Trichy Anna Medal Application : வீரதீரச் செயல் புரிந்தவர்களுக்கு அண்ணா பதக்கம் பெற விண்ணப்பிக்கலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Trichy Anna Medal Application : வீரதீரச் செயல் புரிந்தவர்களுக்கு அண்ணா பதக்கத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
1/5
அண்ணா பதக்கம் அறிவிப்பு
அண்ணா பதக்கம் அறிவிப்பு - திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பொதுமக்களின் உயிர் மற்றும் உடைமைகளைத் தன் உயிரைப் பொருட்படுத்தாது வீரதீரத்துடன் காப்பாற்றியவர்களுக்குத் தமிழ்நாடு அரசின் 'அண்ணா பதக்கம்' வழங்கப்படவுள்ளது. 2027-ஆம் ஆண்டு குடியரசு தின விழாவின்போது முதலமைச்சர் அவர்களால் இந்த உயரிய விருது வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீக் தாயல் தெரிவித்துள்ளார்.
2/5
யார் விண்ணப்பிக்கலாம்?
யார் விண்ணப்பிக்கலாம்? - ஆபத்தான சூழ்நிலைகளில் பிறரின் உயிர் மற்றும் உடைமையைப் பாதுகாக்க முன்வந்து துணிச்சலான வீரதீரச் செயல் புரிந்த பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அனைவரும் இந்த அண்ணா பதக்கத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் ஆவர்.
3/5
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை - இப்பதக்கத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள், தாங்கள் மேற்கொண்ட வீரதீரச் செயல் தொடர்பான முழு விவரங்களை http://awards.tn.gov.in என்ற தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே ஆன்லைன் மூலமாகப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
4/5
சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்
சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் - விண்ணப்பதாரர்கள் தாங்கள் புரிந்த வீரதீரச் செயலைத் தெளிவாக விவரிக்கும் அறிக்கையைத் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் அதிகபட்சம் 800 வார்த்தைகளுக்கு மிகாமல் தயார் செய்து, உரிய கருத்துருவினைச் சமர்ப்பிக்க வேண்டும்.
5/5
கடைசி தேதி மற்றும் முகவரி
கடைசி தேதி மற்றும் முகவரி - ஆன்லைன் பதிவிற்குப் பிறகு, தயார் செய்யப்பட்ட கருத்துருவினை வரும் 08.12.2026-க்குள் "மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், திருச்சிராப்பள்ளி மாவட்டம்" என்ற முகவரியில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்