• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /உதவி இயக்குநர் டூ நடிகர்.. தமிழ் சினிமாவில் கலக்கும் 5 ஹீரோக்கள்!

உதவி இயக்குநர் டூ நடிகர்.. தமிழ் சினிமாவில் கலக்கும் 5 ஹீரோக்கள்!

Reported ByR BalajiEdited ByR Balaji
Published: Aug 09, 2026, 10:26 AM IST|Updated: Aug 09, 2026, 10:33 AM IST
joinshare

திரைத்துறையில் கேமராவுக்குப் பின்னால் இயங்கி, அதாவது இயக்குநராகவோ, உதவி இயக்குநராகவோ இருந்து பின்னர் கேமராவுக்கு முன்னால் தங்களது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த தமிழ் சினிமா நட்சத்திரங்கள் பலர் உண்டு. அந்த வகையில், தொடக்கத்தில் உதவி இயக்குநர்களாக பணியாற்றி, அதன்பின் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக உருவெடுத்த சில கலைஞர்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.
 

Karthi1/5

கார்த்தி

'பருத்திவீரன்' திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி, முதல் படத்திலேயே மாபெரும் வெற்றி கண்டவர் கார்த்தி. இன்று தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கும் இவர், நடிப்பில் களமிறங்குவதற்கு முன்பு மணிரத்னத்தின் 'ஆயுத எழுத்து' படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றி சினிமா நுட்பங்களைக் கற்றுக்கொண்டார்.
Ravi Mohan2/5

ஜெயம் ரவி

தனது அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான 'ஜெயம்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் ஜெயம் ரவி. திரையில் தோன்றுவதற்கு முன்பே, கமல்ஹாசன் நடித்த 'ஆளவந்தான்' திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றி திரைப்பட உருவாக்கத்தை கற்றுக்கொண்டார்.
Siddharth3/5

சித்தார்த்

ஷங்கர் இயக்கத்தில் வெளியான 'பாய்ஸ்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான சித்தார்த், அதற்கு முன்பே மணிரத்னத்தின் 'கன்னத்தில் முத்தமிட்டால்' திரைப்படத்தில் உதவி இயக்குநராக செயல்பட்டார். இன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி எனப் பல மொழிகளில் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.
Sasi Kumar4/5

சசி குமார்

'சுப்பிரமணியபுரம்' என்ற ஒரே படத்தின் மூலம் இயக்கம் மற்றும் நடிப்பு இரண்டிலும் முத்திரை பதித்தவர் சசி குமார். ஆனால், இவர் திரையுலகில் தனது முதல் பயணமாக உதவி இயக்குநராகவே தொடங்கினார். இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் வெளியான 'சேது' திரைப்படத்தில் சசி குமார் உதவி இயக்குநராக இருந்தார்.
Vishal5/5

விஷால்

'செல்லமே' படத்தின் மூலம் கதாநாயகனாக திரையுலகில் நுழைந்து, தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் விஷால். இவர் முதன்முதலில் அர்ஜுன் இயக்கிய 'வேதம்' திரைப்படத்தில் உதவி இயக்குநராகவே தனது திரைப்பயணத்தை தொடங்கினார்.
TAGS:
Tamil Cinema

Trending

  • News
  • Photos
  • Videos
8வது ஊதியக் குழு: ஓய்வூதியதாரர்களுக்கு இனி 11 ஆண்டுகளிலேயே முழு பென்ஷன்? விதிகளில் மாற்றம்!

8வது ஊதியக் குழு: ஓய்வூதியதாரர்களுக்கு இனி 11 ஆண்டுகளிலேயே முழு பென்ஷன்? விதிகளில் மாற்றம்!

2

IND அணியில் புவனேஷ்வர் குமார் ரீ-என்ட்ரி.. முகமது ஷமிக்கு வாய்ப்பு கிடைக்குமா? Explainer

3

இடைத்தேர்தல் முடிவுகள்: தாராபுரம், மதுராந்தகம் உள்ளிட்ட 6 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

4

மதுராந்தகம், தாராபுரம் யார் வசம்? இன்று இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை BIG RESULT

5

அதிமுகவில் இருந்து தவெக-வுக்கு தாவிய 6 எம்.எல்.ஏ-க்கள் வழக்கு.. இன்று முக்கிய தீர்ப்பு

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.