• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /சிஸ்டத்தில் பிரச்னை.. தமிழகத்தில் தொடரும் குழந்தை திருமணங்கள்.. கடிவாளம் போடுமா அரசு?

சிஸ்டத்தில் பிரச்னை.. தமிழகத்தில் தொடரும் குழந்தை திருமணங்கள்.. கடிவாளம் போடுமா அரசு?

TN Child Marriages Explained: சர்வதேச குழந்தை திருமணம் ஒழிப்பு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், தமிழகத்தில் நடக்கும் குழந்தை திருமணங்கள் குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது, தமிழகத்தில் குழந்தைத் திருமணங்கள் குறைந்திருந்தாலும், கடந்த 5 ஆண்டுகளில் அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்ட பிறகும், சுமார் 40 சதவீதம் குழந்தை திருமணங்களை நடந்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.

Written ByUmabarkavi K
Published: Nov 27, 2026, 16:34 IST|Updated: Nov 27, 2026, 16:49 IST
joinshare
சிஸ்டத்தில் பிரச்னை.. தமிழகத்தில் தொடரும் குழந்தை திருமணங்கள்.. கடிவாளம் போடுமா அரசு?
Image Credit: Image Source: Chatgpt

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
சிஸ்டத்தில் பிரச்னை.. தமிழகத்தில் தொடரும் குழந்தை திருமணங்கள்.. கடிவாளம் போடுமா அரசு?

சிஸ்டத்தில் பிரச்னை.. தமிழகத்தில் தொடரும் குழந்தை திருமணங்கள்.. கடிவாளம் போடுமா அரசு?

2

GST பதிவு இல்லாதவரிடம் பொருள் வாங்கினாலும் இ-இன்வாய்ஸ் போட வேண்டும்: புதிய விதி என்ன?

3

CSK: 19 வயது வீரருக்கு குறி.. யார் அவர்? கம்பேக் கொடுக்க தோனி - ஜாகீர் மாஸ்டர் பிளான்!

4

திருப்பரங்குன்றம் கல்தூணில் தீபம்.. பக்தர்களுக்கு அனுமதி.. உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவுகள்

5

வீடு வாங்கியவர்களுக்கு இனி ஜெயில் பயம் இல்லை: RERA சட்ட விதியில் தமிழக அரசு அதிரடி திருத்தம்!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Child Marriages Explained: இந்தியாவை பொறுத்தவரை பெண்களின் திருமண வயது 18 என்றும் ஆண்களின் திருமண வயது 21 என்றும் சட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது. 2006ஆம் ஆண்டு முதல் குழந்தை திருமண தடுப்புச் சட்டம் அமலில் இருந்து வருகிறது. ஆனால், குழந்தை திருமணங்கள் மட்டும் குறைந்தபாடில்லை. மதக் கட்டுப்பாடுகள், சாதிக்குள் திருமணம் போன்றவற்றால் குழந்தை திருமணங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

எனவே, குழந்தை திருமணத்தை தடுக்கவும், அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மத்திய - மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், ஆண்டுதோறும் நவம்பர் 27ஆம் தேதி சர்வதேச குழந்தைத் திருமண ஒழிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில், இந்த தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், தமிழகத்தில் தொடர்ந்து குழந்தை திருமணங்கள் நடந்து வருவதாக ஷாக் ரிப்போர்ட் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் குழந்தை திருமணங்கள் குறைவு

தேசிய குடும்ப சுகாதார ஆய்வு (NFHS)-6 தரவுகளின்படி, தமிழகத்தில் குழந்தை திருமணங்கள் 10.5 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் சராசரியாக 20% பெண்களுக்குக் குழந்தைத் திருமணம் நடக்கும் நிலையில், தமிழ்நாட்டில் 10.5 சதவீதம் குழந்தை திருமணங்கள் நடப்பதாக கூறப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் குழந்தைத் திருமணத்தின் அளவு கிட்டத்தட்டப் பாதியாகக் குறைவாக உள்ளது.

தமிழ்நாட்டில் 20 முதல் 24 வயதுக்குட்பட்ட பெண்களிடையே குழந்தைத் திருமண விகிதம் 12.8 சதவீதத்திலிருந்து 10.5 சதவீதமாகக் குறைந்துள்ளது. தமிழகத்தில் கிராமப்புறங்களில் குழந்தை திருமணம் விகிதம் 11.5 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் 9.2 சதவீதமாகவும் உள்ளது. மாநிலத்தின் சராசரி அளவை விட 21 மாவட்டங்களில் குழந்தைத் திருமண விகிதம் அதிகமாகப் பதிவாகி உள்ளது. இதில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 20.4 சதவீதமாக உள்ளது. இது தேசிய சராசரியை விட சற்று அதிகமாகும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: நவம்பர் 26.. அரசியல் சாசனத்தை எரித்த பெரியார்.. காரணம் என்ன? நாட்டையே உலுக்கிய வரலாறு

குழந்தை திருமணங்களை தடுக்காத அதிகாரிகள்

தமிழகத்தில் குழந்தைத் திருமணங்கள் தேசிய சராசரியை விட கிட்டதட்ட பாதியாக குறைந்திருந்தாலும், கடந்த 5 ஆண்டுகளில் அதிகாரிகளிடம் புகார்கள் அளிக்கப்பட்ட பிறகும், சுமார் 40 சதவீதம் குழந்தை திருமணங்களை நடந்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.

குழந்தைகள் உரிமைச் செயற்பாட்டாளரும் வழக்கறிஞருமான எஸ். பிரபாகர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் கேட்ட கேள்விக்குப் பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி,  மே 7, 2021 முதல் மே 7, 2026 வரையிலான காலக்கட்டத்தில் தமிழகத்தில் 16,855 குழந்தை திருமண புகார்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றில் 10,017 திருமணங்கள் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், 6,838 திருமணங்கள் (40%) புகார்களையும் மீறி நடத்தப்பட்டுள்ளன. இவ்வாறு,

  • புகார்கள் வந்தும் தடுக்க முடியாமல் நடந்த 6,838 குழந்தை திருமணங்களில் நாமக்கல் மாவட்டம் 512 திருமணங்களுடன் (7.5%) மாநிலத்திலேயே முதலிடத்தில் உள்ளது.  
  • அடுத்து, ஈரோடு மாவட்டத்தி புகார்கள் வந்தும், ஈரோட்டில் 427 குழந்தை திருமணங்கள் நடந்துள்ளன.
  • கோவையில் புகார்கள் வந்தும் 365 குழந்தை திருமணங்கள் நடந்துள்ளன.
  • திருச்சியில் புகார்கள் வந்தும் 359 குழந்தை திருமணங்கள் நடந்துள்ளன.
  • புகார்களையும் மீறி தமிழ்நாட்டில் நடந்த மொத்த குழந்தைத் திருமணங்களில், இந்த ஐந்து மாவட்டங்களில் மட்டும் 29.1 சதவீதத் திருமணங்கள் நிகழ்ந்துள்ளன.
  • பெரம்பலூரில் புகார்கள் வந்தும் 327 குழந்தை திருமணங்கள் நடந்துள்ளன.

தலைநகரில் எத்தனை குழந்தைகள் திருமணங்கள்?

புகார் அளிக்கப்பட்ட குழந்தைத் திருமணங்களைத் தடுத்து நிறுத்துவதில் புதுக்கோட்டை (84.5%) மற்றும் கிருஷ்ணகிரி (82.6%) ஆகிய மாவட்டங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளன. ஆனால், நாமக்கல் நாமக்கல் (36%), ஈரோடு (37.1%), பெரம்பலூர் (37.6%) மற்றும் கோயம்புத்தூர் (42.2%) ஆகிய மாவட்டங்களில் குழந்தை திருமணங்களை தடுக்கும் விகிதம் மிகவும் குறைவாகவே உள்ளன.  

வடசென்னை மற்றும் தென்சென்னை ஆகிய இரு பிரிவுகளையும் சேர்த்து மொத்தம் 308 புகார்கள் பதிவான நிலையில், அவற்றில் வெறும் 83 திருமணங்கள் மட்டுமே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன; இது சுமார் 27 சதவீதம் மட்டுமே. மாநிலத்திலேயே அதிகபட்சமாக 964 புகார்கள் பதிவான திண்டுக்கல் மாவட்டத்தில், 713 திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, தடுப்பு விகிதம் சுமார் 74 சதவீதமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஜாக்பாட்: டிசம்பர் 1 முதல் 8 மணி நேர வேலை, வார விடுமுறை Explained

தீர்வு என்ன?

2030-ஆம் ஆண்டிற்குள் குழந்தைத் திருமணத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற மாநில அரசின் இலக்கிற்குத் தடையாக இருக்கும் நடைமுறைச் சிக்கல்களை இந்தத் தரவுகள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. குறிப்பாக, அரசுத் துறைகளுக்கு இடையே போதிய ஒருங்கிணைப்பு இல்லாததும், இதற்கெனப் பிரத்யேகப் பணியாளர்கள் பற்றாக்குறையும் முக்கிய காரணிகளாக உள்ளன.

2030-ஆம் ஆண்டிற்குள் குழந்தைத் திருமணத்தை முற்றிலும் ஒழிக்கும் இலக்கை அடைய, இதற்கெனப் பிரத்யேகக் குழந்தைத் திருமணத் தடை அதிகாரிகளை (CMPO) நியமிக்க வேண்டும் என்றும், உள்ளூர் அளவிலான கண்காணிப்பை வலுப்படுத்த வேண்டும் என்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், 2009-ஆம் ஆண்டின் தமிழ்நாடு குழந்தைத் திருமணத் தடை விதிகளில் திருத்தம் கொண்டு வர வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குழந்தைத் திருமணங்கள் அதிகம் நடைபெறும் மாவட்டங்களில், பள்ளி இடைநிற்றல், முறையாகப் பள்ளிக்குச் செல்லாமை மற்றும் சமூக-பொருளாதாரப் பிரச்சினைகளால் வளரிளம் பெண்கள் பாதிக்கப்படும் கிராமங்கள் மற்றும் சமூகங்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழந்தைகள் உரிமைச் செயற்பாட்டாளர் ஆ. தேவநேயன் வலியுறுத்தியுள்ளார்.

இதற்காக தென்மாநிலங்களிலேயே தமிகத்தில் வெறும் 149 அதிகாரிகள் பணியில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.  இதற்கிடையே, குழந்தைத் திருமணங்களைத் தடுக்க கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழுக்களை வலுப்படுத்தவும், பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைத் தீவிரப்படுத்தவும், கள அளவிலான கண்காணிப்பை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளதாகத் துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க: முதலீட்டாளர்கள் மாநாடு: குமரி முதல் கொங்கு வரை புதிய தொழிற்சாலைகள்.. 66000 பேருக்கு வேலை
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Explainer