தமிழ் திரையுலகின் முக்கிய இசையமைப்பாளராக இருக்கும் அனிருத், தற்போது தன்னுடைய நீண்ட நாள் காதலியான காவ்யா மாறனை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இதையடுத்து இவர்களின் திருமண அழைப்பிதழ் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.
பிரபல தொழிலதிபரான காவ்யா மாறனும், இசையமைப்பாளர் அனிருத்தும் திருமணம் செய்து கொள்ள இருக்கின்றனர். திருமண கிரீஸில் நடப்பதோடு, திருமண வரவேற்பு சென்னையில் நடக்கிறது. இதையடுத்து, இவர்களின் திருமண வரவேற்பு தற்போது வைரலாகி வருகிறது.
1/5
அனிருத் காவ்யா மாறன்
கோலிவுட்டில் தமிழ் படங்களை தாண்டி தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் இசையமைத்து ராக் ஸ்டாராக திகழ்கிறார் அனிருத். இவருக்கும், பெரும் தொழிலதிபராக விளங்கும் காவ்யா மாறனுக்கும் திருமணம் ஆக இருக்கிறது.
2/5
திருமண நாள்
காவ்யா-அனிருத் திருமணம், வரும் நவம்பர் 11ஆம் தேதி கிரீஸில் நடக்கிறது. இதில் அவர்களின் குறிப்பிட்ட குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொள்ள இருக்கின்றனர். இதையடுத்து நவம்பர் 21 அன்று சென்னையில் திருமண வரவேற்பு நடக்க இருக்கிறது.
3/5
அனிருத் காவ்யா திருமண விருந்தினர்கள்
அனிருத்-காவ்யா மாறன் திருமண அழைப்பிதழ்கள் தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் முதல், பிரதமர் நரேந்திர மோடி வரை பல்வேறு அரசியல் பிரபலங்களுக்கும், திரை பிரபலங்களுக்கும் தரப்பட்டுள்ளது. இதில் அவர்கள் அனைவரும் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
4/5
அனிருத் அழைப்பிதழ் வைரல்
அனிருத்-காவ்யா திருமணத்தின் அழைப்பிதழ் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. திருமண அழைப்பிதழே ஒரு வித பெட்டி போல, மூடி திறக்கும் வகையில் உள்ளது. இதன் விலை குறித்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.
5/5
அழைப்பிதழின் விலை
ஒரு திருமண அழைப்பிதழின் விலை, சுமார் ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை இருக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.