நடிகை ராதிகா ஆப்தே, சில படங்களில் தேவையில்லாத நெருக்கான கட்சிகளில் நடிக்குமாறும், உள்ளாடையுடன் தன்னை நடிக்க வற்புறுத்தியதாகவும் சமீபத்தில் கூறியிருக்கிறார். இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.
இந்திய திரையுலகில் முக்கிய நடிகைகளுள் ஒருவராக இருப்பவர், ராதிகா ஆப்தே. இவர், சமீபத்தில் கொடுத்த நேர்காணலில் தனக்கு படப்பிடிப்பில் நேர்ந்த சில அசௌகரிய சம்பவங்கள் குறித்து பேசியிருக்கிறார். இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.
1/5
Radhika Apte Starrer Tamil Movies
தமிழில் ஆல் இன் ஆல் அழகுராஜா, கபாலி, வெற்றிச்செல்வன், சித்திரம் பேசுதடி 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்து தென்னிந்தியாவில் பிரபலமானவர், ராதிகா ஆப்தே. தமிழில் மட்டுமல்லாது இந்தி மற்றும் பிற இந்திய மொழி படங்களிலும் இவர் நடித்திருக்கிறார்.
2/5
Radhika Apte – A Global Cinema Heroine
ராதிகாவின் மார்கெட் இந்தியாவோடு நின்று விடவில்லை. அவர் சில ஹாலிவுட் படங்களிலும் நடித்திருக்கிறார். ஒரு சில படங்களில் அவர் தேர்ந்தெடுத்து தைரியமாக நடிக்கும் பல காட்சிகள் மக்களுக்கு அவர் மீது கலவையான பார்வையை கொடுத்தன.
3/5
Radhika Apte gives an interview about the discomforts experienced in the film industry
சமீபத்தில் ராதிகா ஆப்தே ஒரு பேட்டியில் பேசியிருந்தார். அப்போது, தான் நடித்த சில படங்களில் சம்மந்தமே இல்லாமல் நெருக்கமான காட்சிகளில் நடிக்குமாறு தான் வற்புறுத்தப்பட்டதாக கூறியிருந்தார். தான் நிர்வாணமாக சில படங்களில் நடித்துள்ளதை சிலர் அட்வாண்டேஜ் ஆக எடுத்துக்கொள்வதாக கூறினார். மேலும், ஒரு 15 விநாடிகள் மட்டூம் போதும் என்று சொல்லி முத்தக்காட்சியில் நடிக்க சொன்னதாகவும் தெரிவித்தார்.
4/5
Shocking information revealed by Radhika Apte
ஒரு படத்தின் சண்டை காட்சியில், உள்ளாடை மற்றும் பிரா அணிந்து கொண்டு நடிக்க முடியுமா என்று தன்னிடம் கேட்டதாகவும், தான் அப்படி நடிக்க முடியாது என்று கூறிவிட்டதாகவும் கூறினார். அப்போது, “இதற்கு முன்னாடி அப்படி நடித்திருக்கிறீர்களே” என்கிற கேள்வி தன்னிடம் கேட்கப்பட்டதாகவும், “அப்போது செய்தேன், இப்போது முடியாது” என்று கூறிவிட்டதாகவும் தெரிவித்தார்.
5/5
The shocking revelation made by Radhika Apte
ஒரு நடிகர், ஏற்கனவே சில நெருக்கமான காட்சிகளில் நடித்திருக்கிறார் என்பதனால் மட்டும், தொடர்ந்து அதே மாதிரியான காட்சிகளில் நடிக்க சம்மதிப்பார் என நினைக்க கூடாது என்றும், ஒரு திரைப்படம் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக, நடிகர்களின் விருப்பத்தையும் தனிப்பட்ட எல்லைகளையும் மீறி, அழுத்தம் கொடுக்க கூடாது என்றும் கூறியிருந்தார்.