Mrunal Thakur : நடிகை மிருணாள் தாகூர், தன்னை விட 10 வயது குறைந்த கிரிக்கெட் வீரர் ஒருவரை காதலிப்பதாக தகவல் பரவியது. இதற்கு அவர் பதில் அளித்துள்ளார். இது வைரலாகி வருகிறது.
Mrunal Thakur : தென்னிந்திய திரையுலகில், முக்கிய நடிகையாக இருப்பவர் மிருணாள் தாகூர். இவர், ஒரு உணவகத்தில் இருந்து வந்த போது, இந்தியாவின் பிரபலமான கிரிக்கெட் வீரர் ஒருவரும் அந்த உணவகத்திற்குள் இருந்தார். அதிலிருந்து இவர்கள் இருவரும் டேட்டிங் செய்வதாக பலரும் கிளப்பி விட்டனர். இதற்கு மிருணாளே விளக்கம் கொடுத்திருக்கிறார்.
1/5
மிருணாள் தாகூர்
தென்னிந்திய திரையுலகில், முக்கிய நடிகையாக இருப்பவர், மிருணாள் தாகூர். இவர், சமீபத்தில் ஒரு டேட்டிங் சர்ச்சையில் சிக்கினார். இது குறித்து அவரே விளக்கமளித்திருக்கிறார்.
2/5
காதல் வதந்திகள்
மிருணாள் தாகூர் சமீபத்தில் தன்னுடைய ஊரில் இருக்கும் ஒரு பிரபலமான உணவகத்திற்கு சென்றிருந்தார். அப்போது, அதே உணவகத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் இருந்தார். இதை பார்த்த பலர், இவர்கள் இருவரும் ஒன்றாக உணவகத்திற்கு வந்ததாக நினைத்துக்கொண்டனர்.
3/5
யஷஸ்வி ஜெய்ஸ்வால்
யஷஸ்வி ஜெய்ஸ்வால், மிருணாள் தாகூரை விட, 10 வயது சிறியவர். இவர்கள் இருவரும் டேட்டிங் செய்வதாக வதந்தி பரவிய நிலையில், இதற்கு மிருணாள் தாகூர் கொடுத்துள்ள ரிப்ளை, அனைவரையும் வாயடைக்க வைத்துள்ளது.
4/5
வதந்திகளுக்கு விளக்கம்
தன்னை சுற்றி வலம் வரும் வதந்திகளுக்கு மிருணாள் தாகூர் பதிலளித்திருக்கிறார். அதில், “ப்ரோ, கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுங்கள். நாங்கள் முதலில் எங்கே ஒன்றாக இருக்கிறோம் என காட்டுங்கள். படித்தவர்கல் இது போன்ற ஆதாரமற்ற வதந்திகளை உண்மையென நம்புகிறீர்களா? என்று கேட்டிருக்கிறார்.
5/5
விளக்கம்
தொடர்ந்து பேசியிருக்கும் அவர், நாட்டில் பேச வேண்டிய எவ்வளவோ முக்கிய விஷயங்கள் இருப்பதாகவும், GenZ தலைமுறையினரிடம் இருந்து கர்ருக்கொண்டு, பயனுள்ள நல்ல விஷயங்களில் கவனம் செலுத்தி வீடியோக்களை உருவாக்குங்கள், அப்போதுதான் நல்ல வியூஸ் கிடைக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.