Annan Seer Scheme Latest Update : அண்ணன் சீர் திட்டத்தில் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 8 கிராம் தங்க நாணயம் வழங்க டெண்டர் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Annan Seer Scheme Latest Update : அண்ணன் சீர் திட்டத்தில் 8 கிராம் தங்க நாணயம், பட்டுப் புடவைகள் கொள்முதலுக்கு டெண்டர் கோரியது சமூக நலத்துறை. இது குறித்த முழு விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
1/6
‘அண்ணன் சீர்’ திட்டம்
தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறை இயக்ககம் சார்பில் செயல்படுத்தப்படும் ‘அண்ணன் சீர்’ திட்டத்தின் (Annan Seer Scheme) கீழ், பயனாளிகளுக்கு வழங்குவதற்காக 8 கிராம் தங்க நாணயங்கள் மற்றும் பட்டுப் புடவைகளைக் கொள்முதல் செய்வதற்கான அதிகாரப்பூர்வ ஒப்பந்தப்புள்ளி (Tender) அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
2/6
916 ஹால்மார்க் தரச்சான்று
இந்தக் கொள்முதலுக்கான ஒப்பந்தப்புள்ளி நிபந்தனைகளின்படி, விநியோகிக்கப்படும் ஒவ்வொரு தங்க நாணயமும் கட்டாயமாக 8 கிராம் எடையுடனும், 22 காரட் மற்றும் 916 ஹால்மார்க் தரச்சான்று கொண்டதாகவும் இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கொள்முதல் செய்யப்படும் பட்டுப் புடவைகள் அனைத்தும் அங்கீகரிக்கப்பட்ட 'சில்க் மார்க்' மற்றும் 'கைத்தறி மார்க்' ஆகிய இரண்டு தரச் சான்றிதழ்களையும் ஒருங்கே பெற்றிருக்க வேண்டும் என்பது அவசியமாகும்.
3/6
ஆன்லைன் ஒப்பந்தப்புள்ளி
தங்க நாணயங்களுக்கான ஆன்லைன் ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பின்படி, ஒப்பந்த ஆவண விற்பனைக் காலம் 04.11.2026 முதல் 04.12.2026 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன் ஏலக் கலந்தாய்வுக் கூட்டம் வரும் 18.11.2026 அன்று காலை 11.00 மணிக்கு நடைபெறவுள்ளது. ஒப்பந்தப்புள்ளிகளைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி நேரம் 07.12.2026 அன்று காலை 11.00 மணி வரையாகும்.
4/6
தங்க நாணய டெண்டர் ஆவணக் கட்டணம்
சமர்ப்பிக்கப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள் அதே நாளில் (07.12.2026) நண்பகல் 12.00 மணிக்குத் திறக்கப்படும். தங்க நாணய டெண்டர் ஆவணக் கட்டணம் ரூ.5,725 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பட்டுப் புடவைகளுக்கான ஒப்பந்தப்புள்ளியைப் பொறுத்தவரை, ஆவண விற்பனைக் காலம் 04.11.2026 முதல் 07.12.2026 வரை செயல்பாட்டில் இருக்கும். இதற்கான முன் ஏலக் கலந்தாய்வுக் கூட்டம் 19.11.2026 அன்று காலை 11.00 மணிக்கு நடைபெறும்.
5/6
டெண்டர் ஆவணக் கட்டணம்
ஒப்பந்தப்புள்ளிகளைச் சமர்ப்பிக்க 08.12.2026 அன்று காலை 11.00 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதுடன், அன்றைய தினமே நண்பகல் 12.00 மணிக்கு ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்படும். இங்கும் டெண்டர் ஆவணக் கட்டணம் ரூ.5,725 ஆகும். ஒப்பந்தப்புள்ளி நடைமுறைகள் அனைத்தும் முறையாக நிறைவடைந்த பின்னர், நடப்பு டிசம்பர் மாத இறுதிக்குள் இதற்கான கொள்முதல் உத்தரவுகள் இறுதி செய்யப்பட்டு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
6/6
சமூக நலத்துறை வலைதளம்
இது தொடர்பான கூடுதல் தகவல்களையும் வழிகாட்டுதல்களையும் பெற www.tntenders.gov.in என்ற தமிழ்நாடு அரசின் டெண்டர் இணையதளம் மற்றும் www.tnsocialwelfare.tn.gov.in என்ற சமூக நலத்துறை வலைதளத்தைப் பார்வையிடலாம் எனச் சமூக நலத்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.