• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /அண்ணன் சீர் திட்டம்: இந்த தேதிக்கு முன்னால் திருமணமானவர்கள் விண்ணப்பிக்க முடியாது.. தமிழக அரசு அறிவிப்பு

அண்ணன் சீர் திட்டம்: இந்த தேதிக்கு முன்னால் திருமணமானவர்கள் விண்ணப்பிக்க முடியாது.. தமிழக அரசு அறிவிப்பு

Written ByUmabarkavi K
Published: Nov 17, 2026, 16:57 IST|Updated: Nov 17, 2026, 17:08 IST
joinshare
Annan Seer Thittam: அண்ணன் சீர் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இத்திட்டத்திற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியாது? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்பது குறித்த விவரத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Annan Seer Thittam: அண்ணன் சீர் திட்டத்திற்கு 2026 அக்டோபர் 5 முதல் ஜனவரி 15 வரையிலான திருமணங்களுக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 
 

Annan Seer Thittam 1/5

அண்ணன் சீர் திட்டம்

அண்ணன் சீர் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் புதிய அண்ணன் சீர் திட்டம் தொடர்பாக சமூக நல இயக்குனருக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற சில தகுதிகள் உள்ளன. இது தொடர்பாக தமிழக அரசு விவரங்களை வெளியிட்டுள்ளது. மேலும், யாரெல்லாம் இத்திட்டத்தில் பயன்பெற முடியாது என்பதையும் விளக்கியுள்ளது.
Annan Seer Thittam 2/5

அண்ணன் சீர் திட்டத்திற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியாது?

அண்ணன் சீர் திட்டத்திற்கு ரூ.2.5 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ள குடும்பங்கள், வருமான வரி செலுத்தும் குடும்பங்கள், தொழில் வரி செலுத்தும் குடும்பங்கள் இந்த திட்டத்தில் பயன்பெற முடியாது. அதே போல சொந்தமாக நான்கு சக்கர வாகனங்கள் வைத்துள்ள குடும்பங்கள், 10 ஏக்கருக்கு மேல் நன்செய் நிலம் அல்லது 25 ஏக்கருக்கு மேல் புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்கள், வீட்டு உபயோகத்திற்கு ஆண்டுக்கு 3,600 யூனிட்டிற்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் (ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் தவிர்த்து) அண்ணன் சீர் திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Annan Seer Thittam 3/5

அண்ணன் சீர் திட்டம் குறித்து முக்கிய அறிவிப்பு

மேலும், அரசு துறைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் / ஓய்வூதியதாரர்கள், ஆண்டுக்கு ரூ.50 இலட்சத்திற்கும் மேல் விற்பனை செய்து சரக்கு மற்றும் சேவை வரி செலுத்துபவர்கள் ஆகியோரின் குடும்ப உறுப்பினர்கள் இத்திட்டத்தில் பயன்பெற முடியாது. அதோடு, பிற துறைகள் / வாரியங்கள் மூலம் செயல்படுத்தப்படும் வேறு ஏதேனும் திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் பயன்களைப் பெற்றவர்கள் இத்திட்டத்தில் பயன்பெற இயலாது.
Annan Seer Thittam 4/5

அண்ணன் சீர் திட்டத்தில் எந்த தேதியில் திருமணம் செய்தவர்கள் விண்ணப்பிக்கலாம்?

மேலும், அண்ணா சீர் திட்டம் 5.10.2026 முதல் நடைபெறும் திருமணங்களுக்கு பொருந்தும் என்பதால், 5.10.2026 முதல் 15.01.2027 வரை நடைபெறும் திருமணங்களுக்கு இத்திட்டத்தின் கீழ் பயன்பெற 15.01.2027 வரை விண்ணப்பிக்க சமர்ப்பிக்க கால அவகாசம் வழங்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டையில் மணப்பெண்ணின் பெயர் இடம்பெறாதவர்கள் விண்ணப்பிக்க முடியாது. திருமணத்திற்கான மணமக்கள் குறைந்தபட்சம் சட்டபூர்வ வயதை நிறைவு செய்யாதவர்கள் விண்ணப்பிக்க முடியாது.
Annan Seer Thittam 5/5

அண்ணன் சீர் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?

விண்ணப்பதாரர்கள் அரசு இ சேவை மையம் மூலமாகவோ அல்லது tnesevai.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாகவோ விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க திருமண சான்றிதழ், ஆதார் கார்டு, பான் கார்டு, குடும்ப அட்டை, முகவரி சான்று உள்ளிட்டவற்றை சமர்ப்பித்து விண்ணப்பிக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
TAGS:
TN Govt Schemes

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
பேரூராட்சி ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு! கட்டாய இடமாற்றம் குறித்த புதிய விதிமுறைகள் Explained

பேரூராட்சி ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு! கட்டாய இடமாற்றம் குறித்த புதிய விதிமுறைகள் Explained

2

Explained: பிஸ்லெரி தண்ணீரில் ஆபத்து.. கேன்சரை ஏற்படுத்தும் ரசாயனம்.. FSSAI ஆய்வில் அதிர்ச்சி!

3

அனிருத்-காவ்யா திருமணத்திற்கு ஆன செலவு என்ன தெரியுமா? பிரம்மாண்ட படமே எடுக்கலாம்..

4

கேரளாவில் பறவைக் காய்ச்சல் எதிரொலி: தமிழக எல்லையில் தீவிர கண்காணிப்பு

5

சென்னைக்கு அலர்ட்! இன்று முதல் விடாமல் கொட்டப்போகும் கனமழை.. வெதர்மேன் அப்டேட்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.