தான், கோடம்பாக்கத்தில் இப்போது ‘ராகவேந்திரா திருமண மண்டபம்’ எனும் பெயரில் இருக்கிறது. இந்த மண்டபத்தில் பல ஆயிரம் திருமணங்கள் இதுவரை நடந்துள்ளது.
2/5
ரஜினிகாந்த் சந்திக்கும் இடம்
இந்த மண்டபத்தில்தான், ரஜினிகாந்த் தன்னுடைய ரசிகர் மன்ற் நிர்வாகிகளை சந்திப்பார். ரசிகர் மன்ற பணிகள் தொடர்பான ஆலோசனைகளையும் மேற்கொள்வார். இந்த மண்டபத்தில் நடந்த ஒரு கூட்டத்தில்தான் தான் அரசியலுக்கு வருவதாகவும் தெரிவித்தார்.
3/5
ரஜினிகாந்த் திருமண மண்டபம் இடிக்கப்போவதாக தகவல்
ராகவேந்திரா மண்டபம் இடிக்கப்பட போவதாகவும், இங்கு நட்சத்திர ஹோட்டல் ஒன்று வரப்போவதாகவும் சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டது. இது குறித்து ரஜினிகாந்தின் மகளிடமே கேட்கப்பட்டது. இதற்கு அவர் பதிலளித்திருக்கிறார்.
4/5
36 ஆண்டுகாலமாக ரஜினிகாந்த் குடும்பத்தில் இருந்த மண்டபம்
சௌந்தர்யா இது குறித்து பேசுகையில், அந்த மண்டபம் தங்களுடைய குடும்பத்துடன் 36 ஆண்டு காலமாக இருப்பதாகவும், அதனை இடிக்கப்போவதாகவும் கூறியிருக்கிறார். மேலும், அந்த மண்டபம் இருக்கும் இடத்தில் அடுத்து என்ன செய்யப்போகிறோம் என்பது குறித்த ஆலோசனைகள் நடைபெறுவதாக தெரிவித்துள்ளார்.
5/5
ரஜினிகாந்த் மண்டபம் உள்ள இடம்
ராகவேந்திரா திருமண மண்டபம், கோடம்பாக்கத்தில் அமைந்துள்ளது. இது, லிபர்டி பார்க் ஹோட்டலுக்கு அருகே அமைந்திருக்கிறது. இங்கு பல்வேறு பிரபலங்களின் திருமணங்களும் நடந்துள்ளது.