Annapoorani Super Six Gas Cylinder Scheme: தவெக அரசின் ஆண்டுக்கு மூன்று இலவச கேஸ் சிலிண்டர் வழங்கும் திட்டத்தில் பயனாளிகளை தேர்வு செய்யும் பணி விரைவில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இத்திட்டத்தில் 1.30 கோடி குடும்பங்கள் வரை பயன்பெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.
Annapoorani Super Six Gas Cylinder Scheme: இலவச கேஸ் சிலிண்டர் திட்டத்தில் பயனாளிகள் எப்படி தேர்வு செய்யப்படுகிறார்கள்? யாருக்கெல்லாம் கிடைக்கும்? என்பது குறித்த முக்கிய விவரங்கள் வெளியாகியிருக்கிறது.
1/5
அன்னபூரணி சூப்பர் 6 திட்டம்
தவெக ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அன்னபூரணி சூப்பர் 6 திட்டத்தில் ஆண்டுக்கு 6 சமையல் கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் முதற்கட்டமாக ஆண்டுக்கு மூன்று சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என சட்டசபையில் முதல்வர் விஜய் அறிவித்து இருந்தார். 2027 பொங்கல் பண்டிகை முதல் இத்திட்டம் அமல்படுத்தப்படும் என முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்தார்.
2/5
ஆண்டுக்கு 3 இலவச கேஸ் சிலிண்டர்
அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தில் சிலிண்டருக்கான தொகை பயனாளிகள் வாங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் எனவும் ஒரு கோடியே 30 லட்சம் குடும்பங்கள் பயன்பெறுவார்கள் என்றும் தெரிவித்தார். இந்த திட்டத்தில் பயனாளிகள் எப்படி தேர்வு செய்யப்படுகிறார்கள் என்பது குறித்து முக்கிய விவரங்கள் வெளியாகி உள்ளது. விரைவில் இது தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
3/5
இலவச கேஸ் சிலிண்டர் திட்டத்தில் பயனாளிகள் தேர்வு செய்வது எப்படி?
அதன்படி பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெறுவோர், மகளிர் உரிமைத்தொகை ரூபாய் 1000 பெறுவோர், ஆண்டு வருமானம் 2.50 லட்சம் ரூபாய் வரை உள்ள குடும்பத்தினரின் விவரங்கள் அடிப்படையில் இலவச கேஸ் சிலிண்டர் திட்டத்திற்கான பயனாளிகள் பட்டியலை தமிழக அரசு தயாரித்து வருகிறது.
4/5
1.30 கோடி குடும்பங்கள் பயனடைய வாய்ப்பு
தமிழகத்தில் தற்போது 2.40 கோடி வீட்டு சமையல் கேஸ் இணைப்புகள் உள்ளன. ஒரு சிலிண்டர் இணைப்பு பெற்றவர்களின் எண்ணிக்கை 1.10 கோடி. அதில் 42 லட்சம் இணைப்புகள் பிரதமரின் உஜ்வாலா திட்ட பயனாளிகள் ஆவர். இதன் மூலம் அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தில் ஒரு கோடி 30 லட்சம் குடும்பங்கள் பயனடைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
5/5
விரைவில் அறிவிப்பை வெளியிடும் தமிழக அரசு
ஏற்கனவே உள்ள திட்டங்களில் பயன் பெறுவோர் அடிப்படையில் இலவச கேஸ் சிலிண்டர் திட்டத்திற்கு பயனாளிகளை அடையாளம் காணும் பணி நடக்கிறது என்றும் ஆனாலும் அனைத்து குடும்பத்தினரிடமும் விண்ணப்பங்களை பெற்று அதன் அடிப்படையில் பயனாளிகளை தேர்வு செய்ய வாய்ப்புள்ளது என தமிழக அரசு அதிகாரிகள் கூறுகின்றனர். சூப்பர் 6 கேஸ் சிலிண்டர் திட்டம் 2021 ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு துவங்கப்பட உள்ள நிலையில், விரைவில் இது தொடர்பான முக்கிய அறிவிப்புகளை தமிழக அரசு விரைவில் வெளியிட வாய்ப்புள்ளது.