• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /'கழுத்துக்குக் கீழே இயங்காது...' - நிஜ வாழ்க்கை சோகத்தை பகிர்ந்த நடிகை துஷாரா

'கழுத்துக்குக் கீழே இயங்காது...' - நிஜ வாழ்க்கை சோகத்தை பகிர்ந்த நடிகை துஷாரா

Written ByKarthikeyan Sekar
Published: Aug 11, 2026, 11:15 AM IST|Updated: Aug 11, 2026, 11:23 AM IST
joinshare
Dushara Vijayan : தன்னுடைய குடும்பத்தின் நிஜ வாழ்க்கை சோகம் குறித்த தகவலை பேட்டி ஒன்றில் உருக்கமாக பகிர்ந்துள்ளார் நடிகை துஷார விஜயன்

Dushara Vijayan : துஷாரா விஜயன் நடித்துள்ள மகுடம் படம் வெளியாக உள்ள நிலையில், தனுடைய குடும்பத்தின் நிஜ சோகத்தை பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். இது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.
 

Actress Dushara Vijayan1/6

துஷாரா பேட்டி

சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது, ராயன், வேட்டையன் போன்ற திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனிமுத்திரையைப் பதித்தவர் நடிகை துஷாரா விஜயன். சமீபத்தில் வெளியான 'G.D.N.' திரைப்படத்தின் விளம்பரப் பணிகளின் போது அளித்த பேட்டியில், தனது குடும்பத்தில் நடந்த சோகத்தையும், மறைந்த தனது மூத்த அக்காவுடனான பிணைப்பையும் நினைவுகூர்ந்து உருக்கமாகப் பேசியுள்ளார்.
Dushara Vijayan News2/6

தோழா படம்

துஷாரா விஜயனுக்கு லீபிகா, துர்க்கா என இரு மூத்த அக்காள்கள். இதில் இரண்டாவதாகப் பிறந்த அக்கா, பிறப்பிலேயே 'மயோபதி' (Myopathy) என்ற தசைப் பலவீன நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். 'தோழா' திரைப்படத்தில் நடிகர் நாகர்ஜுனா நடிச்ச கதாபாத்திரத்தைப் போல, இவருக்குக் கழுத்துக்குக் கீழே உடல் முழுவதும் இயங்காது. ஆனால், தலை மற்றும் முகம் சார்ந்த பகுதிகள் இயல்பாகவே இருந்தன. அதனால் அவரது அன்றாடத் தேவைகளுக்குக் குடும்பத்தினர் முழுமையாக உதவி செய்ய வேண்டியிருந்தது.
Actress Dushara Vijayan3/6

நடனம் மீது ஆர்வம்

துஷாரா விஜயனுக்குச் சிறுவயதிலேயே நடனத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டதற்கு அவரது அக்காதான் முக்கியக் காரணம். சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே, துஷாராவை இப்படி நடனமாடு, இந்த மாதிரி அசைவுகளைச் செய் என்று ஊக்கப்படுத்துவார். அக்கா கொடுத்த அந்த ஊக்கமே துஷாரா நடனத்தைக் கற்றுக்கொள்ள விதையாக அமைந்தது.
Dushara Vijayan interview4/6

நடிகை துஷாரா விஜயன் தம்பி

சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு துஷாராவின் அக்கா உயிரிழந்தார். அக்காவின் மறைவு குறித்துப் பேசிய துஷாரா, "நான் இப்போது வெளியே எங்குச் சென்றாலும் கடவுளைக் கும்பிடுவதில்லை; என் அக்காவின் புகைப்படத்தைப் பார்த்துதான் கும்பிடுகிறேன்" எனக் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
Actress Dushara Vijayan news 5/6

துஷாரா நம்பி

அதே பேட்டியில் தனது தம்பியைப் பற்றியும் துஷாரா பகிர்ந்துகொண்டார். சென்னையில் தனது தம்பியுடன் 7 ஆண்டுகள் தங்கியிருந்ததாகக் குறிப்பிட்ட அவர், "நான் அவனுக்கு அக்கா என்பதை விடத் தாய் போன்றவள். அவன் எனக்குப் பிள்ளை மாதிரி" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
மகுடம் திரைப்படம்6/6

Actress Dushara Vijayan movies

ஆர். மாதவன் நாயகனாக நடித்துள்ள GDN திரைப்படம் ஆகஸ்ட் 7 அன்று திரையரங்குகளில் வெளியானது. இதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 14 அன்று திரைக்கு வரவுள்ள 'மகுடம்' என்ற ஆக்சன் த்ரில்லர் திரைப்படத்திலும் துஷாரா விஜயன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
TAGS:
Tamil Cinema

Trending

  • News
  • Photos
  • Videos
8வது ஊதியக் குழு: ஓய்வூதியதாரர்களுக்கு இனி 11 ஆண்டுகளிலேயே முழு பென்ஷன்? விதிகளில் மாற்றம்!

8வது ஊதியக் குழு: ஓய்வூதியதாரர்களுக்கு இனி 11 ஆண்டுகளிலேயே முழு பென்ஷன்? விதிகளில் மாற்றம்!

2

IND அணியில் புவனேஷ்வர் குமார் ரீ-என்ட்ரி.. முகமது ஷமிக்கு வாய்ப்பு கிடைக்குமா? Explainer

3

இடைத்தேர்தல் முடிவுகள்: தாராபுரம், மதுராந்தகம் உள்ளிட்ட 6 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

4

மதுராந்தகம், தாராபுரம் யார் வசம்? இன்று இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை BIG RESULT

5

அதிமுகவில் இருந்து தவெக-வுக்கு தாவிய 6 எம்.எல்.ஏ-க்கள் வழக்கு.. இன்று முக்கிய தீர்ப்பு

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.