• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /சினிமா
  • /வீடின்றி தவிக்கும் ‘கோஸ்ட் ரைடர்’ புகழ் நடிகர் நிக்கோலஸ்! என்ன ஆச்சு? இதோ முழு விவரம்..

வீடின்றி தவிக்கும் ‘கோஸ்ட் ரைடர்’ புகழ் நடிகர் நிக்கோலஸ்! என்ன ஆச்சு? இதோ முழு விவரம்..

’கோஸ்ட் ரைடர்’ திரைப்படம் மூலம் உலகப்புகழ் பெற்ற நடிகராக இருக்கிறார், நிக்கோலஸ் கேஜ். இவர், தன்னுடைய 10.5 மில்லியன் மாளிகை வீட்டை விற்ற பிறகு நடுத்தெருவில் இருப்பதாக கூறியிருக்கிறார். இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written ByYuvashree M
Published: Nov 04, 2026, 11:06 AM IST|Updated: Nov 04, 2026, 11:41 AM IST
joinshare
வீடின்றி தவிக்கும் ‘கோஸ்ட் ரைடர்’ புகழ் நடிகர் நிக்கோலஸ்! என்ன ஆச்சு? இதோ முழு விவரம்..
Image Credit: Nicholas Cage Homeless | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
அமெரிக்க தேர்தல் முடிவுகள் 2026: செனட், ஹவுஸ், ஆளுநர் போட்டிகளில் வென்றவர்களின் முழு பட்டியல்

அமெரிக்க தேர்தல் முடிவுகள் 2026: செனட், ஹவுஸ், ஆளுநர் போட்டிகளில் வென்றவர்களின் முழு பட்டியல்

2

சிறு வணிகங்களுக்கு RBI பரிசு: சேவை ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கான FOREX விதிகளில் தளர்வு

3

வீடின்றி தவிக்கும் ‘கோஸ்ட் ரைடர்’ புகழ் நடிகர் நிக்கோலஸ்! என்ன ஆச்சு? இதோ முழு விவரம்..

4

Explainer: அமெரிக்க இடைக்காலத் தேர்தல் - இந்திய வம்சாவளி வேட்பாளர்களின் வெற்றி, தோல்வி நிலை என்ன?

5

அமெரிக்கா இடைக்காலத் தேர்தல்: டிரம்புக்கு ஷாக் கொடுத்த ஜனநாயக கட்சி.. கைமாறும் செனட் சபை.. ஏன் முக்கியம்?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

ஹாலிவுட்டில், புகழ்பெற்ற நடிகராக விளங்குகிறார், நிக்கோலஸ் கேஜ். இந்திய ரசிகர்களுக்கு இவரை பெரும்பாலும் ‘கோஸ்ட் ரைடர்’ திரைப்படம் மூலமாக தெரியும். 62 வயதாகும் இவருக்கு, இப்போது தங்க வீடு இல்லையாம்..என்ன கூறியிருக்கிறார் என்பது குறித்த முழு விவரத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.

ஹாலிவுட் நடிகர் நிக்கோலஸ் கேஜ்:

1990களில் ஆரம்பித்து, இப்போது வரை ஹாலிவுட்டில் நீடிக்கும் நடிகராக இருக்கிறார், நிக்கோலஸ் கேஜ். லீவிங் லாஸ் வேகாஸ் எனும் திரைப்படம் மூலம் தன் சினிமா பயணத்தை தொடங்கிய நிக்கோலஸ், தொடர்ந்து அடாப்ஷன், மூன்ஸ்ரக், ரெட் ராக் வெஸ்ட் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து வந்தார். 2007ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன கோஸ்ட் ரைடர் படம் இவருக்கு உலகளவில் புகழை தேடி தந்தது. அதில் ஹீரோவாக நடித்திருந்த இவர், பகலில் மனிதனாகவும், இரவில் சூப்பர் பவர் கொண்ட சக்திவாய்ந்த உயிராகவும் நடித்திருப்பார்.

இவருக்கும் ‘தி காட்ஃபாதர்’ பட இயக்குநர் ஃப்ரான்ஸிஸ் ஃபோர்ட் கூபோலாவிற்கும் நெருங்கிய உறவுமுறை இருக்கிறது. ஆனால், தான் சினிமாவிற்கு வரும் போது எங்கே தன்னை நெபோ கிட் என்று சொல்லி விடுவார்களோ எனும் காரணத்திற்காக அவர் தன் பெயரை மாற்றி, தனக்கென ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டார்.

மேலும் படிக்க | ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ புதிய 5 போஸ்டர்கள் வெளியீடு! இதில் இருக்கும் க்ளூவை கவனிச்சீங்களா?

வீடில்லாமல் தவிக்கிறாரா?

நிக்கோலஸ் கேஜ், ஹாலோவீன் பண்டிகையை முன்னிட்டு லாஸ் ஏஞ்சலிஸில் நடந்த காமிக் கான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது தன் மகளுடன் வைத்திருக்கும் ஹாலோவின் திட்டங்கள் குறித்தும், தன்னுடைய தற்போதைய நிலைமை குறித்தும் பேசியிருந்தார்.

ரசிகர்களிடையே பேசிய அவர், தான் இப்போதைக்கு வீடு இல்லாமல் இருப்பதாகவும் மாலிபுவில் இருந்த தன்னுடைய  மாளிகை வீட்டில் நடந்த சம்பவத்தால் தற்போது ஹோட்டல்களில் மாறி மாறி தங்கி வருவதாகவும் தெரிவித்தார்.

தன் வீட்டில் எப்போது ஹாலோவின் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டிருப்பதாக கூறிய அவர், இந்த வருடம் அதை மிஸ் செய்வதாகவும், இந்த நடைமுறை தவறியதால் தன்னால் ஹாலோவீனை மகிழ்ச்சியாக கொண்டாட முடியவில்லை என்றும் வருத்தமாக் தெரிவித்துள்ளார்.

மாலிபு மாளிகைக்கு என்ன ஆச்சு?

62 வயதான நிக்கோலஸ் கேஜ், மாலிபுவில் இருக்கும் தன்னுடைய பெரிய மாளிகை போன்ற வீட்டில் வசித்து வந்தார். இவர் வீடு கடற்கரைக்கு அருகே அமைந்திருக்கிறது. இவர் வண்டி நிறுத்தும் இடத்தில் ஒரு பெரிய புதைகுழி ஏற்பட்டுள்ளது. இதனை ஆங்கிலத்தில் sinkhole என்று குறிப்பிடுவர்.

பூமியின் மேற்பரப்பில் உள்ள பாறைகள் அல்லது சுண்ணாம்புக்கற்கள் நிலத்தடி நீரால் கரைக்கப்படும்போதோ அல்லது அடியில் உள்ள பாறை/குகை இடிந்து விழும்போதோ நிலத்தில் ஏற்படும் தாழ்வான பள்ளம் அல்லது துளை ஏற்படும். இதைத்தான் sinkhole என்று குறிப்பிடுவர். இந்த குழி எதனால் ஏற்பட்டது என்பது குறித்த விளக்கம் இன்னும் வெளியாகவில்லை.

அருகில் இருப்பவர்களுக்கும் பாதிப்பு..!

நிக்கோலஸின் வீட்டில் ஏற்பட்ட இந்த குழி, அதனை ஒட்டியுள்ள சாலையிலும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது, அக்கம்பக்கத்தினர் தங்கள் வீட்டிற்கு செல்லும் சாலையை சேதப்படுத்தியதோடு, அப்பகுதி மக்களின் பாதுகாப்பையும் கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது.

எப்போது ஏற்பட்டது?

இந்த குழி, இந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் ஏற்பட்டுள்ளது. தெற்கு கலிஃபோர்னியாவின் கடல் சார்ந்த மாற்றங்களுக்கு பிறகு, இந்த புதைகுழி ஏற்பட்டதாக தெரிகிறது. மண் அரிப்பு, அதிக மழை மற்றும் அளவுக்கு அதிகமான அலை-கடல் சீற்றம் உள்ளிட்டவை காரணமாகவும் இது ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

விலை என்ன?

நிக்கோலஸ் கேஜ், இந்த வீட்டை 2024ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 10.5 மில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.88.58 கோடி மதிப்பில் வாங்கியிருக்கிறார். இவ்வீட்டில் பீச் வியூ, வீட்டிற்குள் லிஃப்ட் உள்ளிட்ட ஏராளமான வசதிகள் இருக்கும் என்று கூறப்படுகிறது.

செப்டமர் 8ஆம் தேதி இந்த வீட்டில் புதைக்குழி (Sinkhole) உருவானதால், நிக்கோலஸால் இந்த வீட்டில் தங்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. தகவல்களின் படி இந்த குழி 25 அடி ஆழம் இருக்கும் என்றும் 30-60 அங்குலம் அகலமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதனால் ட்ரைவ்வே எனப்படும் வண்டி போகும் இடம் அப்படியே குழிக்குள் மூழ்கியுள்ளது.

மேலும் படிக்க | எக்ஸ்ட்ரா காட்சிகளுடன் ஓடிடிக்கு வரும் ஜெயிலர் 2! எப்போது, எந்த தளத்தில் ரிலீஸ்? விவரம் இங்கே..

Add Zee News as a Preferred Source
TAGS:
Hollywood